தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை

கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில், தினசரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ளதாக வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்தார். இதேவேளை, கடந்த வாரத்தை விட 24 மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரவுகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 39028  டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

“தேசிய மாற்றத்திற்கான கொள்கைத்திட்டம்” : ஜனாதிபதி விசேட உரை

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். அனைத்து பொது மக்களையும் தெளிவுபடுத்துவதற்காக இந்த விசேட உரை இரவு 8.00 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி, வானொலி மற்றும் நவீன ஊடகங்களிலும் ஒளி ஒலிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இதன்மூலம், தேசிய மாற்றத்திற்கான கொள்கைத்திட்டம் தொடர்பில் […]

கடன் மறுசீரமைப்பு குறித்து அவசர கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும்(Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்தும் ஆராயப்பட்டது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, […]

அரச பொசன் செலவு

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச பொசொன் நிகழ்வுக்கும், மிஹிந்தல புனித பூமியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொசொன் நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பில் புத்த சாசன, மத, கலாச்சார அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், அனுராதபுரம் மாவட்ட செயலகம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, லேக்ஹவுஸ் நிறுவனம் என்பவற்றிடமிருந்து […]

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் எப்படியாது?

ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இலகு ரயில் திட்டத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கும் இந்நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பானின் ஆதரவை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கும் ஜப்பானிய பிரதமருடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி மேற்கொண்ட தலையீடானது ஒரு மேம்பட்ட இராஜதந்திர […]

காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் குறித்து கவனம்

விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த அரச நிறுவன அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு (Bill and Melinda Gates foundation) உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விவசாயத் துறையின் நவீனமயமாக்கல், போசாக்கு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்கையில் தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதற்கான […]

மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

உலகில் முன்னணி சேவை நிறுவனங்களுள் ஒன்றான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக, மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (31.05.2023) அமைச்சில் நடைபெற்றது. பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை அதிகாரிகள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். அத்துடன், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க, […]

ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு சீனாவின் முழு ஆதரவு

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார துணை அமைச்சர் சன் வெய்டாங் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக சீன துணை அமைச்சர் நேற்று (30) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போது தெரிவித்தார்

எதிர்பாராதவிதமாக டெங்கு தீவிரமடைகிறது

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையே டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு வழிவகுத்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 38,639 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

முரண்பாடுகளை ஏற்படுத்த திட்டமிட்ட குழு

முரண்பாடுகளை ஏற்படுத்த திட்டமிட்ட குழுவொன்று முயற்சிப்பதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.