அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே மாதக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். UNP மே தினப் பேரணியின் தொனிப்பொருளானது ‘2048 ஜயகமு’ என்பதாகும்.

விலை மாற்றம் நாளை- லிட்ரோ நிறுவனம்

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை மாற்றம் நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானம்

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

“கொவிட்” எச்சரிக்கை

நாட்டில் நாளாந்தம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொவிட் நோயாளர்கள் பதிவாகி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் தினமும் கிட்டத்தட்ட 05 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் எச்சரிக்கை…

மழை காரணமாக பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது. பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட  பிரிவுகள், கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகள், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலகங்களுக்குட்பட்ட  பிரிவுகளுக்கே இவ்வாறு முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று(02) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் […]

இலங்கையில் மத சுதந்திரத்திற்கு தடை?

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தான், சீனா, நைஜீரியா மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சி இல்லாமல் அரசாங்கமா?

சுதந்திரக் கட்சி மீண்டும் வேறு ஒரு கட்சியின் தலைமையில் கூட்டணி அமைக்காது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதினக்கூட்டம்

புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் மேதினக்கூட்டமும், ஊர்வலமும் நுவரெலியா – இராகலையில் நேற்று (01)இடம்பெற்றது. இராகலை நடுக்கணக்கு சந்தியில் இருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் நகரம் வழியாக இராகலை ஜெமினி மண்டபத்தை அடைந்தது. அங்கு மேதினக் கூட்டம் இடம்பெற்றது. ஊர்வலத்தின் போது அரசாங்க செயற்பாட்டை கண்டித்தும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டதுடன், பதாதைகளையும் காட்சிப்படுத்திருந்தனர். குறித்த ஊர்வலத்தில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தலைமை உரையை ஸ்ரீபாத […]

மறக்கப்பட்ட சமூகம் – சதாசிவம்

இந்திய வம்சாவழியினரின் 200ஆம் ஆண்டும் தொழிலாளர் தினமும் எனும் தொனியில் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இம்முறை உலக தொழிலாளர் தினமான மே தினம் நுவரெலியாவில் முன்னனியின் பொது செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் தலைமையில் நுவரெலியா வாசிகசாலை கேட்போர் கூடத்தில் இன்று (01)  நடைபெற்றது. நுவரெலியா தபால் நிலையத்துக்கு முன்பாக காமன்கூத்து நிகழ்வோடு பேரணி ஆரம்பமாகியது. நிகழ்வில் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் பிரதேச சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். […]

எச்சரிக்கிறார் : VS

” பதுளை, மடுல்சீமை மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்புகோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பயணத்தை தொடர்வதற்கு நான் தயாரில்லை.”  – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மே தின கூட்டம் பதுளையில் இன்று (0) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே வடிவேல் சுரேஷ் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை […]