ஆஷஸ் தொடரில் ஆஸி முன்னிலை
ஆஷஸ் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களும், அவுஸ்திரேலிய அணி 386 ரன்களும் எடுத்தன. 7 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3 வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. 3வது நாளில் பெரும்பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. 32.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் […]
மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி…
வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மீதானதேவையற்ற தலையீடுகளை தடுக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்தவும் இதன் ஊடாக வாய்ப்பு ஏற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ‘ஸ்திரமான […]
டெங்கு ஒழிப்புக்காக பரந்த வேலைத்திட்டம்
மேல் மாகாணத்திற்குள் அலுவலகங்கள் மற்றும் ஏனைய வளாகங்களை சோதனையிடுவதற்கான பரந்த வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வார நாட்களின் திங்கட்கிழமைகளில் தனியார் பாடசாலைகள், அரசாங்க பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், (பல்கலைக்கழகங்கள்/பிரிவேனாக்கள்) ஆகிய இடங்களின் சோதனையிடப்படவுள்ளது. செவ்வாய்கிழமைகளில் தொழிற்சாலைகளும் புதன் கிழமைகளில் வேலைத்தளங்களிலும், வியாழக்கிழமைகளில் ஏனைய தனியார் நிறுவனங்களிலும், வௌ்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களிலும், சனி கிழமைகளில் வீடுகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களை அண்மித்த பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிப்பாட்டுத் தலங்களிலும் சோதனையிடப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் […]
தொழில் ஆணையாளரிடம மலையக பிரதநிதிகள் விடுத்த கோரிக்கை
அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பெருந் தோட்ட நிறுவனங்களான ஜனவசம, பெருந்தோட்ட யாக்கம் , எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்டவற்றின் தொழிலாளர்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், வேலுகுமார் மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோர் தொழில் ஆணையாளரை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளனர். ஊடகங்களுக்கு வடிவேல் சுரேஷ் கீழ்க்கண்டவாறு கருத்துரைத்தார் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களினால் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவை வழங்கப்படாமையினாலும் […]
பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடர்
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இரண்டு போட்டிகளும் 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன் முதலாவது போட்டி ஜூலை 20ஆம் திகதியும் இரண்டாவது போட்டி ஜூலை 28 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது. பாகிஸ்தான் டெஸ்ட் அணி ஜூலை 09 ஆம் திகதி இலங்கைக்கு […]
சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது கோடாரி தாக்குதல்
நியூசிலாந்தின் ஒக்லாந்து நகரில் உள்ள பல சீன உணவகங்களுக்கு கோடரியுடன் வந்த சீன நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் நேற்று (19) இரவு 9 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர், சீன பிரஜை ஒருவரை கைது செய்த பொலிசார் அவரிடம் மேலும் பல ஆயுதங்கள் இருந்ததாக கூறியுள்ளனர்.
மேலும் மூன்று வீரர்கள் சிம்பாபேக்கு…
உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாபேக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அவர்கள் ‘காத்திருப்பு விருப்பங்கள்’ அல்லது வழக்கமான வீரர் காயம் அடைந்தால் அணியில் சேர்க்க அனுப்பப்படுகிறார்கள் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அதன்படி, டில்ஷான் மதுஷங்க, துனித் வெல்லலகே மற்றும் சஹான் ஆராச்சி ஆகியோர் எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைய உள்ளனர்.
450 கிராம் பாண் இறத்தால் விலை குறைப்பு
450 கிராம் பாண் இறத்தால் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இன்று (20) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரவுள்ளதாக பேக்கரி உரிமையாளா்கள் சங்கம் தொிவித்துள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
உறவுகளை ஸ்திரப்படுத்த இணக்கம்
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நிலவும் பிரச்சினைகளை தீர்த்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை ஸ்திரப்படுத்த சீன ஜனாதிபதியும் அமெரிக்க இராஜாங்க செயலாளரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். சீன ஜனாதிபதி Xi Jinping மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் Anthony Blinken ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (19) பிற்பகல் சீனாவின் Beijing இல் உள்ள மக்கள் மண்டபத்தில் இடம்பெற்றது. அமெரிக்கக் குடிமக்களைப் போலவே சீனக் குடிமக்களும் சுயமரியாதை, தன்னம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை கொண்ட குடிமக்கள் என்றும், இரு நாட்டு […]
ஜனாதிபதி, பெட்ரிசியா சந்திப்பு
பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்டை சந்தித்துள்ளார். பொதுநலவாய அமைப்பில் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியும் செயலாளர் நாயகமும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் உத்திகள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுநலவாய நாடுகள் எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.