பிரான்ஸின் Annecy நகரில் கத்திக்குத்து

பிரான்ஸின் Annecy நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 8 சிறுவர்கள் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சிரியாவிலிருந்து தப்பிச் சென்றவர் எனத் தெரியவந்துள்ளது.

அடைமழை

சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் நேற்று (7) முதல் அடைமழை பெய்து வருகிறது இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது. தொடர்ந்தும் மழை காரணமாக அன்றாட தொழிலில் ஈடுபடுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று (8) அதிகாலை முதல் பெய்து வரும் மழை காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மழையுடன் பனி மற்றும் குளிரான காலநிலை காணப்படுவதனால் தொழிலாளர்கள் தொழிலிலுக்கு ​செல்வதில்லை சிரமத்திற்கு […]

‘இன்டர் மியாமி அணியில் இணைகிறேன்’ – மெஸ்ஸி

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, இன்டர் மியாமி கால்பந்தாட்ட கிளப் அணியில் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இது நூறு வீதம் உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் பிஎஸ்ஜி கால்பந்தாட்ட கிளப் அணியில் இருந்து மெஸ்ஸி வெளியேறினார். அப்போது முதல் அடுத்ததாக அவர் இணைய உள்ள அணி எது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மீண்டும் தனது பழைய அணியான பார்சிலோனா அணியுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் […]

இதுவரை 41883 டெங்கு நோயாளர்கள்

 இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41883 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 22.1 வீதமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் 21 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் தற்போது 67 சுகாதார வைத்திய அதிகாரி […]

“ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு”

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய “ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” நூலின் மூன்றாம் பதிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட இந்நூல் முதன்முதலில் 2017 இல் வெளியிடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஜனாதிபதியின் விசேட திட்டப்பணிப்பாளர் தீக்‌ஷன அபேவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் […]

உக்ரைன் அணை தகர்ப்பு- UN கண்டனம்

 உக்ரைனின் அணை தகர்ப்பு ஆயிரக்கணக்கான மக்களை மோசமான விளைவுகளை நோக்கி தள்ளி இருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையின் ஒரு பகுதியை, ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறுவதால் உக்ரைனில் உள்ள 10 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உக்ரைனின் கெர்சன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே, கடந்த 1956ம் ஆண்டு […]

கனடா வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீ

கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் வட அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடுமையான காட்டுத் தீயினால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் புகையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு கனேடிய அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுத் தீயினால் ஏற்படும் புகை மிகவும் ஆபத்தானது என்பதால், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முகமூடிகளை அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது, இல்லையெனில் சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டிலேயே இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா முழுவதும் பரவி வரும் […]

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இது தொடர்பான உடன்படிக்கைகள் நேற்று (07) கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். மாலத்தீவில் சுகாதார ஒத்துழைப்பு, கலாசார ஒத்துழைப்பு மற்றும் கலாசார மையத்தை நிறுவுதல் தொடர்பாக தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வுடன் இணைந்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் அணை மீது தாக்குதல்

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 1½ ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதம் அடைந்தது. அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் […]

அவசரமாக ரஷ்யாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா பயணிகள் விமானத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவின் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று புறப்பட்ட குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரஷ்யாவில் திடீரென தரையிறங்கியது. அந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் அமெரிக்கர்கள் என்றும் கூறப்படுகிறது. விமானத்தில் உள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், ரஷ்யாவில் விமானம் தரையிறங்குவது […]