ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு
இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக “கணினி செயலிகளை ” உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலமும் அரச நிறுவனங்களுக்காக “கணினி செயலிகளை” உருவாக்கும் பணி தனியார் நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், எதிர்காலத்தில் டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனங்களினாலேயே இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஆளும் மற்றும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் […]
தசுன் விமர்சனம்…
வெளியில் உள்ளவர்கள் நம்பவில்லை என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார். இன்று (07) இடம்பெற்ற போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் தசுன் ஷனக… “குறிப்பாக அனுபவம் அதிகம் உள்ள வீரர்கள் திறமையாக விளையாடுகிறார்கள். திமுத் மற்றும் ஏஞ்சலோ அணியில் இணைந்த பிறகு சூழல் நன்றாக உள்ளது. நம்பிக்கையும், ஏற்றுக்கொள்ளும் தன்மையும் […]
இந்திய நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு
இந்தியாவின் லக்னோவில் உள்ள நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் சஞ்சீவ் ஜீவா அங்கு உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் சிறு குழந்தை மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வழக்கறிஞராக நீதிமன்றத்தில் நுழைந்துள்ளார்
மனிதானிமான நடவடிக்கைகளில் இலங்கை, சர்வதேச அமைப்புக்களுடன் இணங்கிச் செயற்படும்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் , செம்பிறைச் சங்க சம்மேளனம் (IFRC) ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (07) காலை நடைபெற்றது. எதிர்வரும் ஜூன் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்க சம்மேளளத்தின் தலைவர்களுக்கான மாநாடு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் தெற்காசியாவிற்கான உலக அனர்த்த அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டதோடு (WDR 2022) அதன் […]
பொருளாதார பிரச்சினைக்கு பிரான்ஸ் பங்களிப்பை செய்ய வேண்டும் – ஜீவன்
மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்கள் எதிர்நோக்கும் போஷனை மற்றும் தற்சார்பு பொருளாதார பிரச்சினைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தனது பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜோன் போன்ஷுவா பெக்டே, அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, சௌமியமூர்த்தி […]
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய ODI தோல்வி
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவர்களில் 116 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் துஷ்மந்த சமிர 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். அதன்படி 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றிக்குத் […]
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புதிய வேலை
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வந்த பிராந்திய எரிசக்தி கட்டம் நிர்மாண வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மின் இணைப்புகளை ஒருங்கிணைப்பதற்குமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை – ஆப்கானிஸ்தான்: இறுதிப் ODI இன்று
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இறுதி ஒரு நாள் போட்டி இன்று (07) ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக இருப்பதால் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சட்டங்கள் தொடர்பில் விரிவான மறுஆய்வு
போட்டித்தன்மையுள்ள பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக காணிச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள், முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்கள் தொடர்பில் விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என கலாநிதி ஆர். எச். எஸ் சமரதுங்க வலியுறுத்தினார். அதற்கான சட்ட வரைபு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நுவரெலியாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
WTC – நாளை
டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. Australiya – India அணிகள் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன 2021 – 2023 ஆண்டுகளில், 9 அணிகள் பங்கேற்ற டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் முதல் மற்றும் இரண்டாவது அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதன்படி 19 போட்டிகளில் AUSTRALYA 11 போட்டிகளிலும், இந்தியா 18 போட்டிகளில் 10ல் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தன.