இன்று வெசாக் பௌர்ணமி தினம்…

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம் இன்று. புத்தர், சுமேதாவின் துறவி நிலையில், வெசாக் போஹா நாளில் தீபங்கர புத்தரிடம் இருந்து உறுதியான கருத்தைப் பெற்று, அவர் ஞானமடைந்த எட்டாம் ஆண்டில், மன்னன் மணியக்கிக நாவின் அழைப்பின் பேரில் களனிக்கு விஜயம் செய்தார் என்பது மற்றொரு சிறப்பு. வெசாக் பௌர்ணமி தினத்தை இலங்கையர்கள் மற்றும் முழு பௌத்த மக்களும் பல சமய முக்கியத்துவங்களுடன் கொண்டாடுகின்றனர்.

சவாலை முறியடிக்க ஒற்றுமை, நம்பிக்கை அவசியம்

மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பெர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்பதோடு இது புனிதத்துவமான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இந்த நாள் கௌதம புத்தரின் பிறப்பு, புத்தத்துவம் மற்றும் சம்புத்த பரிநிர்வாணத்தின் புனித நிகழ்வை நினைவுபடுத்துவதோடு மனிதநேயம் மற்றும் கருணையுடன் கூடிய அறப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் கௌதம புத்தரின் போதனைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் இருக்கிறது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வரும் இந்த சவாலான நேரத்தில், காலத்தால் அழியாத […]

எமிரேட்ஸ் உடன் ஒப்பந்தம்

சுற்றுலாப் பயணிகளுக்கான இடமாக இலங்கையை மேம்படுத்துவதற்காக இலங்கை சுற்றுலா சபைக்கும் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது.இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு சாதகமான ஆதரவை வழங்கும் என நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் (PHOTOS)

கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையினால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (03) ஆரம்பமானது. புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. […]

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது

மழையுடனான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை, கேகாலை, மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மாலை 4.00 மணி முதல் இன்று மாலை 4.00 மணி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெசாக்:விசேட போக்குவரத்து சேவைகள்

வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு, விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாளை(05) மற்றும் எதிர்வரும் 07ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகே தெரிவித்தார். இதேவேளை, இன்று(04) முதல் விசேட பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் இருந்து வௌி மாகாணங்களுக்கும் வௌி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கும் இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.

நான்கு வருடங்களின் பின்னர் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை

நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. இந்த ஆளும் சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் உட்பட 07 உறுப்பினர்களைக் கொண்டது. வண, கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரும் நியமிக்கப்பட்ட உறுப்பினராக செயற்படுகின்றார். நான்கு வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்த ஆளும் சபை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் […]

3,000 மாணவ மாணவியருக்கு ஜனாதிபதி புலமைப்பிரிசில்….(Photos)

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் – 2023 நிகழ்வு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான மேற்படி திட்டத்தினை ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன. அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 2024 ஆம் ஆண்டில் […]

நவீன தொழில்நுட்ப கண்காட்சி

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 20வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நவீன தொழில்நுட்ப கண்காட்சி இன்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வழிகாட்டலின் ஊடாக பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மெய்நிகர்” என்ற தொனிப்பொருளிலான கண்காட்சி, கல்லூரியில் ஆரம்பமாகியது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். இன்றும், நாளையும் நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சயில், […]

முதலீட்டாளர்களுக்கு வசதியாக 07 செயலணிகள்

நாட்டில் “வர்த்தக நட்பு சூழலை” உருவாக்கும் நோக்குடன், ஏழு செயலணிகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது. முதலீடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும், அதற்குத் செலவிடப்படும் நேரத்தைக் குறைக்கவும், தேவையான தகவல்களை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, செயலணிகளுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படுவதோடு அதற்கான நிலையான முறைமைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தகப் பிரவேசத்தை இலகுபடுத்துவதற்காக கம்பனி பதிவாளர் அலுவலக சட்ட கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவது […]