பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறையுமா?

உள்நாட்டு கோதுமை மா நிறுவனங்கள் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்குமாயின் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை 10 ரூபாவினால் விரைவில் குறைக்க வேண்டும். எவ்வாறாயினும், பேக்கரி பொருட்களுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலைகள் குறைவடையாத காரணத்தினால், தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைப்பது சிக்கலாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன  தெரிவித்தார். இதேவேளை, […]

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு

இந்திய கடற்படைக்கு சொந்தமான புத்தம் புதிய நீர்மூழ்கி கப்பல் நாளை (19) இலங்கைக்கு வரவுள்ளது. 9வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில், செயல்பாட்டு பயணமாக நாட்டிற்கு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ‘வாகீர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நாட்டில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்திய நீர்மூழ்கிக் கப்பற்படையின் தளபதி மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்றும் […]

ஜீவன் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய உறுதி

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்களின் நலன் கருதி, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அட்டன் பிரதேசத்தில் “ஊடக மையம்” ஒன்றை அமைத்துக் கொடுக்கப்படும் என இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு கொட்டகலை ஹில்கூல் விருதகத்தின் சனிக்கிழமை (17) இடம்பெற்றது. நுவரெலியா ஊடகவியலாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் நாணயக்கார தலைமையில் அமைச்சருக்கு நினைவுப் பரிசு ஒன்றும் கையளிக்கப்பட்டது. சுமார் 40 பேர் கலந்து கொண்ட இச் சந்திப்பில் அமைச்சர் […]

ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு

ஐந்தாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு நேற்றும்(17) இன்றும் (18) ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் பசிந்து குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 131 பேர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர். அமர்வுகளின் போது […]

“தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048”

“தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” இனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் மேற்படி வரைவு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அதன் கீழான ஏனைய நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் பலதரப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை உள்ளடக்கியதாக “தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” […]

தாலிக்கு பொன்னுருக்கல் மண்டபம்

கொழும்பு செட்டியார்தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ் மூலமாக முதற்தடவையாக தாலிக்கு பொன் உருக்கும் புனித இடமொன்று பழமுத்து முத்துக்கருப்பன் தங்க நகைமாளிகையில் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஆண் பெண் பெயர்களை தலை ஓலையொன்றில் எழுதி அதை ஒரு மஞ்சள் கயிற்றினால் சுருட்டி பெண்கள் கழுத்தில் கட்டி வந்தனர். பின்னாளில் அது தாலி என அழைக்கப்பட்டது. இவ்வாறான பழக்கத்தில் ஆரம்பித்த தாலியை செய்யும் போது சரியான […]

மண் மேடு சரிந்து விழுந்து இருவர் பலி

மண் மேடு சரிந்து விழுந்ததில் இருவர் புதையுண்டுள்ளனர். நுவரெலியா வெடமன் வீதி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமொன்றுக்கு அருகில் சுவரைத் தயார்படுத்தும் போது, ​​அங்கு வேலை செய்து கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் இடிந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 23 மற்றும் 43 வயதுடைய பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

டிப்ளோமாதாரிகள் 7342 பேருக்கு ஆசிரியர் நியமனம்

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா,ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார். அலரி மாளிகையில் இன்று (16) இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி […]

ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதியின் புனரமைப்பு குறித்து முடிவு (PHOTOS)

ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதியின் (Low level Road) புனரமைப்புப் பணிகளை 03 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த செயற்திட்டத்தின் தாமதத்திற்கு காரணமான விடயங்கள் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து, எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்த ஜனாதிபதி, திட்டப் பணிகள் பாதிக்கப்படுவதற்கு மக்களின் பிரச்சினைகள் காரணமாக அமைந்திருந்தால், அவற்றுக்குத் தீர்வு காண முன் வருமாறு அப்பகுதி அரசியல் பிரமுகர்களுக்கு அறிவுறுத்தினார். இன்று (16) முற்பகல் […]

விபத்தில் தாயும் மகளும் பலி

வவுனியா – கன்னாட்டி பகுதியில் இன்று(16) காலை இடம்பெற்ற விபத்தில் தாயும் அவரது 6 வயதான மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இன்று (16) காலை 7மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் வீட்டிற்கு முன்னால் உள்ள வீதி ஓரத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். இதன்போது வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பா் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நின்ற அவர்கள் மீது […]