காசல்ரி நீர்த்தேக்கத்தில் 8 அடி நீளமான மலைப்பாம்பு

காசல்ரி நீர்த்தேக்கத்தில் 8 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் இந்த 8 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் மலைப்பாம்பு சிக்கியிருப்பதனை கண்டு வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து மலைப்பாம்பினை கரைக்கு கொண்டு வந்தபோது அது உயிரிழந்துள்ள நிலையில் பாம்பினை புதைக்குமாறு வன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அட்டனில் இருந்து போடைஸ் நோக்கி பயணித்த பேருந்தில் நடந்த சோகம்

அட்டனில் இருந்து போடைஸ் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வீடு திரும்பும் போதே குறித்த பேருந்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவர் போடைஸ் தோட்டத்தை சேர்ந்தவர் என்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளி தமிழர்களின் அடையாளத்தை முடக்காதே! கொதித்தெளும் வடிவேல் சுரேஷ் MP

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை இலங்கைத் தமிழர் என அடையாளப்படுத்த பதிவாளர் திணைக்களத்தால் முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அண்மையில் பதிவாளர் நாயகத்தால் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்ட பதிவாளர்க்கும் மேலதிக மாவட்ட பதிவாளர்க்கும் அனுப்பப்பட்டுருகின்ற சுற்றுநிறுபத்தில 11,1 /2023 என்ற இலக்கத்தை கொண்ட சுற்றுநிறுபத்தின் மூலமாக அரசாங்க காரியாலயங்கள், பிறப்புச்சான்றிதழ் மற்றும் ஆள் அடையாளபடுத்த கூடிய அனைத்து ஆவணங்களிலும் இனத்தை […]

இந்திய வம்சாவளி மக்களின் அடையாளத்தை அழிக்க முற்பட வேண்டாம்! பதிவாளர் நாயகத்தின் தீர்மானத்தை எதிர்க்கும் அமைச்சர் ஜீவன்

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.” என இதொகா பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கூறுகிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் பிறப்பு சான்றிதழ் உட்பட பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்குரிய ஆவணங்களில் “இனத்தைக் குறிப்பிடும் போது இந்திய தமிழ் / சோனகர் என்பதை இலங்கைத் தமிழ்/ சோனகர் என பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள்” எனும் […]

கொங்கோடியா தோட்டப் பாதையில் பாரிய மண்சரிவு! சாரதிகளே அவதானம்!

¶ (  நூரளை பி.எஸ். மணியம்) தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கந்தப்பளை நகரில் இருந்து கொங்கோடியா, கல்லாலவத்தை தோட்ட வழியாக இராகலையை நோக்கி செல்லும் பிரதான வீதியில் இந்த மண் சரிவு ஏற்பட்டு குறித்த வீதியூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  அதேநேரத்தில் காலநிலை மாற்றத்தினால் கந்தப்பளை பிரதேசத்தில் இன்று (18) புதன்கிழமை  அதிகாலையில் முதல் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கொங்கோடியா தோட்ட பகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்டு செப்பணிடப்பட்ட […]

நோர்வூட்டில் “No” மதுபானசாலை! மக்கள் போராட்டம், தடுக்குமா அதிகாரம்!

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா, சலங்கந்தை  – ஒட்டரி  பிரிவில் மதுபானசாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18.10.2023) போராட்டமும், பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. ஆன்மீக தலைவர்கள், இளைஞர்கள், ஊர் மக்கள் இணைந்தே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். மதுபானசாலைக்கான அனுமதியை இரத்து செய், வேண்டாம், வேண்டாம் மதுபானசாலை வேண்டாம் என கோஷங்களை எழுப்பியவாறு ஒட்டரி பகுதியில் இருந்து டிக்கோயா நகர்வரை மக்கள் பேரணியாக வந்தனர். ” மலையகம் தற்போதுதான் மாற்றம் கண்டு வருகின்றது. எமது சமூகமாற்றத்துக்கு இந்த மதுபானசாலைகள் பெரும் […]

கொத்மலையில் நிலத்துக்கு அடியே சத்தம்! மக்கள் அச்சம்!

   ( நூரளை பி.எஸ். சுப்பிரமணியம்) நுவரெலயா மாவட்டத்திலுள்ள கொத்மலை வேத்தலாவ எனும் கிராமத்தில் நிலத்தின் கீழ் இருந்து நீர் செல்வது போலும் பல்வேறு விதமான அமானுஷ்யமான சத்தங்கள் கேட்பதாக கிராம மக்கள் அளித்துள்ள தகவலுக்கு அமைய நேற்று  ( 15) ஞாயிற்றுக்கிழமை முதல் அக்கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களை இரவு நேரத்தில் மட்டும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார். அவர் இவ்விடயம் தொடர்பாக கருத்து […]

ஹட்டன் பஸ் தரிப்பிடம் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    (க.கிஷாந்தன்) ஹட்டன் பஸ் தரிப்பிடம் நவீன வசதிகளுடன்கூடிய பஸ் தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று (16.09.2023) கையளிக்கப்பட்டது.   இந்த கையளிப்பு நிகழ்வில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் குமாரசுவாமி, பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பிரத்யேக செயலாளர் நவரட்ணம், இணைப்பு செயலாளர் ஜெய பிரமதாஸ், அட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், அட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர், அட்டன் […]

ஹப்புத்தளை – தியாத்தலாவைதில் ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து தாமதம்!

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று நண்பகல் 12 .15 மணியளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று 10.15 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதமே தடம் புரண்டதாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் பண்டாரவளை புகையிரத நிலையத்திலும், கண்டியில் இருந்து […]

தேர்தல் காலத்தில் மட்டும் வரும் போலிகளை நம்ப முடியாது. – எம்.ராமேஷ்வரன் எம்.பி தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) ” மலையகத்தில் சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் வாதிகள் தடையாக உள்ளனர் என ஒருவர் (முத்தையா முரளிதரன்) கூறியுள்ளார். அவரை வரவேண்டாம் என சொன்னது யார்? மக்களுக்கு சேவை செய்ய முன்வாருங்கள், நாங்களே மாலைபோட்டு வரவேற்பளிக்கின்றோம்.” – என்று இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். ஆனால் தேர்தல் காலத்தில் வாக்குக்காக மட்டும் தானே எவரையாவது அழைத்துக்கொண்டு வருகின்றீர்கள், தேர்தல் முடிந்ததும் எங்களையும் கஷ்டத்தில் தள்ளிவிட்டு, காணாமல் போய் விடுகின்றீர்கள் எனவும் அவர் கூறினார். […]