நோய்க்காரணி மற்றும் வைரஸின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – டெங்கு ஒழிப்பு நிபுணர் குழு

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நுளம்புகள் மூலம் டெங்கு பரவுவதால், அனைத்து காய்ச்சல் நோயாளிகளையும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தை மக்களிடம் விரைவில் கொண்டு செல்ல வேண்டும் என டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவி இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். எனவே, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களைப் போன்று டெங்கு நோய்ப் பாதிப்பு உறுதிப்படுத்தப்படும் வரை காய்ச்சல் ஏற்பட்டுள்ள அனைத்து நோயாளிகளையும் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவதற்கு மக்களை […]

இரண்டு வழிகளில் செல்ல முடியாது – ஜனாதிபதி (Photos)

உலகில் உள்ள ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடும் அந்த நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாகவே முன்னோக்கி வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். எனவே, 2048 ஆம் ஆண்டில் அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்குகளை அடைவதற்கு முறையான கல்வி முறைமை மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாட்டிற்கு தேவை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை தயாரிப்பதற்கான அமைச்சர்கள் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முதலாவது கலந்துரையாடலில் நேற்று (14) பிற்பகல் […]

LPL ஏலம்

LPL வீரர்கள் ஏலம் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் தொடங்கியது. முதன்முறையாக நடைபெறும் எல்பிஎல் போட்டியின் வீரர் ஏலத்தில் 360 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 204 இலங்கை வீரர்களும் 156 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். இந்த ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசிம் அக்ரம், இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திசர பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

மாற்றங்களுக்கு தயாராகும் இந்திய டெஸ்ட் அணி?

இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் எதிர்பார்த்ததை விட வேகமாக மாற்றங்களுக்கு தயாராகி கொண்டிருக்கிறது அல்லது தயாராக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. அதுவும் முக்கியமாக டெஸ்ட் அணி பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்திய அணி தொடர்ச்சியாக இரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த இரு தோல்விகளும் ரோஹித் சர்மா, விராட் கோலி,புஜாரா உள்ளிட்டோர் தங்களது டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி […]

பிரான்ஸ்லிருந்து ஜனாதிபதிக்கு வந்த அழைப்பு

புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாடு பிரான்ஸின் பெரிஸ் நகரில் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ‘தற்போதைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளத உலக சமூகத்தை பாதித்துள்ள பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து இந்த மாநாட்டின் ஊடாக […]

குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றேன் – டிரம்ப்

தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடா மியாமி பெடரல் நீதிமன்றத்தில் அவர் இதனை தெரிவித்தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் போது அரச ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சாட்சியம் வழங்கிய போதே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

5,500 பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் சேவைக்கு

விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல் மற்றும் வர்த்தகம் போன்ற பாடங்களுடன் தொடர்புடைய மூன்று மொழி ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது. அத்துடன், 7,500 கல்லூரி ஆசிரியர்களுக்கு இம்மாதம் 16ஆம் திகதி புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். பௌதீக வளங்களையும் மனித வளங்களையும் பூர்த்தி செய்வதன் மூலம் மாத்திரம் கல்வியை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் அதற்கு மாணவர்களின் ஒழுக்கம் இன்றியமையாதது எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூகத்தில் உள்ள போதைப்பொருள் போன்ற தவறான […]

ஓகஸ்ட் மாதத்திற்குள்…

நாட்டின் சந்தை இயல்பு நிலைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கடனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று அவர் கூறுகிறார். ஓகஸ்ட் மாதத்திற்குள் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்குக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

IPL இல்லனா என்ன..LPL இருக்கு…

LPL ஏலப்பட்டியலில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பெயரை பதிவு செய்துள்ளார். ஜூன் 14ம் திக தி கொழும்பில் ஏலம் நடைபெற உள்ளது. போட்டிகள் ஜூலை 31ந் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடக்க சீசனில் இருந்து ஒரு சிறந்த வீரராக ஜொலித்தவர். அவர் ஐபிஎல்லில் 205 போட்டிகளில் விளையாடி 5,500 ரன்களை குவித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ரெய்னா, ஐபிஎல்லில் சிஎஸ்கே மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் உள்நாட்டு […]

டெங்கு அதிகரித்து வருகிறது

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பணிப்பாளர் டொக்டர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். இதனால், சரியான முறையில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், வரலாற்றில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவான ஆண்டாக இந்த வருடம் மாறும் அபாயம் உள்ளதாக டொக்டர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். இவ்வருடம் 43 ஆயிரத்து 346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். சுமார் 2 வீதமான குடியிருப்புகள் நுளம்புகள் பெருகும் இடங்களாக இனங்காணப்பட்டுள்ளன.