சர்வதேச ஆசிரியர் தின அன்பளிப்புப் பொருட்களுக்கு தடை விதித்த சாய்ந்தமருது பாடசாலை !

நூருல் ஹுதா உமர் வருடா வருடம் ஒக்டோபர் 6 ஆந் திகதி எமது நாட்டில் ஆசிரியர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றன. இத்தினத்தில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தனியாகவும், குழுக்களாகவும் அன்பளிப்புப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதனால் வகுப்பறைகளில் வறிய மாணவர்கள் பல்வேறு விதமான மன உளைச்சலுக்கும் சவால்களுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் முகங்கொடுக்கின்ற அதேவேளை இன்றைய பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியில் பெற்றோர்களாகிய நீங்களும் பல சங்கடங்களுக்கு உட்படுகின்றீர்கள். எனவே, கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கோ அல்லது அதிபருக்கோ […]

கேரள கஞ்சாவுடன்  பெண் ஒருவர் கைது 

(, வாஸ் கூஞ்ஞ) மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சந்தேகத்தில் கைது இச் சம்பவம் புதன்கிழமை (04) மதியம் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  மன்னார் போதை ஒழிப்புப் பொலிசாருடன் இணைந்து  நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையில் வீடு ஒன்றை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தப்பட்ட போது அவ்வீட்டில் இருந்து […]

புகையிரத ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்! பயணிகள் வேதனையில்

புகையிரத உப ஒழுங்குப்படுத்தல் சேவையாளர்கள் திடீரென ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பால் இன்று புதன்கிழமை (4) மாலை பல புகையிரத சேவைகள் தாமதமடைந்தன. புகையிரத உப ஒழுங்குப்படுத்தல் சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பால்  அலுவலக புகையிரத சேவைகள் உட்பட தபால் புகையிரத சேவை உள்ளடங்களாக 78 புகையிரத சேவைகள் இரத்தாகியுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை மாளிகாவத்தையில் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவருக்கும் புகையிரத பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் போது பிரதி கட்டுப்பாட்டாளர் […]

தரம் உயர்த்தப்பட்ட செந்நெல் கிராம வைத்தியசாலை கோலாகலமாக திறந்து வைப்பு

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சம்மாந்துறை செந்நெல் கிராம ஆரம்ப பராமரிப்பு சுகாதாரப் பிரிவு பிரதேச வைத்தியசாலையாக சுகாதார அமைச்சினால் தரம் உயர்த்தப்பட்டமைக்கமைவாக இவ்வைத்தியசாலையினை உத்தியோகபூர்வவமாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (4) இடம்பெற்றது. வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் சரசி பிரார்த்தனா விஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் பிரதம அதிதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் […]

2023 க.பொ.த உயர் தர பரீட்சை ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பம்

2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையை ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. திருத்தப்பட்ட பரீட்சை நேர அட்டவணை எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்திருந்தும் இதுவரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் ஒன்லைனில் விண்ணப்பிக்க 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, விண்ணப்பதாரர்களுக்கு இம்மாதம் 06 ஆம் திகதி முதல் 10 […]

மஸ்கெலியா பகுதியில் வாகன விபத்து 15 பேர் காயம்

மஸ்கெலியா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஸ்கெலியா – சாமிமலை – மூன்றாம் கட்டை பகுதியில் சிறிய ரக பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 12 பேர் பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாக வாகனம் வீதியை விட்டு விலகி 30 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்த விபத்தில், கெப் வண்டியின் சாரதி, அவருக்குப் பின்னால் […]

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம். : ஹரீஸ், அதாஉல்லா இணைந்து ஆரம்பித்தனர்

நூருல் ஹுதா உமர் அதிகமான கடலரிப்பை சந்தித்துள்ள அம்பாரை மாவட்டம், சாய்ந்தமருது பிரதேச கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் (19/09/2023) அன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சாய்ந்தமருது கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைக்கான ஆரம்ப கட்ட வேலைகள் இன்று செவ்வாய்க்கிழமை (03/10/2023) ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக் அவர்களின் நேறிப்படுத்தலில் கரையோரம் பேணல் திணைக்கள மாகாண பொறியியலாளர் எம். துளசி தாசனின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்களான […]

வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின் சிறுவர் தினம்

நூருல் ஹுதா உமர்  கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.றியாஸா தலைமையில் நடைபெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியா ஆலோசகர்கள், வளவாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் உட்படப் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்வின் விஷேட அம்சமாக ‘சிறுவர் எதிர்காலம்’ எனும் கருப் பொருளில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லுாரி மாணவர்களின் வீதி நாடகமொன்றும் இடம் […]

மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!

  முல்லைத்தீவு நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(03) இரண்டாவது நாளாக தொடர்கிறது. நீதித் துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அதற்கமைய, நேற்று (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் […]

பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு தொழில் தகமை கல்லூரியை ஸ்தாபித்துள்ளது.

(வாஸ் கூஞ்ஞ) பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாக முடியாத மாணவர்கள் சுகாதார அமைச்சினால் நடத்தப்படும் 17 வகையான அடிப்படை தொழில்தகமை கல்லூரிகளில் அலவன்ஸுடன் தாதியம் நிறைவு காண் தொழில் வல்லுனர் மற்றும் துணைமருத்துவ பாடநெறிகளைக் கற்பதுடன் கற்று முடிந்தவுடன் உடனடியாக அரச , தனியார் மருத்துவத் துறைகளில் நல்ல சம்பளத்ததுடன் தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையும் உண்டு என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் உயர் தரத்தில் உயிரியல்இ கணிதத் […]