சினோபெக் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்

இலங்கையின் நிலையான மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக் உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று(22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம். பி. டி. யூ. கே. மாபா பதிரனவும் சினோபெக் நிறுவன எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோக திணைக்கள முகாமைத்துவப் பணிப்பாளர் சென் சென்க்மிம் ( Chen Chengmim )ஆகியோர் ஜனாதிபதி […]

நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டுவருவார் ஜீவன் நம்பிக்கை

” நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியே மீட்டெடுத்தார். எனவே, அவர் தலைமையின் கீழ் இந்நாடு முன்னேறும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே, ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கேகாலை மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கக்கூடிய வகையில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நீர்வழங்கல் […]

IPL: முதலாவது தகுதி சுற்றில் CSK Vs GT

IPL லீக் ஆட்டத்தின் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய நான்கு அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை மற்றும் மறுநாள் பிளே-ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதனால், இன்று போட்டிகள் எதுவும் நடைபெறாமல் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. 24 திகதி வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் […]

போரை முடிவுக்குக் கொண்டு வர உதவி

போரை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து விதமான உதவிகளையும் செய்வதாக ஜெலன்ஸ்கியிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற G-7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். அப்போது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமர் மோடி – ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ”ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் ஒரு அமைதி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு […]

SLFP செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவிக்கு மஹிந்த அமரவீர அல்லது திலங்க சுமதிபால ஆகியோரை ஏற்றுக்கொள்வதை நீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் இருக்கும் வரை தற்காலிகமாக இடைநிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விறகு வெட்ட சென்றவரை காணவில்லை…

நுவரெலியா ஹவா – எலிய தோட்ட வனப்பகுதியில் விறகு வெட்டுச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த நபர் வீடு திரும்பாததையடுத்து நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே காணாமல் போயுள்ளார். நேற்று (21) நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த நபரைக் தேடும் நடவடிக்கைகளை வனப்பகுதியில் ஆரம்பித்துள்ளனர். இதன்போது, வனப்பகுதியின் மத்தியில் காணாமல் போனவருக்கு சொந்தமானது […]

பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நடாத்துதல் நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கு மேலதிகமாக, மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல் அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் பரீட்சை வினாக்களை விளம்பரப்படுத்துதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. […]

பெங்களூருவில் மு.க.ஸ்டாலினை காங்கிரஸார் அவமதிப்பு செய்தார்களா?

கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்கும் நோக்கில் 25க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்திருந்தார். இதில் 19 கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் பெங்களூரு வந்தார். அன்றிரவு பெங்களூருவில் உள்ள தனது சகோதரி செல்வியின் வீட்டில் தங்கிய ஸ்டாலின் சனிக்கிழமை காலை பலத்த பாதுகாப்புடன் […]

எரிமலை – கட்டானியாவிற்கான விமானங்கள் ரத்து

இத்தாலி தலைநகர் ரோமில் கிழக்கு சிசிலியன் நகரத்தில் உள்ள மவுண்ட் எட்னாவில் எரிமலை வெடித்து சிதறி தீப்பிழம்பை கக்கி வருகிறது. தீப்பிழப்பு வழிந்து சாம்பல் அருகிலுள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவியது. இதனால், கட்டானியாவிற்கு சேவை செய்யும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. 3,330 மீட்டர் (10,925 அடி) உயரம் கொண்ட இந்த எரிமலை வருடத்திற்கு பல முறை வெடித்து. கடைசியாக எரிமலை வெடிப்பு கடந்த 1992ம் ஆண்டில் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலால், பிரபல […]

இத்தாலி ஓபன் டென்னிஸ் – கஜகஸ்தான் வீராங்கனை சாம்பியன்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார். இத்தாலியின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டியின் இறுதிச் சுற்றில் ரைபாகினாவும், உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் மோதினர். இதில் ரைபாகினா 6-4, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக அன்ஹெலினா போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து ரைபாகினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற […]