எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்தில்
உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்(Elon Musk) மீண்டும் முதலிடத்திற்கு முன்னெறியுள்ளார். இந்த பட்டியலில் இதுவரை முன்னிலையிருந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 74 வயதான பேர்னட் ஆர்னோல்ட் (Bernard Arnault) என்பவர். பேர்னட் ஆர்னோல்ட் மற்றும் எலான் மஸ்க் இடையே அவ்வப்போது போட்டித்தன்மை நிலவி வந்துள்ளது. இந்நிலையில், எலான் மஸ்க் மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார். Bloomberg Billionaires Index-இன் தற்போதைய கணக்கீட்டின் படி எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 192 பில்லியன் […]
கொட்டகலையில் இலங்கை மின்சார சபையின் நடமாடும் சேவை
கொட்டகலை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை மின்சார சபையின் ஹட்டன் கிளை காரியாலயத்தின் ஊடாக கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் தேவஸ்தானத்தில் 02/06/2022 நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது. இந்நடமாடும் சேவையூடாக புதிதாக மின்சாரம் இணைப்பை மேற்கொள்ள இருப்பவர்கள்,மின்சார பட்டியல் தொடர்பான விபரங்கள்,மின்சார பட்டியலின் பெயர்மாற்றம்,பாதிக்கப்பட்ட தூண்களை மாற்றுதல் உட்பட மின்சார சபையூடாக முன்னெடுக்கப்படும் சகல வேலைகளும் செய்து தர உள்ளதாகவும் கொட்டகலை நகரத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கொட்டக்கலை வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆப்கான் கிரிக்கெட் பிரபலத்திற்கு வந்த சோதனை
ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகளுக்கு இடையிலான இடையிலான ஒருநாள் தொடர் நாளை ஹம்பாந்தோட்டையில் தொடங்குகிறது. அந்த போட்டியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ரஷித் கான் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ரஷித் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 02 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது.
வசீகரித்த சூரிய அஸ்தமனம்
சூரிய உதயமும், அஸ்தமனங்கலும் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்கையில் ஒரு கணம் அமைதிப்படுத்தக் கூடியவை. அந்த மன அமைதியைதான் நியூயோர்க் பகுதிவாசிகள் நேற்று கடத்திருக்கிறார்கள். நியூயோர்க்கின் பரப்பரப்பான வீதிகளில் ஒன்று மன்ஹாட்டன். வானளவு உயர்ந்த கட்டிடங்களால் உலக அளவில் பெயர் பெற்றது மன்ஹாட்டன். இதில் மன்ஹாட்டனின் முக்கிய வீதிகளில் நேற்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இயற்கையின் கண்கொள்ளா காட்சியை தங்களது கைபேசிகளில் பதிவு செய்திருக்கிறார்கள். காரணம்… மன்ஹாட்டனின் பிரமாண்ட உயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் பிரமாண்ட சூரியன் மெல்ல […]
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை
கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில், தினசரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ளதாக வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்தார். இதேவேளை, கடந்த வாரத்தை விட 24 மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரவுகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 39028 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
“தேசிய மாற்றத்திற்கான கொள்கைத்திட்டம்” : ஜனாதிபதி விசேட உரை
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார். அனைத்து பொது மக்களையும் தெளிவுபடுத்துவதற்காக இந்த விசேட உரை இரவு 8.00 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி, வானொலி மற்றும் நவீன ஊடகங்களிலும் ஒளி ஒலிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இதன்மூலம், தேசிய மாற்றத்திற்கான கொள்கைத்திட்டம் தொடர்பில் […]
கடன் மறுசீரமைப்பு குறித்து அவசர கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும்(Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்தும் ஆராயப்பட்டது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, […]
கச்சத்தீவை போல காவிரியை தாரைவார்க்க தயாராகிவிட்டீர்களா?
“கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய மேகதாது விவகாரத்தில் கண்டன குரல் கொடுக்காமல் ஏன் வந்தார்? தங்கள் ஆட்சியின் போது கச்சத் தீவை தாரைவார்த்தது போல் இப்போது காவிரியையும் தாரை வார்க்க தயாராகி விட்டீர்களா?” என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராகவும், நீர்வளத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார் […]
அரச பொசன் செலவு
2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச பொசொன் நிகழ்வுக்கும், மிஹிந்தல புனித பூமியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொசொன் நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பில் புத்த சாசன, மத, கலாச்சார அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், அனுராதபுரம் மாவட்ட செயலகம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, லேக்ஹவுஸ் நிறுவனம் என்பவற்றிடமிருந்து […]
வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் சேவையாற்றுவேன் – டெனியல் ஸ்மித்
தேர்தலில் தமக்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் ஒரேவிதமாக சேவையாற்ற உள்ளதாக அல்பர்ட்டா மாகாண முதல்வர் டெனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார். அனைத்து அல்பர்ட்டா மக்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்தல் போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் சக்தி வள கொள்கைகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து கொண்டு மாகாணத்தை வழிநடத்த உத்தேசித்துள்ளதாக டெனியல் ஸ்மித் […]