இலங்கை இன்று மறுமலர்ச்சிப் பாதைக்கு பிரவேசித்துள்ளது

இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் மீண்டும் பிரவேசித்து வருவதாகவும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டில் காணப்பட்ட அரச வங்குரோத்து நிலைமை வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை 8 மாதங்களில் மாற்றியமைத்து வெற்றிகரமாக மாற்ற முடிந்ததாகவும், அது ‘Srillnka comeback story ’ என அழைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை இன்று (26) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் ஜனாதிபதி […]

இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் விரைவில்…

2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத் தின் காலப்பகுதியில் இரண்டாம் மொழி ஆசிரியர்களாக நியமனம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட 1200 பேருக்கு உடனடியாக நியமனங்களை பெற்றுக்கொ டுப்பதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் தினேஸ் குணவர்தனவை அறிவுறுத்தியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும்தரப்பு கூட்டத்தின்போது இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்திருந்தேன். இதனையடுத்தே ஜனாதிபதி […]

கொவிட் பற்றிய புதிய தகவல்

நேற்று (25) நான்கு பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை நீக்க உலக வங்கி நடவடிக்கை

உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உணவுப் பாதுகாப்பு தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் பணவீக்கம் அதிகரித்தபோது, ​​உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 5வது இடத்தில் இருந்தது

மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள்

மேல் மாகாணத்தில் இன்று (26) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. மேல் மாகாணத்தில் நிலவும் டெங்கு நோயின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 27800 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

என்னைத் தாக்குவது நியாயமற்றது – மைத்திரி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும், தன் மீது குற்றம் சுமத்துவது நியாயமற்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தால்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தொிவித்தும், தமிழர் இன, மத அடையாள அழிப்புக்கு எதிராகவும் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களிலும் இன்று காலை சகல வர்த்தக நிலையங்களையும் மூடி வர்த்தக சமூகம், பொது அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்புடன் ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் அந்தவகையில்  யாழ்ப்பாணத்திலும் ஹர்த்தாலுக்கு  பூரண ஆதரவை மக்கள் வழங்கியுள்ள நிலையில் ,    மக்கள் நடமாட்டமின்றி நகரங்கள்  வெறிச்சோடிக் […]

கல்வி முறையை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி

நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி தொடர்பான புதிய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதில் தானும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார். மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இன்று (25) காலை கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி […]

புதிய கல்விக் கொள்கை

அடுத்த 25 வருடங்களுக்கு தேசிய கல்விக் கொள்கை மற்றும் அது தொடர்பான சீர்திருத்த முன்மொழிவுகளை தயாரிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரின் பங்களிப்புடன் 10 பேர் கொண்ட உபகுழு நியமிக்கப்படவுள்ளது. நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான செயற்பாட்டின் போது அவசரமாக சீர்திருத்தப்பட வேண்டிய முக்கிய துறையாக கல்வித்துறையை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் புதிய கல்விக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்த […]

நுவரெலியா தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது மே 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சர்கள் சபையில் அங்கீகாரம் வழங்கி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறைசாரா அபிவிருத்தி காரணமாக நுவரெலியா நகரின் அழகு படிப்படியாக குறைந்து வருவதாகவும் இது சுற்றுலாத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்தார்