தோட்டப்பகுதிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுரை

விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்சாங்கம் அர்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தோட்டப் பகுதி மக்கள் முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் (PRC) ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காணிப் பிரச்சினை உட்பட விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதோடு, தற்போது தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்ற மகாவலி காணிப் பிரச்சினை […]

நிபந்தனைகளை மீறி மணல் கொண்டு சென்ற சந்தேகநபர் கைது

அட்டன் பகுதியில் அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி  மணல் கொண்டு சென்ற லொறியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அட்டன் பொலிஸாரினால் இவர் 26.04.2023 அன்று மாலை அட்டன் கொழும்பு  பிரதான வீதியில் அட்டன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மணலை அனுமதி பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி (அனுமதிப்பத்திரத்தில் திகதி தெளிவாக குறிப்பிடவில்லை) கித்துல்கல பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு கொண்டு செல்லும் போது அட்டன் பொலிஸாரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்பின் கைப்பற்றப்பட்ட  மணலையும், வாகனத்தையும், சந்தேக நபரையும் அட்டன் பொலிஸ் நிலையத்தில் அட்டன் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். சந்தேகத்தின் […]

CWC ஆதரவாக வாக்களிக்கும்

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு தமது கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை, அமைச்சர் மனுஷ நாணயக்கார சபையில் ‘புலி’ (கொட்டியா) என விளித்ததையும் அமைச்சர் கண்டித்துள்ளார். அமைச்சில் (27.04.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். […]

மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான அறிக்கை…

இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை,மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (27) நிதியமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் 73 ஆவது வருடாந்த அறிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ள இது 04 பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன்படி, ஆண்டின் பொருளாதார விவகாரங்களின் நிலையை விளக்குகின்ற 08 அத்தியாயங்களையும், 30 புள்ளிவிபர அத்தியாயங்களையும் முதல் பகுதியில் உள்ளடங்குகின்றது. இரண்டாவது […]

மண்சரிவு அபாய எச்சரிக்கை

 நாட்டின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) 2 மணிக்கு பின்னர் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் […]

வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க குடியரசிற்குள் பிரவேசிப்பதற்கு தடை

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்த அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வசந்த கரன்னாகொட கடற்படைத் தளபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து, வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க குடியரசிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மருந்து தட்டுப்பாடு குறைந்துள்ளது – சுகாதார அமைச்சர்

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தற்போது 100-112க்கு இடையில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் 169 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது நிலைமை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் நாட்டில் மருந்து தட்டுப்பாடு வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் கூறினார். குறிப்பாக […]

கடந்த சில மாதங்களில் காட்டு யானைகளின் மரணம் அதிகரித்துள்ளது

கடந்த வருடத்தை விட இந்த வருடம் கடந்த சில மாதங்களில் காட்டு யானைகளின் மரணம் அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் மனித நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 143 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த யானைகளின் மரணங்களில் 37 மரணங்கள் துப்பாக்கிச் சூடு காரணமாகவும், 27 மரணங்கள் மின்சாரம் தாக்கியதாலும், ஏற்பட்டுள்ளன. காட்டு யானைகளின் தாக்குதலினால் இந்த வருடத்தின் கடந்த நான்கு […]

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை  மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயலாளரின் கையொப்பங்களுடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வௌியிடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமித்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது. சட்டமூலத்தின் சில சரத்துகள் நீதியை நிலைநாட்டும் முறைமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் அது […]

ஐவரில் ஒருவரது இறுதிக்கிரியை…

யாழ். நெடுந்தீவில்  வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட ஐவரில் ஒருவரது இறுதிக்கிரியைகள் இன்று (26) நடைபெற்றன நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட ஐவரில் ஒருவரான சுப்பிரமணியம் மகாதேவாவின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன. 75 வயதான சுப்பிரமணியம் மகாதேவா ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். கிளிநொச்சி – கணேசபுரத்திலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் திருநகர் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். […]