ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதியின் புனரமைப்பு குறித்து முடிவு (PHOTOS)

ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதியின் (Low level Road) புனரமைப்புப் பணிகளை 03 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த செயற்திட்டத்தின் தாமதத்திற்கு காரணமான விடயங்கள் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து, எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்த ஜனாதிபதி, திட்டப் பணிகள் பாதிக்கப்படுவதற்கு மக்களின் பிரச்சினைகள் காரணமாக அமைந்திருந்தால், அவற்றுக்குத் தீர்வு காண முன் வருமாறு அப்பகுதி அரசியல் பிரமுகர்களுக்கு அறிவுறுத்தினார். இன்று (16) முற்பகல் […]

பிபோர்ஜோய் புயல்: – 2 பேர் பலி

பிபோர்ஜோய் புயல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த புயல் இன்று இந்திய – பாகிஸ்தான் எல்லையில் கரையை கடந்துள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன. இதனால் மேலும் 22 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. ஜாகவ் துறைமுகத்தில் கரையை கடந்தபின்பும் பிபோர்ஜோய் புயலின் சீற்றம் தணியவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

கனடாவில் பயங்கர விபத்து

மத்திய கனடாவின் மனிடோபா மாகாணத்தில் இடம்பெற்ற  விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரவூர்தியும் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 25 பேர் பயணித்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் வயோதிபர்கள் எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதிவேகமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் தாயும் மகளும் பலி

வவுனியா – கன்னாட்டி பகுதியில் இன்று(16) காலை இடம்பெற்ற விபத்தில் தாயும் அவரது 6 வயதான மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இன்று (16) காலை 7மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் வீட்டிற்கு முன்னால் உள்ள வீதி ஓரத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். இதன்போது வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பா் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நின்ற அவர்கள் மீது […]

குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகளை ஏனையவர்களுக்கு வழங்கும் தீர்மானம் இல்லை

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி வண.எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தனது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். விகாரைக்குச் சொந்தமில்லாத காணிகளை பொதுமக்களிடம் கையளிக்குமாறு பணிப்பரை விடுக்கப்பட்டதாக ஊடகங்கள் மூலம் அறியமுடிந்தது. விகாரையை சுற்றிலும் பல்வேறு பௌத்த விஹாரைகளின் இடிபாடுகள் சிதறிக்கிடப்பதால் அங்குள்ள காணிகளை பகிர்ந்தளிப்பது பொறுத்தமற்றதெனவும் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் கடிதத்தில் […]

ஆஷஸ் டெஸ்ட்- இன்று ஆரம்பம்

இங்கிலாந்து -அவுஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் பர்மிங்காமில் தொடங்குகிறது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி கடந்த வாரம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்ட பாணி, வலுவான அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு எதிராக எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இங்கிலாந்து […]

படகு கவிழ்ந்து 100 அகதிகள் உயிரிழப்பு

லிபியாவில் இருந்து இத்தாலிக்கு நூற்றுக்கணக்கான அகதிகளுடன் சென்ற மீன்பிடி கப்பல் கிரீஸ் அருகே நடுக்கடலில் பழுதாகி கவிழந்தது. இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளதுடன அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் 7  எகித்தியர்கள் சந்தேகதில் கைதாகியுள்ளதாக BBC மேலும் தெரிவிதுள்ளது.

கருத்துரிமையை பறிக்கமாட்டேன்: ஜனாதிபதி

குற்றவியல் அவதூறு சட்டத்தினை நீக்கிய தான் ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயற்படப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். உத்தேச ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக எவருக்கேனும் நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வழி ஏற்படுத்தும்  எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். உலகின் அனைத்து நாடுகளும் இலத்திரனியல் ஊடக பாவனையின் போது இவ்வாறான செயன்முறைகளை பின்பற்றுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி  இலங்கையில் அந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது ஐக்கிய ராச்சியத்திலுள்ள முறைமையை முழுமையாக […]

மாலிங்கவுக்கு புதிய பொறுப்பு

IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லசித் மாலிங்க மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லசித் மலிங்க இம்முறை பயிற்சியாளராக இணைந்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் ஆரம்பிக்கப்படவுள்ள Major League Cricket  T20 தொடரில் லசித் மலிங்க பந்துவீச்சு பயிற்சியாளராக  இணைந்து கொள்ளவுள்ளார். தொடரில் கெய்ரன் பொல்லார்ட் MI அணியை வழிநடத்துவார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசியக் கிண்ணம் இலங்கையில்…

2023 ஆசியக் கிண்ண போட்டிகளை இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இணைந்து நடத்த ஆசிய கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2023 ஆசியக் கிண்ண போட்டிகள் ஓகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 17 வரை நடைபெறும் என பேரவை இன்று (15) அறிவித்துள்ளது. இதன்படி 13 போட்டிகள் கொண்ட தொடரில் 04 போட்டிகள் பாகிஸ்தானிலும் 09 போட்டிகள் இலங்கையிலும் நடத்த ஆசிய கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பை […]