பெரிஸ நகரில் வெடிப்பு
பிரான்ஸ் தலைநகர் பெரிஸ நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர். கட்டிடம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வெடிவிபத்து காரணமாக கட்டிட இடிபாடுகளுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா? என்று அதிரடிப்படையினர் தேட ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும், வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டிற்கான Slc நிதிநிலை அறிக்கை
2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, Sri lanka கிரிக்கெட் அந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபா நிகர உபரியாக பதிவு செய்துள்ளது. அந்த வருடத்தில் கிரிக்கெட்டின் மொத்த வருமானம் 17.5 பில்லியன் ரூபாவாகும் எனவும், இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 120 வீத வளர்ச்சி எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கணக்கு அறிக்கை கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட […]
ஏற்றுமதி விவசாய பொருளாதாரத்தை உருவாக்குவோம்
விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை இணைத்து ஏற்றுமதி விவசாய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.. அதன் ஊடாக விவசாய அமைச்சு வெளிநாட்டு வருவாயை ஈட்டும் அமைச்சாக மாறும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விவசாய தொழிற்துறைக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுத்தமையால் இம்முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது என்று […]
பைடனுக்கு ஜின்பிங் பதில்
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சர்வாதிகாரி என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் குற்றச்சாட்டுக்கு சீனா பதிலளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் மேற்படி கருத்து ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இரு நாடுகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை மேலும் சீர்குலைக்கும் என்று சீனா கூறியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிக்கை பொறுப்பற்றது மற்றும் அரசியல் ரீதியாக வெறுக்கத்தக்கது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வெளிப்படையான போரைத் தணிப்பதற்காக […]
நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தோல் நோய்
வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் நோய், மத்திய மாகாணத்தில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் பதிவாகியுள்ளதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கால்நடைகளை போக்குவரத்துச் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் இந்த கால்நடை நோய் உத்தியோகபூர்வ பிரிவுகளில் பதிவாகியுள்ளது என மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் […]
காட்டெருமையை வேட்டையாடிய இருவர் கைது
தேயிலை மலையில் சுற்றிதிரிந்த காட்டெருமையை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட, என்.சி பிரிவிலேயே காட்டெருமை வேட்டையாடப்பட்டு, இறைச்சி பொதியிடப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்துள்ளது. சந்தேக நபர்கள் கைதாகும்போது அவர்களிடம் 54 கிலோ இறைச்சி இருந்துள்ளது. ஏனையவை தோட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இறைச்சி மருத்து பரிசோதனைக்காக சுகாதார கால்நடை வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் ஹட்டன் போடைஸ் […]
ரொனால்டோ புதிய சாதனை
கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. நேற்று, ஐஸ்லாந்து அணிக்கு எதிரான யூரோ கிண்ண. கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் அவர் விளையாடினார். இது அவர் விளையாடிய 200வது சர்வதேச போட்டி. இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இது கின்னஸ் உலக சாதனையாகவும் அமைந்துள்ளது. சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற தனித்துவ சாதனையை அவர் கடந்த மார்ச் மாதம் படைத்திருந்தார். […]
நீர்முழ்கி கப்பல் தொடர்பில் புதிய தகவல்
மத்திய அட்லாண்டிக் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுடன் காணாமல் போயுள்ள சிறிய ரக நீர்முழ்கி கப்பல் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது நீர்முழ்கி கப்பலில் இருந்து சிறிய சமிஞ்சை கிடைத்துள்ளதாக கனேடிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு தடவையும் சப்தம் கேட்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2024 – சாதகமான ஆண்டு – நிதி இராஜாங்க அமைச்சர்
IMF ஆதரவின்றி நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை வழங்குவதாக யாராவது கூறினால் அவர்களிடம் தீர்வு இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டின் இறுதியில் எதிர்மறை 3 ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், அரசாங்கம் முன்னெடுத்து வரும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அதனை விடவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடியும் […]
சீன ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரி – ஜோ
சீன ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்துள்ளார். சீனாவில் நேற்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டனி பிளிங்கன் Xi Jinpingஐ சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு இடம்பெற்ற சிறிது நேரத்தில் பைடன் இதனை தெரிவித்துள்ளார். மேற்படி சந்திப்பில் சீன – அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதாக இணக்கம் எட்டப்பட்டது. இவ்வாறான இணக்கம் எட்டப்பட்ட நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். ஜோ பைடனின் குற்றச்சாட்டுக்கு சீனா இதுவரை பதிலளிக்கவில்லை.