நடிகர் விஜயகாந்த் காலமானார்

பிரபல நடிகரும், தேமுதிகவின் நிறுவுனருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் […]

ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு

கனடாவின் ரொறன்றோ நகரில் வீட்டு விற்பனை குறைவைடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஆறு வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ரொறன்றோ பிராந்திய வீடு விற்பனை முகவர்கள் சபை தெரிவித்துள்ளது. விற்பனைக்காக பட்டியிலிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 16.5 வீதம் அதிகமாக பதிவாகியது. எனினும், விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் சராசரி விலை 1,082,179 டொலர் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த […]

ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர் வெற்றி

கனடாவின் ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழை பூர்வீகமாகக்கொண்ட பார்த்தி கந்தவேள் வெற்றி பெற்றுள்ளார். ஸ்காப்றோ தென்மேற்கு வட்டாரத்தில்இடைத் தேர்தலில் பார்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளார். ரொறன்ரோ பாடசாலை சபையின் பொறுப்பாளராக பார்த்தி கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி இடைத் தேர்தலில் பார்த்தி 4641 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். மேலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட கெவின் ரூபசிங்க 3854 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்காபரோ தென்மேற்கு வட்டாரத்தில் உறுப்பினராக பதவி வகித்த கெரி க்ராவொர்ட் ராஜினாமா செய்த […]

ஜெர்மனிய திரைப்பட போட்டியில் சாதித்த இலங்கை இளைஞன்…

ஜெர்மனிய அரசின் டார்ஸ்டாட்  பல்கலைக்கழக இலங்கை இளைஞர் போட்டியொன்றில் வெற்றியீட்டி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். லொஸ்ட் இன் லெங்வேஜ் என்ற குறுந்திரைப்படம் சிறந்த திரைகதைக்கான போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சினை தொடர்பில் விவாதிக்கும் ஓர் கதைக் கருவினைக் கொண்ட குறுந்திரைப்படமாக இது அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு உதவுமாறு குறித்த தமிழ் இளம் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் முகநூல் பதிவு பின்வருமாறு…. ஜெர்மனிய அரசின் டார்ம்ஸ்டாட் பல்கலைக்கழகம் – திரைப்பட கல்லூரியின் மாணவர்கள் ஆகிய […]

சட்டவிரோதமாக எந்த இன மக்கள் செயற்பட்டாலும் எதிர்த்து குரல் கொடுப்பேன்! சாணக்கியன் சபதம்!

சட்டவிரோதமான செயல்படும் அனைத்து இன மக்களின் செயற்பாடுகளுக்கும் எதிராகக் குரல் கொடுப்பேன், இதில் நான் பாகுபாடு பர்க்கப்போவதில்லை  என பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் கூறியுள்ளார். சட்டவிரோதமாக யார்  செயற்பட்டாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அதாவது சட்டவிரேதமாக எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டாலும் அது தவறு என்பதே […]

கனடா – காட்டு தீ காரணமாக “Yellowknife”லிருந்து 20ஆயிரம் பேர் வெளியேற்றம்!!

கனடாவின் டெரிடோரியான நோர்த் வெஸ்ட் டெரிடோரியல் பகுதிகளில் அதிகமான வெப்பநிலை காரணமாக காட்டு தீ பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு நலன் கருதி 20 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்ததனை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர். இதன்படி இன்கிராம் டிரெயில்,இன் டிட்டா,காம் லேக்,கிரேஸ் லேக், இங்கல் வர்த்தக மைய பகுதியிலிருந்த மக்களே பாதுகாப்பாக அகற்றப்படுகின்றனர்.   Yellowknife residents are evacuating. pic.twitter.com/Qs2rYOsXv1 — +Jon Hansen (@CSsR_Preacher) […]

13 ஆவது திருத்தச்சட்டம்! தமது நிலைப்பாட்டை மகாசங்கதினரிடம் சஜித் தெரிவிப்பு

நலீர் அகமட் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மகாசங்கத்தினர் முன்னிலையில்  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம் என்றும், ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும்,ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும்,நாட்டின் அனைத்து […]

உலகில் மிகவும் பலம் பொருந்திய நபர் …..??

உலகில் மிகவும் பலம் பொருந்திய நபரை கண்டறிவதற்கான சர்வதேச போட்டியில் கனடாவின் மொன்றியலைச் சேர்ந்த நபர் ஒருவர் வெற்றி ஈட்டியுள்ளார். ஜெஃப்ரி அட்லர் என்ற நபர் இவ்வாறு உலக குரொஸ்பிட் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார். ஒலிம்பிக் பலுதூக்கல், ஜிம்னாஸ்டிக், ஓட்டம், சைக்கிள் ஓட்டம், ஃபுல் ஆப்ஸ் ,பாக்ஸ் ஜம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்து துறைகளிலும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகின்றார். அந்த வகையில் […]

ரணிலுடன் ராத்திரியில் பேச்சு!5 வருடங்களில் 7 பேர்ச் காணி கொடுக்காதது ஏன்? அலுத்கமகே கேள்வி (Video)

“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர்கள் நீங்கள் தற்போதும் இரவோடு இரவாக சென்று அவரோடு பேசுகிறீர்கள் ஆனால்  அது விஷயமல்ல .. கடந்த ஐந்து வருடங்களில். 5 வருடங்களில் உங்களால் 7 பேர்ச் காணி கொடுக்க முடியாமல் போனாது ஏன்? “ என்ற கேள்வியை கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அலுத்கமே தமிழ் முற்போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே […]

தலைமன்னார் -,இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாக ஆராய்ய அமைச்சர் நிமல் மன்னாரில்!!

(வாஸ் கூஞ்ஞ) தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடாத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா வெள்ளிக்கிழமை (04) தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் பழைய பாலம் ஆகியவற்றிற்கு விஜயம் செய்தார். இவரின் இவ் வருகையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் வன்னி பாராளுமன்ற உறுப்பனர்கள் சாள்ஸ் நிர்மலநாதன் . செல்வம் அடைக்கலநாதன் உட்பட மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி […]