ADB – ஜீவன் கலந்துரையாடல்யாடல்
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது. நீர்வளத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைக்கான ஒப்பந்தங்களை இறுதிப்படுத்தும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது. மூன்று ஆண்டு கால சீர்திருத்த திட்டத்தில் ஒருமித்த கருத்தை அடைவதே கூட்டத்தின் நோக்கமாகும். சீர்திருத்த வேலைத்திட்டமானது இலங்கையின் நீர்த்துறையில் உள்ள பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாற்றியமைக்கும் முன்முயற்சி ADB யிடமிருந்து கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது, இது சீர்திருத்த நிகழ்ச்சி […]
இன்று O/L
இந்த வருடத்திற்கான சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இந்த வருடம் 10 கைதிகளும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மழையால் நிறுத்தப்பட்ட IPL இறுதிப் போட்டி இன்று
2023 IPL தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் மீண்டும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்ப்ட்டுள்ளது. நேற்று இரவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற இருந்தது. எனினும் தொடர் மழைக் காரணமாக நேற்று நடைபெற இருந்த இறுதிப் போட்டி இன்று மீண்டும் நடைபெவுள்ளது.
டெங்கு பரவினால் அது சுற்றுலாத்துறைக்கு பெரும் தாக்கமாக அமையும்
(க.கிஷாந்தன்) சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் நுவரெலியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகமும், நுவரெலியா மாநகர சபையும் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. நுவரெலியாவி டெங்கு பரவினால் அது சுற்றுலாத்துறைக்கு பெரும் தாக்கமாக அமையும் என்பதால் டெங்கு பரவக்கூடிய இடங்களை தூய்மைபடுத்துமாறு மாவட்ட செயலாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். இதன் முதற்கட்டமாக நுவரெலியா கிரகரி வாவி குதியில் மாவட்ட செயலாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. […]
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கடும் கருத்து
சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகம் நிதி உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். அண்டை நாடான இலங்கைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர், அந்நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற விரிவுரை ஒன்றில் கலந்து கொண்ட போது, அந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி
இதுவரை படிக்காத புதிய தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முயல்வதை இந்த நேரத்தில் செய்யக் கூடாது என மனநல மருத்துவர்கள் மாணவர்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச இதனை தெரிவித்துள்ளார். O?L பரீட்சை நாளை (29) ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 4 இலட்சத்து 72,553 பரீட்சார்த்திகள் […]
கொழும்பை சுற்றி வளைக்கவும் தயார் – JVP
அடுத்த மாதம் 8ம் திகதி முதல் தேர்தலை கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ள அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி தேர்தல்கள் அலுவலகத்திற்கு வரவுள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பை சுற்றி வளைக்கவும் தயார் என அனுரகுமார குறிப்பிட்டுள்ளார். அஹுங்கல்ல வீரசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட போது அனுரகுமார திஸாநாயக்க […]
சர்வதேச சிலம்பம் வீர வீராங்கணைகளுக்கு பாராட்டு விழா
கடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு 27.05.2023 சனிக்கிழமை கொட்டகலையில் நடைபெற்றது. கொட்டகலை தனியார் விடுதி ஒன்றி இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கந்தசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது வீர வீராங்கனைகளின் சிலம்பம் நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றது. மேலும் இதில் பதக்கங்கங்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்களும் கலந்துக் கொண்டிருந்தனர். இலங்கை, இந்தியா, சுவிஸ்லாந்து, […]
விரைவில் டிஜிட்டல் பிறப்புச் சான்றிதல்?
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். பதிவாளர் நாயகம் திணைக்களமும் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாத்தாண்டிய பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
போர் தொடரலாம்?
உக்ரைன் போர் நீண்ட காலத்துக்கு அதாவது பல தசாப்தங்கள் நீடிக்கலாம் என ரஷ்ய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது. 15 மாதங்களை கடத்தும் போர் நடத்து வருகின்றமை குறிப்பிடதக்கது. மேற்படி போரால் இரு தரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் போரை நிறுத்த உலக நாடுகள் சில கடும் முனைப்பு காட்டி வருகின்றன. ஒருவேளை போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் மீண்டும் போர் தொடரலாம் என ரஷ்ய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.