மலையகத்தில் சிலர் கோமாளிக்கூட்டங்களாக இருக்கின்றனர்

(க.கிஷாந்தன்) அரசியலில் ஓரங்கட்டப்பட்டு அநாதைகளாக்கப்பட்டுள்ள ஒரு சில கோமாளிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும், அதன் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானையும் விமர்சித்து அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரிவிற்கான பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கொட்டகலை பிரதேச சபை தவிசாளருமான ராஜமணி பிரசாத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய ஊடகங்களில் தமக்கு இடமில்லை, அதாவது ஊடகங்களில் செய்திகள் வெளியாகும் அளவுக்கு தாம் எதையும் செய்யவில்லை, இன்னும் […]

என் பெயர் வேண்டாம்! எம் மக்களுக்கு காணி கிடைத்தால் போதும்

தோட்டம் என்றால் அங்குள்ள தேயிலை, இறப்பர் பயிர்கள் மற்றும் காணி அல்ல. அது அங்கு உயிர் வாழும் மக்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ”இன்றைய ஜனாதிபதி பிரதமராக இருக்கும் போது இதோ இந்த இடத்தில் இருந்து எனக்கு வாக்குறுதி அளித்தார். காய்கறி பயிரிட்டு உணவு பிரச்சினையை தீர்த்துக்கொள்ள, தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு, காணி தருவதாக சொன்னார். விவசாய, பெருந்தோட்ட அமைச்சர்களை, எம்முடன் தொடர்பு […]

அடைமழை

சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் நேற்று (7) முதல் அடைமழை பெய்து வருகிறது இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது. தொடர்ந்தும் மழை காரணமாக அன்றாட தொழிலில் ஈடுபடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று (8) அதிகாலை முதல் பெய்து வரும் மழை காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மழையுடன் பனி மற்றும் குளிரான காலநிலை காணப்படுவதனால் தொழிலாளர்கள் தொழிலிலுக்கு ​செல்வதில்லை சிரமத்திற்கு […]

இதுவரை 41883 டெங்கு நோயாளர்கள்

 இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41883 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 22.1 வீதமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் 21 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் தற்போது 67 சுகாதார வைத்திய அதிகாரி […]

“ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு”

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய “ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” நூலின் மூன்றாம் பதிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட இந்நூல் முதன்முதலில் 2017 இல் வெளியிடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஜனாதிபதியின் விசேட திட்டப்பணிப்பாளர் தீக்‌ஷன அபேவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் […]

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இது தொடர்பான உடன்படிக்கைகள் நேற்று (07) கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். மாலத்தீவில் சுகாதார ஒத்துழைப்பு, கலாசார ஒத்துழைப்பு மற்றும் கலாசார மையத்தை நிறுவுதல் தொடர்பாக தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வுடன் இணைந்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக “கணினி செயலிகளை ” உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலமும் அரச நிறுவனங்களுக்காக “கணினி செயலிகளை” உருவாக்கும் பணி தனியார் நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், எதிர்காலத்தில் டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனங்களினாலேயே இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஆளும் மற்றும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் […]

மனிதானிமான நடவடிக்கைகளில் இலங்கை, சர்வதேச அமைப்புக்களுடன் இணங்கிச் செயற்படும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் , செம்பிறைச் சங்க சம்மேளனம் (IFRC) ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (07) காலை நடைபெற்றது. எதிர்வரும் ஜூன் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்க சம்மேளளத்தின் தலைவர்களுக்கான மாநாடு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் தெற்காசியாவிற்கான உலக அனர்த்த அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டதோடு (WDR 2022) அதன் […]

பொருளாதார பிரச்சினைக்கு பிரான்ஸ் பங்களிப்பை செய்ய வேண்டும் – ஜீவன்

மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் எதிர்நோக்கும் போஷனை மற்றும் தற்சார்பு பொருளாதார பிரச்சினைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தனது பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜோன் போன்ஷுவா பெக்டே, அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, சௌமியமூர்த்தி […]

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புதிய வேலை

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வந்த பிராந்திய எரிசக்தி கட்டம் நிர்மாண வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மின் இணைப்புகளை ஒருங்கிணைப்பதற்குமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.