மோடியை சந்திப்பதற்கு ஜனாதிபதியுடன் ஜீவன்னும் பயணம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்கின்றார். இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை குழுவினர் பேச்சு நடத்தவுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல். பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. பாரத பிரதமருடனான சந்திப்பின்போது மலையகம் […]
டென்னிஸ் தரவரிசை…
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-1), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் நோவக் ஜோகோவிச் வென்றுள்ள 23வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் […]
டிரம்ப் மீதான விசாரணை இன்று…
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராக மியாமி வந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் இரகசிய ஜனாதிபதி ஆவணங்களை வைத்திருந்ததற்காக மியாமி ஃபெடரல் நீதிமன்றத்தில் 37 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (12) தனது தனி விமானத்தில் மியாமி வந்தடைந்த டொனால்ட் ட்ரம்ப் தனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளார். மியாமி நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக மியாமி […]
நீர் விநியோகம் தடைப்படும்
பல பிரதேசங்களில் மணி முதல் அடுத்த நாள் (14) காலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பெலன்வத்தை, கனத்த வீதியில் உள்ள நீா் வௌியேற்றும் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொரக்காபிட்டிய, சித்தமுல்ல, எரவ்வல, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதி, எதிரிசிங்க மாவத்தை, மொரகெட்டிய வீதி, மெதவெல வீதி, பொகுந்தர வீதி […]
தங்க கிண்ண தொடரை கைப்பற்றியது யங்பேர்ட்ஸ் அணி.
நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான லீக் போட்டி தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் 2022 ஆம் ஆண்டு 2023 ஆம் ஆண்டுக்கான தங்க கிண்ணம் மற்றும் வெள்ளி கிணங்களுக்கான பரிசளிப்பு விழா நுவரெலியா மாநகர சபை பொதுமைதானத்தில் இடம்பெற்றது. இதன் போது முன்னாள் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் இப்பரிசளிப்பு விழாவானது நடைபெற்றது. தங்கக் கிண்ண இறுதிப் போட்டியில் யங் பேர்ட்ஸ் மற்றும் […]
இத்தாலியின் முன்னாள் பிரதமர் காலமானார்
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார். இறக்கும் போது அவருக்கு 86 வயது . மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மரணமடைந்ததாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1994 முதல் முறையாக சில்வியோ பெர்லுஸ்கோனி பிரதமரானார். மேலும் 2011 வரை நான்கு முறை இத்தாலிய பிரதமராக சில்வியோ பதவி வகித்துள்ளார்.
கில்லுக்கு அபராதம்…
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கில்க்கு அபராதம் விதிக்க ICC நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, போட்டி கட்டணத்தில் 15மூ அபராதமாக வசூலிக்க கிரிக்கெட் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஓவல் மைதானத்தில் நடந்த இந்தியா-அவுஸ்திரேலிய இடையேயான போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்காவது நாளில், கேமரூன் கிரீனின் கேட்ச் மூலம் கில் ஆட்டமிழந்தார். அந்த கேட்ச் பற்றி கில் விமர்சனக் கருத்துக்களை தெரிவித்திருந்தார். போட்டியின் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேவையான ஓவர்களை […]
வரைவு போட்டி அட்டவணை,இந்தியா- பாகிஸ்தான் போட்டி?
இந்தியாவில் ஓக்டோபர் 5 ம் திகதி 50 ஓவர் உலகக் குpண்ண கிரிக்கெட் தொடர் தொடங்கி நவம்பர் 19திகதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ தயார் செய்து வருகிறது. இந்த நிலையில் வரைவு போட்டி அட்டவணையை பிசிசிஐ ஐசிசி-க்கு அனுப்பியுள்ளது. அந்த வரைவு போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் […]
மக்கள் விசனம்
மஸ்கெலியா, பிரவுன்சிக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயா ஊடாக 600 லட்சம் ரூபா செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதன்மூலம் மக்களுக்கு உரிய பயன் கிட்டவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீதி புனரமைக்கபடாமல் உள்ளதாலேயே பாலத்தால் பயன் இல்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது. மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதிக்கு வருவதற்கான பிரவுன்சிக், எமலின் தோட்ட வீதி கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனை புனரமைப்பதற்கு பல வருடங்களாகியும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வீதியில் நடந்துசெல்வதற்கு […]
நுவரெலியாவில் மலையக தொழிலாளர் முன்னணியின் கிளைக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது
மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியின் கிளைக்காரியாலயம் நுவரெலியா நகரத்தில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.ராதாகிருஷ்ணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா நகருக்குட்பட்ட மக்கள் தங்கள் பிரச்சனைகளையும் அதேபோல தொழிற்சங்க பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க எவ்வித கட்சி பேதமின்றியும் இக்காரியாலயம் செயற்படுமென ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். இக்கிளைக்காரியாலய திறப்பு விழாவில் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், மலையக மக்கள் முன்னணி […]