டெங்கு ஒழிப்புக்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாக உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார். எதிர்வரும் பருவகால மழைவீழ்ச்சியின் போது டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர் எனவும் அங்குள்ள சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினருடன் இணைந்து கழிவுகளை அகற்றும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் ஆனந்த விஜேவிக்ரம […]

அலட்சியத்தால் மூன்று உயிர்கள் பலி

03 பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். ரிதிமாலியர்த, தம்பகல்ல மற்றும் மிரியான பகுதிகளிலேயே மேற்படி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் பற்றிய தகவல்

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ளமையினால் குறுகிய கால மற்றும் இடைக்கால திட்டமிடல்களை அறிமுகப்படுத்த ஜனாதிபதி நடவடிக்க எடுத்துள்ளார் என  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான கொரடாவுமான பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார். அதன் கீழ் எட்டு விசேட் திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க 2000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தொடர்பிலான ஒப்பந்தம் சீனாவுடன் கைசாத்திடப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த […]

எதிர்கால அபிவிருத்தி எப்படிபட்டது தெரியுமா?

நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளை தேசிய பௌதீக திட்டத்திற்கு அமைய செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த தேசிய பௌதீக திட்டம் தொடர்பான வரைவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார். தேசிய பௌதீக திட்டத்திற்கு அமைய நாட்டில் நெடுஞ்சாலைகள் உட்பட பல அடிப்படை அபிவிருத்தி […]

ஐ.நா முழு ஒத்துழைப்பு…

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெறுகின்ற “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டாரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு […]

அமெரிக்காவின் ஆதரவு…

அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன், இலங்கையின் கடனாளிகள் தமது கடனை உரிய காலத்தில் மறுசீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில், இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியமை மற்றும் இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் வலுவான உள்ளுர் உரிமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை முறையாகவும் திறமையாகவும் கையாள வேண்டும்

நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை முறையாகவும் திறமையாகவும் கையாள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரான்சின் பெரிஸில் ஆரம்பமான புதிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டுடன் இணைந்து இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நடுத்தர வருமான நாடுகள் எதிர்நோக்கும் கடன் மறுசீரமைப்பு போன்ற சவால்களை முறையான மற்றும் வினைத்திறனுடன் கையாள வேண்டிய தேவை இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கையில் கடன் […]

அமரர்.முத்து சிவலிங்கம் பலமாக இருந்தார் – ஜீவன்

” இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பலமாக இருப்பதற்கு அமரர். முத்து சிவலிங்கமும் பிரதான தூணாக இருந்தார். அவர் பதவிகளுக்காக ஆசைப்பட்ட நபர் கிடையாது. அவர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் மலையகம் எப்படி இருக்க வேண்டும் என்ற அவரின் சிந்தனைகளுக்கு நிச்சயம் நாம் உயிர்கொடுப்போம்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23)நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அமரர். முத்து சிவலிங்கத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் […]

ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டன், செனன் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இன்று (23) போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் 15 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செனன் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் எனவும், பாடசாலையின் கல்வி பெறுபேறுகள் தற்போது சிறந்த மட்டத்தில் இருப்பதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர். “இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள 15 ஆசிரியர்களில் […]

மலையக ரயில் சேவை வழமைக்கு

கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க் கொள்கலனொன்று ஒன்று 23.06.2023 காலை தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், 23.06.2023 அன்று மதியம் 2 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையக புகையிரத சேவை வழமைக்கு மாறியுள்ளதாக நானுஓயா ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தலவாக்கலை மற்றும் வட்டகொட ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் 118 ¼ மைல் பகுதியிலேயே இவ்வாறு தடம் புரண்டிருந்தமை குறிப்பிடதக்கது. (க.கிஷாந்தன்)