தமிழ் பெளத்த வரலாற்றை ஏற்றுக்கொண்டமைக்காக ஜனாதிபதி ரணிலை பாராட்டுகிறேன் – மனோ

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சாவியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,    தமிழரசு கட்சியினருடனான கலந்துரையாடலின் போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி […]

டெங்கு அபாயம்

மட்டக்களப்பு, கண்டி, குருணாகல், புத்தளம், காலி மாவட்டங்களில் மீண்டும் டெங்கு காய்ச்சல் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலையுடன் இந்த நிலைலை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 43346 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 21654 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக […]

மோடியை சந்திப்பதற்கு ஜனாதிபதியுடன் ஜீவன்னும் பயணம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்கின்றார். இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை குழுவினர் பேச்சு நடத்தவுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல். பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. பாரத பிரதமருடனான சந்திப்பின்போது மலையகம் […]

நீர் விநியோகம் தடைப்படும்

பல பிரதேசங்களில்  மணி முதல் அடுத்த நாள் (14) காலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பெலன்வத்தை, கனத்த வீதியில் உள்ள நீா் வௌியேற்றும் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொரக்காபிட்டிய, சித்தமுல்ல, எரவ்வல, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மெதவெல வீதி, பொகுந்தர வீதி […]

மக்கள் விசனம்

மஸ்கெலியா, பிரவுன்சிக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயா ஊடாக 600 லட்சம் ரூபா செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதன்மூலம் மக்களுக்கு உரிய பயன் கிட்டவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீதி புனரமைக்கபடாமல் உள்ளதாலேயே பாலத்தால் பயன் இல்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது. மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதிக்கு வருவதற்கான பிரவுன்சிக், எமலின் தோட்ட வீதி கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனை புனரமைப்பதற்கு பல வருடங்களாகியும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வீதியில் நடந்துசெல்வதற்கு […]

நுவரெலியாவில் மலையக தொழிலாளர் முன்னணியின் கிளைக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது

மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியின் கிளைக்காரியாலயம் நுவரெலியா நகரத்தில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.ராதாகிருஷ்ணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா நகருக்குட்பட்ட மக்கள் தங்கள் பிரச்சனைகளையும் அதேபோல தொழிற்சங்க பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க எவ்வித கட்சி பேதமின்றியும் இக்காரியாலயம் செயற்படுமென ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். இக்கிளைக்காரியாலய திறப்பு விழாவில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், மலையக மக்கள் முன்னணி […]

கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டும்

அன்று, இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (09) பிற்பகல் இடம்பெற்ற “CVCD Excellence Awards” நிகழ்வில் […]

கடனுதவியை பெற இலங்கைக்கு தகுதியுள்ளது – ADB

அவசர அபிவிருத்தி நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படும் சலுகை கடனுதவியைப் பெறுவதற்கு இலங்கைக்கு தகுதியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது. குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் சலுகை உதவிகளை பெற்றுக்கொள்வதன் மூலம், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தல், வறிய மற்றும் பாதிப்பை எதிர்நோக்கக்கூடிய  மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட அவசர அபிவிருத்தி நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இலங்கையின் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் உறுப்பு நாடுகளில், […]

சுற்றுலாத் துறையின் அதிகபட்ச பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும்

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத்துறையின் அதிகபட்ச பங்களிப்பை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் தனித்துவமான சமையல் கலையானது உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளதுடன், அதனை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நேற்று (09) ஆரம்பமான (Culinary Art Food Expo 2023) சமையல் கலை மற்றும் உணவுக் கண்காட்சி 2023″ இன் […]

ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதின

ஜப்பானிய விமான நிலையத்தில் 2 பயணிகள் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானில் ஹனேடா விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானம் விபத்துக்குள்ளானதால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய் ஏர்வேஸ் மற்றும் ஈவிஏ ஏர் நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த விபத்து காரணமாக விமான […]