இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான 16 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஒரு வருடத்துக்கும் மேலாக ஷாஹீன் ஷா அப்ரிடி டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டு, புதிய வீரர்களான மொஹமட்ஹரேரா மற்றும் ஆர்மர் ஜமால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது […]

“தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048”

“தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” இனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் மேற்படி வரைவு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அதன் கீழான ஏனைய நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் பலதரப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை உள்ளடக்கியதாக “தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” […]

தாலிக்கு பொன்னுருக்கல் மண்டபம்

கொழும்பு செட்டியார்தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ் மூலமாக முதற்தடவையாக தாலிக்கு பொன் உருக்கும் புனித இடமொன்று பழமுத்து முத்துக்கருப்பன் தங்க நகைமாளிகையில் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஆண் பெண் பெயர்களை தலை ஓலையொன்றில் எழுதி அதை ஒரு மஞ்சள் கயிற்றினால் சுருட்டி பெண்கள் கழுத்தில் கட்டி வந்தனர். பின்னாளில் அது தாலி என அழைக்கப்பட்டது. இவ்வாறான பழக்கத்தில் ஆரம்பித்த தாலியை செய்யும் போது சரியான […]

பிரான்சின் மேற்கு பகுதியில் நிலநடுக்கம்

பிரான்சின் மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தினால் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், பல கட்டிடங்களின் சுவர்களில் வெடிப்புகள் மற்றும் விரிசல்கள் காணப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கபபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரான்சில் 5 அலகுகளுக்கு மேல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்பது அரிதான நிகழ்வாகும், இது போன்ற நிலநடுக்கம் கடந்த […]

உலக சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு கெஹானி தகுதி

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜிம்னாஸ்டிக் போட்டியில் இணைந்துகொண்ட மில்கா கெஹா 53 பெண் வீராங்கனைகள் மத்தியில் ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் பத்தாவது இடத்தை வென்றார். அதன்படி இந்த ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு மில்காதகுதி பெற்றார். பல சர்வதேச போட்டிகளில் அனுபவம் வாய்ந்த ஜிம்னாஸ்டிக் வீரரான மில்கா கெஹானி, 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இங்கிலாந்து 393 ஓட்டங்கள்

பெர்மிங்ஹமில் நடைபெறும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் முடிவில் நாளில் தமது முதல் இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 393 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடை நிறுத்தியது. இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற இங்கிலாந்து  அணி 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அவுஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களை பெற்று இன்றைய இரண்டாம் நாளில் துடுப்பெடுத்தாடவுள்ளது.  

புடினின் திட்டம்

பெலாரஸில் ரஷ்யா அணு ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் எல்லை அல்லது அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவை பயன்படுத்தப்படும் என புடின் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு ஊடகங்களும் உக்ரைனை தாக்குவதற்கு அணு ஆயுதங்களை (கிரெம்ளின் திட்டங்கள்) பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் இல்லை என கூறியுள்ளது. ரஷ்ய அணு ஆயுதங்களை மூலோபாய ரீதியாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி அறிவித்திருந்தார். சமீபத்தில், பெலாரஸ் தலைவரும் தனது […]

மண் மேடு சரிந்து விழுந்து இருவர் பலி

மண் மேடு சரிந்து விழுந்ததில் இருவர் புதையுண்டுள்ளனர். நுவரெலியா வெடமன் வீதி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமொன்றுக்கு அருகில் சுவரைத் தயார்படுத்தும் போது, ​​அங்கு வேலை செய்து கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் இடிந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 23 மற்றும் 43 வயதுடைய பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

டிப்ளோமாதாரிகள் 7342 பேருக்கு ஆசிரியர் நியமனம்

அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா,ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார். அலரி மாளிகையில் இன்று (16) இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி […]

ஐரோப்பாவில் மிக மோசமான படகு விபத்து பற்றிய கூடுதல் தகவல்கள்…

கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்பகுதியில் விபத்துக்குள்ளான மீன்பிடி கப்பலில் சுமார் 750 குடியேற்றவாசிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் நூறு பேர் சிறுவர்கள் என சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவின் மிக மோசமான புலம்பெயர்ந்தோர் படகு விபத்தாக கருதப்படும் இந்த விபத்தில் 78 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 104 பேர் கிரேக்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சட்டவிரோத குடியேற்ற மனித கடத்தலில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் எகிப்தியர்கள் எனவும் […]