கல்வி இராஜாங்க அமைச்சரிடம் இருந்து மகிழ்சியான அறிவிப்பு

கல்வியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்பட உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் கல்வி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக எதிர்வரும 16 ஆம் திகதி 2500 பேருக்கும் ஏனையோருக்கு மாகாண ரீதியாகவும் நியமனங்கள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

நாங்க ரெடி நீங்க ரெடியா?…

எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன (SLPP) தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தேர்தலுக்கு நாங்கள் தயார். ஜனாதிபதி தேர்தலுக்கு கூட நாங்கள் தயார்.

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை, கடுமையான குறைபாட்டைக் காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது. குறிப்பாக, இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் […]

ஜனாதிபதி நியமித்துள்ள இரண்டு சிறப்புக் குழுக்கள்

நாட்டிற்குள் கொவிட்-19 பரவல் மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். 2023 ஜூன் மாதம் 22 திகதியிட்ட எண். 23/இதர/026 இன் படி, அமைச்சரவை தீர்மானத்திற்கு ஏற்ப இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அமைச்சர்கள் குழுவில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 08 பேர் அங்கம் வகிக்கின்றனர். நாட்டில் கொவிட்-19 மற்றும் டெங்கு நோயைக் […]

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொருத்தமான சட்டம் தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்துக – ஜனாதிபதி

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பில் நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 05 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. உண்மை மற்றும் நல்லிணக்க […]

சரியானதை செய்துவிட்டு தோல்வி அடைந்தால்கூட பரவாயில்லை – ஜீவன்

” நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை. கௌரவமானதொரு அரசியல் கலாசாரத்தையே விரும்புகின்றேன். தவறு செய்து வெல்வதைவிட, நல்லது செய்துவிட்டு தோற்றால்கூட அது நிம்மதிதான். எனவே, கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம் என எதிரணியில் உள்ள சில உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்.”  – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (09) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் […]

வர்த்தகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கான தேசிய முன்மொழிவொன்றைத் துரிதமாக தயாரிக்குமாறு பணிப்புரை

இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்தல் மற்றும் துரிதபடுத்தலுக்கான முன்மொழிவொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான குழுவின் (NTFC) செயற்திறன் மீளாய்வு கூட்டத்தின் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்படி அறிவுரைகளை வழங்கினார். இலங்கைக்குள் வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான உகந்த சூழலை கட்டமைப்பதற்கான துரிதமானதும் மிக முக்கியமானதுமான தீர்மானங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் […]

குரங்கு அம்மை பற்றி சுகாதார துறையின் அறிவிப்பு

குரங்கு அம்மை நோய் தொடர்பில் சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் தலைமை தொற்றுநோய் நிபுணர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். இலங்கையில் இனங்காணப்பட்ட குரங்கு அம்மை  நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக அதிகரித்துள்ளது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு குரங்கு அம்மை பரவுவது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும், எனவே இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் வைத்தியர் சமித்த கினிகே மேலும் தெரிவித்தார்.

TNA – ஜனாதிபதி சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் (TNA) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று மாலை மற்றுமொரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வடக்கு. கிழக்கில் நிலவும் காணி விடுவிப்பு, அதிகார பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சபை தேர்தல் குறித்தும் மேற்படி கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இந்த சந்;திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இலங்கை தமிழரசுக் […]

நுகர்வோருக்கு தொடர்ச்சியான எரிபொருள்

இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம் ,ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc) நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே.மாபா பத்திரன மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் தலைவர் ஜெஸ்டின் […]