இளைஞர்களின் கையிலே நம் சமூகத்தின் மாற்றம் இருக்கிறது! மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணித்தலைவர்

    ( நூரளை பி. எஸ். மணியம்) இளைஞர்களால் மாத்திரமே நம் சமூகத்தை மாற்ற முடியும்.மலையக மக்கள் முன்னணியின்  இளைஞரணி தலைவர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார். எமது சமூகம் இலங்கையில் குடியேரி 200 வருடங்கள் கடந்தும் இன்னும் நாம் எமது உரிமைகளுக்காக போராடி கொண்டிருக்கின்றோம்.எமது தேவைகள் அனைத்துக்கும் வீதியில் இறங்கி போராடி பெற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இன்றும் இருக்கின்றோம். ஆனால் இந் நிலைமையை எமது இளைஞர் சமூகம் நினைத்தால் மாற்றத்தை கொண்டுவர முடியும். இளைஞர்கள் அனைவரும் […]

மயிலத்தமடு மாதவனை காணி உரிமை போராட்டத்தில் சாணக்கியன் MP , ஜனாதிபதியின் விஜயத்தின் போது மாபெரும் அறப்போராட்டம்!

மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் பண்ணையளர்களினால் 11 ஆவது நாளாக தொடர்ச்சியாக வீதி ஒரங்களில் கொட்டும் மழையிலும் வெயிலிலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கோரிக்கையை முன்வைத்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றார்கள். அவர்களின் போரட்டத்தில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் அவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக பங்குபற்றிய போது. வருகின்ற ஜனாதிபதி விஜயத்தின் போது பாரிய அகிம்சா வழி போராட்டம் […]

எமது அரசின்கீழ் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை மீள் திருத்தம் செய்யப்படும் – சஜித்

  தாம் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிதிநிதிகள் குழுவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கிடைத்த போது,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் உழைக்கும் மக்களுக்கும் பொது மக்களுக்கும் ஏற்ற வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கை திருத்தியமைக்கப்படும் என்றும்,தற்போதைய அரசாங்கம் தேசிய கடன் மறுசீரமைப்பு மூலம் பெரும் செல்வந்தர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு நிவாரணம் வழங்கி உழைக்கும் மக்களினது ஊழியர் […]

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி! –

  கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி! – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு மணல் விநியோக விடயத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அவசியம் கருதி இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் (02.10.2023) திங்கட்கிழமை முதல், காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை அனுமதி வழங்கப்பட்ட வகையில் மணல் விநியோகம் இடம்பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் […]

மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்தில் இரு இளைஞர்கள் மரணம்!

பொலிஸாரின் கட்டளையை மீறிச்சென்ற இரு இளைஞர்கள் விபத்தில் பலி : மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதான வீதியில் சம்பவம் மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி சந்திவெளி கோரக்களிமடு பகுதியில் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். நேற்று (25) இரவு இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை சுங்கான்கேணியைச்சேர்ந்த 22 வயதுடைய சண்முகதாஸ் அன்புதாஸ் […]

சிங்கள பாடசாலைகளை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்க வேண்டாம் – மனோ கணேசன் MP

  <மனோ சிங்கள பாடசாலைகளை அருகாமை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சிக்கு நான் இடந்தர மாட்டேன் கொழும்பு கல்வி வலய பணிப்பாளருக்கு அறிவிப்பு>     கொழும்பு கல்வி வலயத்தில் மாணவர் தொகை குறைந்த சிங்கள பாடசாலைகளை அருகாமை தமிழ் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சியை, “தேசிய நல்லிணக்கம்” என்ற பெயரில் சிலர் முன்னெடுக்க முயல்கிறார்கள். உண்மையான நல்லிணக்கம் உருவாக, வளர்ச்சியடைந்த கொழும்பு பாடசாலைகளான ரோயல் கல்லூரி, இசிபதன கல்லூரி, டீ.எஸ். சேனநாயக்க கல்லூரி ஆகியவற்றில் திட்டமிட்டு குறைக்கப்படும் தமிழ் […]

நானுஓயாவில் மீன் லொறி விபத்து,  மூவர் வைத்தியசாலையில்!

             ( நூரளை பி.எ. மணியம்) நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளா னதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த  காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீன்களை  ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியொன்று இன்று ( 25) திங்கட் கிழமை மாலை விபத்துக்குள்ளாகியு ள்ளது விபத்தில்  காயமடைந்த மூவரும்  நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியாவிலிருந்து மெராயா நகருக்கு  நோக்கி […]

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்!!.

  சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் மீளாய்வு கலந்துரையாடலில் முதலாவது மீளாய்வின் இறுதி கலந்துரையாடலின் நிமித்தம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (25) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நாட்டின் பல்வேறு பொருளாதார,சமூக,அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இங்கு நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசாங்கம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பில் […]

மக்களுக்குச் சேவை செய்ய முடியாத அமைச்சுப் பதவி எனக்கு தேவையில்லை- திகா MP

“மக்களுக்குச் சேவை செய்ய முடியாத அமைச்சுப் பதவியை நான் இப்போதைக்கு பொறுப்பெடுக்க மாட்டேன்” திகாம்பரம் எம்பி தெரிவிப்பு   “அமைச்சு பதவி மூலமாக மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதை நான் அமைச்சராக இருந்த காலத்தில் செய்து காட்டியுள்ளேன்” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் மஸ்கெலியா பிரதேச தோட்டக் கமிட்டி தலைவர்களுக்காக மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் ஆலய […]

வாழைச்சேனை -அக்கரைப்பற்று CTB பஸ் மீது தாக்குதல்! நடத்துனர் காயம்.

  மீராவோடை வழியாக வாழைச்சேனை-அக்கரைப்பற்று செல்லும் பஸ் வண்டி மீது தாக்குதல் : நடத்துனருக்கு காயம் வாழைச்சேனையிலிருந்து மீராவோடை வழியாக அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபை வாழைச்சேனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டி மீது மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் 18ம் கட்டைப்பகுதியில் அதிகாலை 5.10 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தண்ணீர் போத்தல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பஸ் வண்டியின் கண்ணாடிகள் வெடித்துச்சிதறியுள்ளதுடன், நடத்துனரும் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார். இம்முறை கேடான தாக்குதலால் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு […]