O/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய”
O/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. O/L பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக பஸ் சேவையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான O?L பரீட்சை நாளை (29) ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 4 இலட்சத்து 72,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
IPL-கலக்க போவது யாரு? குருவா? சிஷ்யனா?
16 ஆவது IPL தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கான குவாலிபயர் 2 போட்டியில் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஏற்கனவே, இறுதிப்போட்டிக்கு நுழைந்த சென்னை அணியை குஜராத் எதிர்கொள்ள உள்ளது. இதன் மூலம் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வெல்லும் அணி சாம்பியன் பட்டத்துடன் கிண்ணத்தை கைப்பற்றும். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு போட்டி தொடங்குகிறது. […]
நீரில் விழுந்த தொலைபேசியை மீட்க நீர்த்தேக்கத்தை காலி செய்த இந்திய அதிகாரி பணி இடைநீக்கம்
செல்ஃபி புகைப்படம் எடுக்கும் போது நீர்த்தேக்கத்தில் விழுந்த தனது கைத்தொலைபேசியை மீட்பதற்காக நீர்த்தேக்கத்தை காலி செய்த நபர் குறித்த செய்தி இந்தியாவில் இருந்து வெளியாகியுள்ளது. ராஜேஷ் விஷ்வா என்ற அவர் அந்த இந்தியாவில் உணவு ஆய்வாளராக உள்ளார். ராஜேஷ் விஷ்வா தனது கைப்பேசியை பெறுவதற்காக இரண்டு டீசல் பம்புகளை பயன்படுத்தி மூன்று நாட்களாக தண்ணீரை அகற்றியுள்ளார். நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு கிடைத்த புகாரின்படி, அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அவர் ஏற்கனவே 21 லட்சம் லிட்டர் தண்ணீரை நீர்த்தேக்கத்தில் […]
O/L பரீட்சை மத்திய நிலையங்களை அண்மித்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
90% பாடசாலைகளில் நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். டெங்கு நோய்க்குள்ளாவோரில் 25 வீதமானோர் பாடசாலை சிறுவர்கள் என சுகாதார நிபுணர் திஸ்னக தசநாயக்க சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக பாடசாலைகளை அண்மித்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாக அவர் வலியுறுத்தினார். எதிர்வரும் திங்கட்கிழமை (29) ஆரம்பமாகவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக, பரீட்சை மத்திய நிலையங்களை அண்மித்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் […]
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பிரிட்டன் உதவி கோருகிறது
பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளரும் இந்தியப் பணிப்பாளருமான பென் மெல்லர், இலங்கைக்கான விஜயத்தின் போது, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹால்டன் ஆகியோரை சந்தித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சகத்தில். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேற்றவாசிகளாக பிரித்தானியாவிற்கு வரும் இலங்கையர்களை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் சரா ஹல்டன் கேட்டுக்கொண்டுள்ளார்
”Titanic” பாடகி மீண்டும் மேடைக்கு வருவாரா?
உலகப் புகழ்பெற்ற ”Titanic” பாடகி செலின் வரவிருக்கும் அனைத்து இசை நிகழ்ச்சிகளையும் இரத்து செய்துள்ளார். செலின் உடல்நலக் குறைவு காரணமாக இந்த எதர்பாராத முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 2023 மற்றும் 2024 இல் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் சுற்றுப்பயணங்களையும் செலின் ரத்து செய்துள்ளார். 55 வயதான அவர், சிரமத்திற்கு வருந்துவதாக இரசிகர்களிடம் கூறியுள்ளார்.
இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள்
முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான பல்வேறு ஏற்பாடுகளை இலங்கை அண்மைக்காலங்களில் மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “இலங்கை பொருளாதாரத்தின் மீள் கட்டமைப்பு மற்றும் ஜப்பான் தொழில் வாய்ப்புக்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் டோக்கியோ நகரில் நேற்று இடம்பெற்ற வர்த்தக வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
IPL : GT இறுதிப் போட்டிக்கு, வாழ்த்துக்கள் கில் அசத்துங்கள்
IPL தொடரின் இறுதிப்போட்டிக்கு GT அணி தகுதி பெற்றுள்ளது. தொடரின் பிளே Off சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி GT இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி. நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று-2 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் […]
ICC இலங்கைக்கு டொலர்
ICC இலங்கைக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5வது இடத்துக்கானது. அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர் பரிசாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆராய்வு
முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான பல்வேறு ஏற்பாடுகளை இலங்கை அண்மைக்காலங்களில் மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “இலங்கை பொருளாதாரத்தின் மீள் கட்டமைப்பு மற்றும் ஜப்பான் தொழில் வாய்ப்புக்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் டோக்கியோ நகரில் இன்று (26) இடம்பெற்ற வர்த்தக வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான வர்த்தக தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில் ஜப்பானிலுள்ள இலங்கை வர்த்தக சம்மேளனம் (JETRO) மற்றும் இலங்கை தூதரகம் ஆகியன இணைந்து […]