லயன் யுகத்துக்கு முடிவு கட்ட வேண்டுமெனில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள்வரை தேவை.- பாரத்

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துகொடுத்து லயன் யுகத்துக்கு முடிவு கட்டும் வேலைத்திட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்து வருகின்றது. இது தொடர்பில் உலக நாடுகளுடனும், அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது – என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார். அத்துடன், காங்கிரஸை விமர்சித்தால் தான் சிலரால் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும். கண்டியில் உள்ள ஒருவரும் இதே அரசியலைதான் செய்து வருகின்றார். அப்படியானவர்களுக்கு பதிலளித்து […]

இலங்கைக்கு சில முக்கியமான போட்டிகள்

ஜூன் 18 ஆம் திகதி தொடங்கும் உலகக் கிண்ணகிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. 10 அணிகள் “A” மற்றும் “B” என இரு குழுக்களாகப் போட்டியிடும், மேலும் 6 அணிகள் “சூப்பர் சிக்ஸ்” சுற்றுக்கு தகுதி பெறும். அதில், 4 அணிகள் “பிளே ஆஃப்” சுற்றுக்கு தகுதி பெறும், இதில் இரண்டு அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். குழு A வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம் மற்றும் அமெரிக்கா […]

ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் தோட்ட தொழிலாளருக்கும் வேண்டும் – தமுகூ தலைவர்

மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, தென், வயம்ப ஆகிய 6 மாகாணங்களின் பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு (அவிசாவளை), களுத்துறை,குருநாகலை, காலி, மாத்தறை ஆகிய 12 மாவட்டங்களில் அமைந்துள்ள 102   பிரதேச செயலக பிரிவுகளில் பெருந்தோட்ட துறை அமைந்துள்ளது. இந்த பிரதேச செயலக பெயர் பட்டியலை, ‘ஆறுதல் (அஸ்வெசும)’ என்ற நலன்புரி திட்டத்துக்கு பொறுப்பான  நிதி ராஜாங்க அமைச்சுக்கும், இந்த திட்டத்துக்கு நிதி உதவி வழங்கவுள்ள உலக வங்கிக்கும் இன்று கடிதம் […]

நலன்புரி நன்மைகள் ஜூலை முதல் – ஏழ்மையில் உள்ள குடும்பத்திற்கு மாதம் 15,000 ரூபா உதவி.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள், சமுர்த்தி மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி உதவிகளை ஜூலை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நலன்புரி பயனாளிகள் தமது கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்குகள் இல்லாத பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி […]

LPL ஏலம் பற்றிய அறிவிப்பு

2023 LPL போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஜூன் 11ம் திகதி அதற்கான ஏலம் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

UAE, ஜனாதிபதிக்கு அழைப்பு

ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin Zayed Al Nahyan) அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலீத் நாசர் அல் அமெரியினால் நேற்று (22) ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP […]

கப்பல் தொடர்ந்தும் தாமதம்

இந்தியாவின் பாண்டிச்சேரி காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது. காரைக்காலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்  நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.

மூழ்கிய சீன மீன்பிடி கப்பலில் இருந்து சடலங்களா?

39 பணியாளர்களுடன் இந்தியப் பெருங்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடிக் கப்பலில் இருந்த 7 பேரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் குழுவினர் கப்பலின் ஒரு பகுதியைக் கண்டுபிடித்துள்ளதாகவும், அங்கிருந்த உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்கிழமை சீன மீன்பிடி கப்பல் “Lupeng Yuanyu 028” இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளானது. 17 சீன பிரஜைகள், 17 இந்தோனேசிய பிரஜைகள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் பிரஜைகள் கப்பலில் பணிபுரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கண்டெடுக்கப்பட்ட […]

whatsapp மேலும் ஒரு புதிய வசதி

whatsapp, யனர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,whatsapp மூலம் அனுப்பப்படும் செய்தியை 15 நிமிடங்களுக்குள் பயனர் திருத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு புதிய வசதியை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த இரண்டு வாரங்களில் வாட்ஸ்அப் மென்பொருளை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் மேலும் 06 முதலீட்டு வலயங்கள்?

06 புதிய முதலீட்டு வலயங்களை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் திட்ட வலயங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். விவசாய ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்டு திட்ட. வலயங்கள் ஸ்தாபிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.