எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள் வாழ்விலோ வயிற்றில் அடி!

மலைவாஞ்ஞன்  நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து பொது மக்கள் பல்வேறு விதமான நெருக்கடியினை சந்தித்து வரும் நிலையில் அடிக்கடி எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதனால் மக்களின் வாழ்க்கை சுமையும் மன வேதனையும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் இதனால் தங்களுடை தொழில் செய்ய முடியாது பலர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நேற்று (01) நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 4 ரூபாவாலும் ஒக்டேன் 95 […]

மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ் காவலரின் கையை கடித்து தப்பியோடிய அரச உத்தியோகத்தர்!

( வாஸ் கூஞ்ஞ) போதைப் பொருளுடன் வைத்தியசாலை ஊழியர் இருவரை கைது செய்ய பொலிசார் முனைந்த வேளையில் பொலிசாரின் கையை கடித்து விட்டு ஒருவர் தப்பியோட்டம் ஒருவர் கைது செய்யப்பட்டார் தப்பியோடிய அம்புலன்ஸ் நபரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர். இச் சம்பவம் சனிக்கிழமை (30) பிற்பகல்  மன்னாரில் இடம்பெற்றுள்ளது இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலனின் பணிப்புரை […]

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில் போராட்டம்!

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு  போராட்டம் இன்று  இடம்பெற்றுள்ளது. இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “நீதியின் கழுத்தில் தூக்குக் கயிறு நீரத்துப் போனதா நியாயத்தின் உணர்வு”, ” உலகே உனக்கு கண் இல்லையா தமிழ் ஈழப் படுகொலைகள் நினைவில்லையா”, ” அடம் பிடிக்காதே ஐ.நாவே ஈழத் தமிழருக்கு ஆறுதல் அளித்திடு ஐ.நாவே”,  ” வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் ” போன்ற பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.  

உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் – சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் (ஆற்றுவாய்)  சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று முத்தரிப்புத்துறை மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் வெள்ளிக் கிழமை (29.09.2023) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் வலை பாய்ச்சுவதற்காக சென்ற மீனவர்கள் குறித்த உடலை கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிஸாருக்கு மீனவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர் (வாஸ் கூஞ்ஞ)

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின் குடும்பங்கள்! வேதனையில் மனித சங்கிலி போராட்டம்!

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேச்சல் தரை நிலத்தை மீட்டு தர கோரிய அறவழிப் போராட்டமானது இன்றுடன் 16 வது தினத்தை கடந்துள்ளது. அத்துமீறிய பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றம் காரணமாக கால்நடைகளுடைய மேய்ச்சல் தரை கவலிகரம் செய்யப்பட்டுள்ளதாகவும் தங்களது மேய்ச்சல் தரைகளை மீளவும் தங்களிடம் ஒப்படைக்க கோரிய சுழற்சி முறையிலான போராட்டத்தை மேற்க்கொண்டுவருகின்றனர். மேய்ச்சல் தரைகளை பல அரசியல்வாதிகள் தங்களுக்கு பல உத்தரவாதங்களை வழங்கி செல்கின்ற போதிலும் இன்றும் கூட மாதவன மயிலத்தமடு பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய […]

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது சட்ட விரோதமானது! ஜனக்க சொல்கிறார்

இலங்கை மின்சார சபை கோரும் கட்டணத் திருத்தம் சட்டவிரோதமானதென பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 22 வீதம் அல்லது அனைத்து அலகுகளுக்கும் 8 ரூபா அதிகரிப்பு கோரப்பட்டுள்ளதாக  ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கை மின்சார சபை கோரியுள்ள புதிய கட்டணத் திருத்தத்திற்கு அமைவாக,  0-30 அலகுகளுக்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய கட்டணம் 80 வீதத்தால் அதிகரிக்கப்படும். எவ்வாறாயினும், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவானது இவ்வருடத்தில் மூன்றாவது தடவையாக மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் […]

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4 ஆம் திகதி மாபெரும் மனித சங்கிலி போராட்டம். தமிழ் கட்சிகள் தீர்மானம்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. இன்று (29) யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசியக் கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி இந்த முடிவை எடுத்தனர். இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிகப்பெருமெடுப்பில் […]

மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிக்குமா?

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனமையினால், மின்சார உற்பத்திக்கு கூடுதல் செலவு ஏற்பட்டதாக அதன் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்தார். இந்த வருடம் 4500 கிகாவாட் நீர் மின் திறன் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், 3750 கிகாவாட் நீர் […]

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்! அஞ்சி வெளிநாட்டில் தஞ்சம்!

அஸ்ரப் அலீ முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார். கடந்த 23ம் திகதி அவர் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு தனது பதவி ராஜினாமா குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அதன் பின் தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டும் வௌியேறியுள்ளார். குருந்தூர் மலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர மற்றும் பிக்குகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாகவே அவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நாடாளுமன்ற சம்பிரதாயங்களை […]

கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் எம்.பிகள் ஒத்துழைப்பார்கள். – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை

  தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லையென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று புதன்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவரான வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை […]