எந்த நேரத்திலும் மாறத் தயார் – தசுன்

எந்த நேரத்திலும் தனது நிலையை மாற்றிக்கொண்டு விளையாட தயாராக இருப்பதாக இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக சிம்பாப்வே செல்வதற்கு முன்னர் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறையின் அதிகபட்ச பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும்

நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத்துறையின் அதிகபட்ச பங்களிப்பை பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் தனித்துவமான சமையல் கலையானது உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளதுடன், அதனை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நேற்று (09) ஆரம்பமான (Culinary Art Food Expo 2023) சமையல் கலை மற்றும் உணவுக் கண்காட்சி 2023″ இன் […]

ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதி விபத்து

ஜப்பான் விமான நிலையத்தில் 2 பயணிகள் விமானங்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானதால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய் ஏர்வேஸ் மற்றும் ஈ.வி.ஏ ஏர் நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்து காரணமாக விமான நிலையம் வழியாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படலாம் […]

கல்வி இராஜாங்க அமைச்சரிடம் இருந்து மகிழ்சியான அறிவிப்பு

கல்வியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்பட உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையில் கல்வி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக எதிர்வரும 16 ஆம் திகதி 2500 பேருக்கும் ஏனையோருக்கு மாகாண ரீதியாகவும் நியமனங்கள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

வெற்றி நமதாகட்டும்…

உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிம்பாபே நோக்கி சென்றுள்ளது. அங்கு இலங்கை அணி முதலில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு அணிகளுடன் பயிற்சிக்கு முந்தைய இரண்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகளுடன் இணைந்து சிம்பாபே புலவாயோ மற்றும் ஹராரே கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் தகுதிச் சுற்று […]

நாங்க ரெடி நீங்க ரெடியா?…

எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன (SLPP) தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தேர்தலுக்கு நாங்கள் தயார். ஜனாதிபதி தேர்தலுக்கு கூட நாங்கள் தயார்.

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை, கடுமையான குறைபாட்டைக் காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது. குறிப்பாக, இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் […]

ஜனாதிபதி நியமித்துள்ள இரண்டு சிறப்புக் குழுக்கள்

நாட்டிற்குள் கொவிட்-19 பரவல் மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். 2023 ஜூன் மாதம் 22 திகதியிட்ட எண். 23/இதர/026 இன் படி, அமைச்சரவை தீர்மானத்திற்கு ஏற்ப இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அமைச்சர்கள் குழுவில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 08 பேர் அங்கம் வகிக்கின்றனர். நாட்டில் கொவிட்-19 மற்றும் டெங்கு நோயைக் […]

இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஒப்புதல் அளித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. தசுன் ஷனக தலைமையிலான அணியில் திமுத் கருணாரத்ன, மத்திஷ பத்திரன ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். குசல் மெண்டிஸ், பதும் நிஸ்ஸங்க, சரித் ஹசலங்க, தனஞ்சய டி சில்வா, சதிர சமரவிக்ரம, வனிது ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமிர, கசுன் ராஜித, லஹிரு குமார, மஹிஷ் தீக்ஷன, […]

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொருத்தமான சட்டம் தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்துக – ஜனாதிபதி

நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பில் நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 05 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. உண்மை மற்றும் நல்லிணக்க […]