இளைஞர்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும்?

ஐக்கிய இராச்சிய சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட சாரணர்கள் மற்றும் பெண் சாரணர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) லண்டனில் இடம்பெற்றது. முடிசூட்டு விழாவிற்கு இலங்கை சாரணர் இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஷலினி பெரேரா, அரிதா பண்டார, அசேல பண்டார மற்றும் சரித் பெர்னாண்டோ ஆகிய சாரணர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகளாவிய […]

டெங்கு – கட்டுப்படுத்த நிபுணர் குழு

கம்பஹா மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக விசேட குழுவொன்றை அனுப்ப சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நிலைமையை கட்டுப்படுத்த உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க விசேட குழுவொன்றை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, நாட்டில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தலைமையில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக […]

உலக வங்கி அதிர்ச்சி தகவல்

இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் ஈராண்டுகளுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வறுமை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது. நாட்டின் வறுமை நிலை 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 13.1 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மேலும் 2.5 மில்லியன் பேர் வறுமை […]

புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டம்…

புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானத்தில் இரண்டாவது நாளாக நேற்று (06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இக்கட்டான காலத்தினை நிறைவு செய்து, நான்கு வருடங்களின் பின்னர் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு மக்களுக்கு இம்முறை கிடைத்துள்ளதுடன், மக்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும். சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கம் மற்றும் சிங்கப்பூரின் வில்லிங் ஹார்ட்ஸ் (Wiling Hearts) அறக்கட்டளை ஆகியவற்றின் […]

தொழில் சட்டம் உருவாக உறுதுணையாக இருப்போம் – பாரத்

புதிய தொழில் சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான  அறிவு திறன் பொது மன்றத்தின் முதலாவது அமர்வு தொழில் அமைச்சில் இடம்பெற்றது. தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை அடையாளம் காணவும், டிஜிட்டல் தொழிலாளர்  உலகத்திற்கு ஏற்றவகையில் தொழில் சட்ட அமைப்பைத் தயாரிப்பதற்காகவும் இவ் அமர்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாநயக்கார தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக காங்கிரஸின் உப தலைவரும் சர்வதேச […]

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் வௌியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவு காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட, எல்பிட்டிய, யக்கலமுல்ல பிரதேச செயலக பிரிவுகள் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, றம்புக்கனை, தெரணியகலை, மாவனெல்லை, கேகாலை, கலிகமுவ பிரதேச செயலக பிரிவுகள் குருணாகல் மாவட்டத்தின் ரிதிகம, மாவத்தகம, அலவ்வ, பொல்கஹவெல பிரதேச […]

தொற்றுநோய் பரவுதல் அதிகரிப்பு

 மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மழையுடன் ஈக்கள் போன்ற விலங்குகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளமையே இந்த நோய்களுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறு குழந்தைகளை இவ்வாறான நோய்களில் இருந்து பாதுகாக்க சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம் என டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். இதேவேளை, தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் தொற்றுநோய்களின் பரவலும் அதிகரித்து வருவதாக சுகாதார […]

ஜனாதிபதி அதிரடி தீர்மானம்?

சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியொருவர் பதவி விலகிய பின்னர் ஆளுநர்கள் பதவி விலகுவது சம்பிரதாயபூர்வமானது என ஜனாதிபதி செயலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது பிரதமர் பதவி விலகிய பின்னர் அமைச்சரவை கலைவதற்கு இணையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள போதிலும் இந்த ஆளுநர்கள் பதவி விலகவில்லை என அவர் […]

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு (Photos)

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் நேற்று (05) லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துகளை கூறிய ஜனாதிபதி, அவருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இச் சந்திப்பில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என […]

வீடொன்றுடன் மோதிய எரிபொருள் கொள்கலன்

ஹப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று (06.05.2023) அதிகாலை எரிபொருள் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் கொள்கலன் ஊர்தி, வீதியை விட்டுவிலகிச் சென்று அருகில் உள்ள வீடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, காயமடைந்த குறித்த கொள்கலன் ஊர்தியின் உதவியாளர் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.   இந்த […]