வருடத்தில் இதுவரை 255 மனித கொலைகள்
இந்த வருடத்தில் இதுவரை 255 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ, 2022ஆம் ஆண்டில் 559 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இதேவேளை, கடந்த வருடத்தில் ஏறக்குறைய 60 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த வருடத்தில் இதுவரை 34 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நாட்டில் துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச்செயல்களை குறைக்கும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் களத்தில் […]
UNHRC கவலை…
பொறுப்பு கூறல் விடயத்தில் இலங்கையின் செயற்பாடு கவலயளிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் நேற்று (19) ஆரம்பமாகியுள்ளது. கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் 21 ஆம் திகதி ஆணையாளர் வாய்மொழி மூல உரை நிகழ்த்தவுள்ளார். இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பான 51/1 தீர்மானத்தின் முன்னேற்றங்கள் குறித்தும் பொருளாதார நெருக்கடி, […]
இலங்கை அணி அபார வெற்றி
உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டியில், இலங்கை அணிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கும் இடையில் இன்று (19) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சியம் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 355 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில் குசல் மெண்டிஸ் 78 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 73 […]
டைட்டானிக் கப்பலின் சிதைவைக் காணச் சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு மாயம்
டைட்டானிக் கப்பலின் சிதைவைக் காணச் சென்ற சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் நடவடிக்கையை அமெரிக்கக் கடலோரக் காவல்படை ஆரம்பித்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலின் தகவல் தொடர்பு சுமார் ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்களில் துண்டிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பயணத்திற்காக அமெரிக்க டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலில் இருந்து 5 பேர் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. 4 நாட்களுக்கு போதுமான ஒக்ஸிஜன் இருப்பதால் கப்பலில் உள்ளவர்களை பாதுகாப்பாக […]
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இந்த நாட்டில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது மிகவும் உணர்வுபூர்வமான விடயம், எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் வங்கி மற்றும் நிதி கட்டமைப்பிற்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படாத வகையில் மற்றும் […]
இலங்கையில் இந்திய நீர் மூழ்கிக் கப்பல் (Photos
இந்திய கடற்படைக்குச் சொந்தமான INS Vagir நீர்மூழ்கிக் கப்பல் இன்று(19) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைய குறித்த கப்பலுக்கு வரவேற்பளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 67.5 மீட்டர் நீளமுடைய நீர்மூழ்கிக் கப்பலொன்றே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 60 ஊழியர்களுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பலின் கட்டளைத் தளபதியாக கமாண்டர் S.திவாகர் செயற்படுகின்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள யோகா நிகழ்வொன்றில் இலங்கை மற்றும் இந்திய கடற்படை உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த […]
வேறொரு நாட்டை தாக்க ரஷ்யா தயாராகிறதா?
ஸ்வீடனுக்கு எதிராக ரஷ்ய இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாத அச்சுறுத்தல் என ஸ்வீடன் பாராளுமன்றத்தின் பாதுகாப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. சுவீடனின் அரச தொலைக்காட்சி சேவை நேற்று (18) அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ஸ்வீடனும் நேட்டோ உறுப்புரிமைக்கு விண்ணப்பித்தது மற்றும் நாட்டின் பாதுகாப்புப் படைகளின் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், ஸ்வீடனின் கோரிக்கைக்கு துருக்கி மற்றும் […]
இந்துக்களின் பெரும் சமர்
கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான இந்துக்களின் 12வது கிரிக்கெட் பெரும்சமர் 2023 க்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு கொழும்பு 08ல் அமைந்துள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (P Sara Oval), நடைபெற்றது. இந்துக்களின் பெருஞ்சமருக்கு ஒரு வரலாறு உண்டு. 1981 ஆம் ஆண்டிலேயே இந்துக்களின் கிரிக்கெட் பெருஞ்சமர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்றால் ஆச்சரியம் தான். ஆனால் அதுதான் உண்மை. என்றாலும் நாட்டில் ஏற்பட்ட […]
மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், இதன் காரணமாக சுனாமி அபாயம் எதுவும் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
டயகம புனித அந்தோனியார் ஆலய திருவிழா
டயகம தூய அந்தோனியார் ஆலய வருடார்ந்த திருவிழா ஒரே குடும்பம்,ஒரு அவை,ஒரே மறைப்பணி எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது. கண்டி மறைமாவட்ட குருமுதல்வர் அதிவணக்கத்துக்குறிய எல்வின் பீட்டர் பெர்ணான்டோ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருவிழாவின் போது டயகம பகுதியில் காணப்படுகின்ற ஏராளமான பொதுமக்கள் இன,மத வேறுபாடின்றி கலந்து சிறப்பித்தனர். மேலும் புனித அந்தோனியாரின் திருவுருவ சிலை டயகம நகர் முழுவதும் பவனியாக கொண்டு செல்லப்பட்டு அடியவர்களுக்கு அன்னதானம் வழங்க்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவு பெற்றது.