அமெரிக்காவில் முக் கொலை
அமெரிக்காவின் மேரிலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் யார்?
உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரா என்பதை தீர்மானிப்பது எனது வேலையல்ல என சூப்பர் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார். பிரெஞ்சு டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு அவர் கூறினார். இது அவரது 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர். ரஃபேல் நடால் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மேலும், செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், மார்கரெட் கோர்ட்ஸ் உலகிலேயே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அடுத்த சாம்பியன்ஷிப்புக்காக போராட போகிறோம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக கடந்த நான்காண்டுகளில் கடினமாகவே உழைத்திருக்கிறோம். நிறைய போராடியிருக்கிறோம் என்று தோல்விக்கு பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன் மூலம் அவுஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது. இந்தியா 2 வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய […]
ஜோகோவிச் புதிய சாதனை
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூடை 7-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதன்மூலம், 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனையை படைத்துள்ளார். மேலும், ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் முதலிடம் பிடித்தார். 3வது முறையாக பிரெஞ்சு […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அவுஸ்திரேலியாவுக்கு
உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) மகுடத்தை அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை தோற்கடித்து வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது. அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சுக்கு 469 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இந்திய அணியால் 296 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பளித்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய […]
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளை நடத்துவது குறித்து முடிவு
2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இணைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வைத்த முன்மொழிவுக்கு ஆசிய கிரிக்கெட் சபை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, 13 போட்டிகளில் 04 அல்லது 05 போட்டிகள் பாகிஸ்தானிலும், இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் இலங்கையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், போட்டி தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் சில தினங்களில் ஆசிய கிரிக்கட் சபை […]
கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டும்
அன்று, இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (09) பிற்பகல் இடம்பெற்ற “CVCD Excellence Awards” நிகழ்வில் […]
காணாமல் போன சிறுவர்கள் வெளியில் வந்த அதிசயம்
கொலம்பியாவில் கடந்த மே 1 ஆம் திகதி விமான விபத்தில் மூன்று பயணிகள் உயிரிழந்தனர். விமான விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 13 வயதுக்குட்பட்ட 4 பிள்ளைகள் காணாமல் போயினர். அவர்கள் கொலம்பிய பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் காணாமல் போன சிறுவர்களின் தாய் மற்றும் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். விபத்திற்குப் பிறகு, 100 க்கும் மேற்பட்ட கொலம்பிய சிறப்புப் படை அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் குழு காணாமல் போன குழந்தைகளைக் […]
கடனுதவியை பெற இலங்கைக்கு தகுதியுள்ளது – ADB
அவசர அபிவிருத்தி நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படும் சலுகை கடனுதவியைப் பெறுவதற்கு இலங்கைக்கு தகுதியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளது. குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் சலுகை உதவிகளை பெற்றுக்கொள்வதன் மூலம், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுத்தல், வறிய மற்றும் பாதிப்பை எதிர்நோக்கக்கூடிய மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட அவசர அபிவிருத்தி நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான இலங்கையின் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் உறுப்பு நாடுகளில், […]
ஜோன்சன் வீடு செல்கிறார்
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பிரதமராக கடமையாற்றிய போது கொவிட் பரவிய காலப்பகுதியில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டே இதற்கு காரணம் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த குற்றச்சாட்டால் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியையும் இழந்தார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இடைநிறுத்துவது குறித்து போரிஸ் ஜோன்சனுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளிநாட்டு […]