துரு விக்ரமுடன் கபடி ஆடும் மாரி செல்வராஜ்!
பரியேறும் பெருமாள், கர்ணன் மாமன்னன் படங்களை இயக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்தாக கையிலெடுத்திருக்கும் சப்ஜெக்ட் ” கபடி” 1990 களில் தூத்துக்குடியில் இடம்பெற்ற உண்மை சம்பவங்களை தமது பாணியில் இயக்க இருக்கிறார் செல்வராஜ். இதற்காக நடிகர் விக்ரமின் மகனான துருவிக்ரம் கடுமையான கபடி பயிற்சியில் ஈடுப்பட்டு இருக்கிறார்.; இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் ஆரம்பமாகிறது. படத்தின் ஊடாக என்ன சர்ச்சையை மாரி கிளப்ப போறாரோ
கிரேன் சரிந்ததில் 2 தமிழர்கள் உட்பட 20 பேர் மரணம்!
மகாராஷ்டிராவில் பாலம் கட்டும் பணியின்போது கிரேன் சரிந்து 2 தமிழர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து நாக்பூரை இணைக்கும் வகையில் 701 கி.மீ. தொலைவுக்கு எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சம்ரித்தி எக்ஸ்பிரஸ் வே என்றழைக்கப்படும் இந்த சாலை 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் எஸ்.எல். இண்டியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்த தமிழகத்தின் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ், திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் உட்பட 20 பேர் […]
இலங்கை சிறைச்சாலையில் இடநெருக்கடி! கைதிகளுக்கிடையில் ஏற்படுமா அடிதடி?
இலங்கை முழுவதுமாக இருக்கிற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் கால் நீட்டி படுப்பதற்கும் கூட கைதிகளுக்கு கஷ்டமாக இருப்பதாக சிறைச்சாலைக்கு சென்று திரும்பிய சந்தேகநபரொருவர் கூறுகிறார். அன்மைகாலமாக அரசாங்கத்தின் செயற்பாடும் முன்னைய கைதுகள் , தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 200 % அதிகரித்து குறிப்பாக தண்டனை நிர்ணயிக்கப்பட்ட மற்றும் சந்தேக கைதிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை உண்மையில் இலங்கை முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இடவசதிக்கு ஏற்ப கால் கை […]
வட்டவளையில் பஸ் விபத்து – 18 பேர் காயம்
க.கிஷாந்தன்) கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து நள்ளிரவு 12 மணியளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 01.08.2023 அன்று அதிகாலை 4.40 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தின் போது, பஸ்ஸில் 120 பேர் வரை பயணித்துள்ளனர். எனினும் 18 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர் .பஸ்ஸில் […]
சிறுவன் ஹம்திக்கு நடந்தது என்ன? மூத்த ஊடகவியலாளரான அஸிஸ் நிஸாருடீன்
இரண்டு சிறுநீரகங்களையும் சத்திர சிகிச்சையின் போது இழந்த ஹம்தி என்ற சிறுவனின் மரணமும், இலங்கையில் இயங்கி வரும் மருத்துவ மாபிஃயாவும் இன்று ஒரு பேசு பொருளாக மாறியிருக்கிறது. ஹம்தியின் ஆரோக்கியமான வலது பக்க சிறுநீரகத்தை திருடிய “மாபிஃயா” மருத்துவர்கள், இந்த வலது சிறுநீரகம் பற்றி எவ்வித குறிப்புகளையும் மருத்துவ அறிக்கைகளில் பதிவு செய்வதை திட்டமிட்டு தவிர்த்து வந்துள்ளதை ஹம்தியின் மருத்துவ அறிக்கைகளை பார்க்கும் போது தெளிவாக அறியக் கூடியதாக இருக்கிறது. குறித்த மருத்துவர்கள் ஒரு தப்புக் கணக்கு […]
இந்தியாவில் பாரம் தூக்கி வீழ்ந்ததால் 17 பேர் பலி
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே நகரில் இன்று அதிகாலை பாரம் தூக்கி (கிரேன்) ஒன்று வீழ்ந்ததால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை மும்பைக்கு வெளியே சம்ருதி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த பாரம் தூக்கியொன்றே வீழந்துள்ளது. இதனால், நிர்மாணத்துறை ஊழியர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளதாக இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பாரிய கொங்கிறீட் மீது கிரேன் வீழ்ந்ததாகவும், அதன் சிதைவுகள் ஊழியர்கள் மீது வீழ்ந்ததாகவும், மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். […]
கெரி ஆனந்தசங்கரி கனடிய அமைச்சரானார்
இலங்கையின் சிரேஸ்ட அரசியல்வாதி வீ. ஆனந்தசங்கரியின் மகன், கரி ஆனந்தசங்கரியை ஆளும் லிபரல் கட்சி அமைச்சரவை அமைச்சராக நியமித்துள்ளது, கரி ஆனந்தசங்கரி, கனடாவின் பழங்குடியின உறவுகளுக்கான அமைச்சராக நியமிக்கபபட்டுள்ளார். ஸ்காப்ரோதொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் பிறந்த தமிழர் ஒருவர் கனடிய அமைச்சரவை அமைச்சராக முதல் தடவையாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு, 500க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம்
டயகம நகரில் புதிதாக மதுபானசாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டளனர். பெரியோர்கள், இளைஞர்கள், யுவதிகள், மாணவர்கள் என சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டயகம நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 16 தோட்டங்களை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
OK…OK…OK
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் சிம்பாப்வே அணியை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட சிம்பாப்வே அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 32 ஓவர்கள் 2 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பில் சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக […]
நாடு மீண்டுவிடும் ஜனாதிபதி நம்பிக்கை
இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த முயற்சிகளின் பலனாக எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுவிடும் என நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி அதற்கான வேலைத்திட்டங்களுடன் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை பணிப்பாளர் சபையின் கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். […]