சீனா அணு ஆயுதங்களை விரிவுபடுத்துகிறது

சீனா தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வேகமாக விரிவுபடுத்தி வருகிறது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐபிஆர்ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனாவிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 350 அணு ஆயுதங்கள் இருந்தன. தற்போது சீனாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவிடம் 164 அணு ஆயுதங்கள் உள்ளன. 2030ம் ஆண்டுக்குள் அமெரிக்கா அல்லது ரஷ்யாவிடம் […]

ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு

இலங்கை மக்களில் சுமார் 75 இலட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேலைத்திட்டம்(WFP) மற்றும் உணவு பாதுகாப்பு, விவசாய அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ள உணவு பாதுகாப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை (CFSAM) இலங்கையின் உணவு பாதுகாப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். உலக உணவு வேலைத்திட்ட உதவிச் செயலகத்தின் (PSWFPC) […]

சீனாவில் இருந்து பறக்கும் தட்டு

சமீபத்தில் சீனாவின் ஷென்சென் நகரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பறக்கும் தட்டு ஒன்று புறப்பட்டது. 3 வருட முயற்சிக்குப் பிறகு, ஷென்சென் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தொழில்நுட்பக் கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த பறக்கும் தட்டு 200 மீட்டர் உயரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அதாவது அதிகபட்சம் 15 நிமிடங்கள் ஆகும்.

3 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய நபர் சந்தேகத்தின் பேரில் கைது

ஐக்கிய இராச்சியத்தின் நொட்டிங்ஹாம் நகர மையத்தில் 3 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக BBC செய்தி தெரிவிக்கிறது. இருவரின் சடலங்கள் இல்கெஸ்டன் வீதிப் பகுதியிலும் மற்றுமொரு சடலம் மக்தலா பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நொட்ங்ஹாம்ஷயர் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமனம்

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார். சத்தியப் பிரமாண நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த நவீன் திஸாநாயக்க,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்காக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார். கடந்த காலங்களில் நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த போதிலும் ஜனாதிபதியால் நடைமுறைப்படுத்தப்பட்ட சரியான திட்டங்களின் பலனாக சாதகமான மாற்றங்களை காண முடிவதாக […]

LPL ஏலத்தில் ஒரு அணி 16 முதல் 20 வீரர்களை வாங்கலாம்.

நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. அந்த தொடருக்கான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்வு நாளை (14) கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் 200 தேசிய வீரர்களும், 160 வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். பிரபல இந்திய அறிவிப்பாளரான சாரு ஷர்மா இந்த ஏலத்தை நடத்துவார் என லங்கா பிரீமியர் லீக், போட்டிப் பணிப்பாளர் சமந்த தொடன்வெல தெரிவித்தார். சுமார் 500 வெளிநாட்டு […]

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையானது கற்பனைகளை மையமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தேசிய பாதுகாப்பு என்ற சொல்லை அவர்கள் போராட்டத்திற்கான தொனிப்பொருளாக மாற்றிக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் ‘101கதா’ கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டபோதே இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் […]

பாகிஸ்தானில் கனமழை – 34 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபர், பக்தூங்வா மாகாணங்களில் கனமழை பெய் வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பானு, திகான், லக்கி மார்வாட், கராக் ஆகிய 4 மாவட்டங்களில் வீடு, சுவர், மரம் விழுந்து இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 200 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. நிவாரண பணிகளை மேற்கொள்ள கைபர் பக்தூங்வா மாகாண அரசு சார்பில் 1.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பலத்த மழையுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் […]

தமிழ் பெளத்த வரலாற்றை ஏற்றுக்கொண்டமைக்காக ஜனாதிபதி ரணிலை பாராட்டுகிறேன் – மனோ

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சாவியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,    தமிழரசு கட்சியினருடனான கலந்துரையாடலின் போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி […]

டெங்கு அபாயம்

மட்டக்களப்பு, கண்டி, குருணாகல், புத்தளம், காலி மாவட்டங்களில் மீண்டும் டெங்கு காய்ச்சல் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலையுடன் இந்த நிலைலை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 43346 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 21654 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக […]