சரியானதை செய்துவிட்டு தோல்வி அடைந்தால்கூட பரவாயில்லை – ஜீவன்
” நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை. கௌரவமானதொரு அரசியல் கலாசாரத்தையே விரும்புகின்றேன். தவறு செய்து வெல்வதைவிட, நல்லது செய்துவிட்டு தோற்றால்கூட அது நிம்மதிதான். எனவே, கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம் என எதிரணியில் உள்ள சில உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (09) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் […]
இறுதிச்சடங்கில் குண்டு வெடிப்பு…
வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் தலிபான் அதிகாரிகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கான தேசிய முன்மொழிவொன்றைத் துரிதமாக தயாரிக்குமாறு பணிப்புரை
இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்தல் மற்றும் துரிதபடுத்தலுக்கான முன்மொழிவொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான குழுவின் (NTFC) செயற்திறன் மீளாய்வு கூட்டத்தின் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்படி அறிவுரைகளை வழங்கினார். இலங்கைக்குள் வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான உகந்த சூழலை கட்டமைப்பதற்கான துரிதமானதும் மிக முக்கியமானதுமான தீர்மானங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் […]
ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் இலங்கை வீரா்கள்…
தென்கொாியாவில் இடம்பெற்ற 20 வயதிற்கு உட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் பதக்கங்களை வென்ற இலங்கை குழாம் நேற்று(8) இரவு நாடு திரும்பியது. ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் இலங்கை, 4 தங்க பதக்கங்களையும், 2 வௌ்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளது. இந்த போட்டிகளில் பெண்களுக்கான 800 மீட்டா் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 400 மீட்டா் ஓட்டப்போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தையும் தருஷி குருணாரத்ன வென்றாா். இதேவேளை, 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் இலங்கை […]
டிரம்ப் மீது மீண்டும் குற்றச்சாட்டு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு சொந்தமான இரகசிய கோப்புகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை மியாமி பெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரலில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதுடன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தொடர்பில் இவ்வாறான விசாரணை ஆரம்பிக்கப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் ஜனாதிபதித் […]
குரங்கு அம்மை பற்றி சுகாதார துறையின் அறிவிப்பு
குரங்கு அம்மை நோய் தொடர்பில் சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் தலைமை தொற்றுநோய் நிபுணர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். இலங்கையில் இனங்காணப்பட்ட குரங்கு அம்மை நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக அதிகரித்துள்ளது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு குரங்கு அம்மை பரவுவது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும், எனவே இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் வைத்தியர் சமித்த கினிகே மேலும் தெரிவித்தார்.
TNA – ஜனாதிபதி சந்திப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் (TNA) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று மாலை மற்றுமொரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வடக்கு. கிழக்கில் நிலவும் காணி விடுவிப்பு, அதிகார பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சபை தேர்தல் குறித்தும் மேற்படி கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இந்த சந்;திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இலங்கை தமிழரசுக் […]
நுகர்வோருக்கு தொடர்ச்சியான எரிபொருள்
இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம் ,ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc) நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே.மாபா பத்திரன மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் தலைவர் ஜெஸ்டின் […]
மலையகத்தில் சிலர் கோமாளிக்கூட்டங்களாக இருக்கின்றனர்
(க.கிஷாந்தன்) அரசியலில் ஓரங்கட்டப்பட்டு அநாதைகளாக்கப்பட்டுள்ள ஒரு சில கோமாளிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும், அதன் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானையும் விமர்சித்து அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரிவிற்கான பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கொட்டகலை பிரதேச சபை தவிசாளருமான ராஜமணி பிரசாத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய ஊடகங்களில் தமக்கு இடமில்லை, அதாவது ஊடகங்களில் செய்திகள் வெளியாகும் அளவுக்கு தாம் எதையும் செய்யவில்லை, இன்னும் […]
என் பெயர் வேண்டாம்! எம் மக்களுக்கு காணி கிடைத்தால் போதும்
தோட்டம் என்றால் அங்குள்ள தேயிலை, இறப்பர் பயிர்கள் மற்றும் காணி அல்ல. அது அங்கு உயிர் வாழும் மக்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ”இன்றைய ஜனாதிபதி பிரதமராக இருக்கும் போது இதோ இந்த இடத்தில் இருந்து எனக்கு வாக்குறுதி அளித்தார். காய்கறி பயிரிட்டு உணவு பிரச்சினையை தீர்த்துக்கொள்ள, தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு, காணி தருவதாக சொன்னார். விவசாய, பெருந்தோட்ட அமைச்சர்களை, எம்முடன் தொடர்பு […]