காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வு – டக்ளஸ்

மீன்பிடித்துறை சார்ந்த பல சட்டங்கள் மிகவும் பழையவை என்பதால், காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடிய சட்டதிருத்தங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இதற்கான யோசனைகளை இவ்வருட இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பித்து, அனுமதியைப் பெற்று, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அங்கீகாரத்தைப் பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் தற்போதிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே தீர்வுகள் இருப்பதாகவும், ஏற்கனவே இருந்த பல பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளைக் கண்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார். […]

உணவு தொண்டையில் சிக்கி குழந்தை பலி

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ பகுதியில் 26 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தாய்க்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு நோயால் இச்சம்பவம் இடம்பெற்றள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பொகவந்தலாவை பிரிட்வெல் தோட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகன் அகல்யா (வயது – 1½) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் தாய் மதிய உணவு தயாரித்து குழந்தைக்கு […]

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இப்படிதானாம் (Photos)

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய விகிதத்தையும் எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பானது நாட்டின் வங்கிக் கட்டமைப்பு அல்லது எந்தவொரு அரச அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மையையும் பாதிக்காது. நாட்டில் உள்ள 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் வைப்புத்தொகைக்கு எதுவித பாதிப்பும் எழாது […]

“அஸ்வெசும” நலன்புரி திட்டம் பற்றிய அவசர அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாத அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு காலம் முடிவடைந்த பின்னர் தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். “அஸ்வெசும” சமூக நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர்  இதனைக் குறிப்பிட்டார். பொருளாதார மீட்சி தேவைப்படுபவர்களுக்கு […]

பாகிஸ்தான் அணி சம்மதம்…

உலக கிண்ண ODI கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா செல்ல சம்மதம் தெரிவித்துள்ளது. அதன்படி இரு நாடுகளுக்கு இடையேயான போட்டி ஓக்டோபர் 15ம் திகதி அகமதாபாத்தில் நடைபெறள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 48 போட்டிகள் 12 மைதானங்களில் நடைபெறும். இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நவம்பர் 19  திகதி நடைபெறும். பாகிஸ்தான் அணி இந்தியா செல்லுமா என்பதில் நிச்சயமற்ற நிலை இருந்தது. கடைசியாக பாகிஸ்தான் 2016ம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்துக்காக இந்தியா […]

ODI உலக கிண்ண போட்டி அட்டவணை…

2023 உலகக் கிண்ண போட்டி அட்டவணையை ICC அறிவித்துள்ளது. இதன்படி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சூடு

நுவரெலியா – ஹங்குரன்கெத்த   பொலிஸ் நிலையத்தை 200 இற்கும் அதிகமான மக்கள் சுற்றி வளைத்ததையடுத்து பொலிஸார்  எச்சரிக்கைக்காக துப்பாக்கியால்  வானத்தை நோக்கி சுட்டுள்ளனர். ஹங்குரன்கெத்த தியதிலகபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் ஹங்குராங்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். எனினும், இச்சம்பவம் கொலை என்றும், சந்தேக நபர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இந்த […]

கிரிக்கெட் உலகக் கிண்ணம் விண்ணில்

2023 ஒரு நாள் உலகக் கிண்ண போட்டிகளை கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளதாக ICC  தெரிவித்துள்ளது.. உலகக்கிண்ணம் பலூன் உதவியுடன் தரை மட்டத்திலிருந்து 120,000 அடி உயரத்திற்கு அனுப்பப்பட்டது. அதன்படி, எந்த விளையாட்டிலும் கிண்ண “ரிவர்சிங் கோலுக்கு” அனுப்பப்படுவது இதுவே முதல் முறை. கிண்ணம் இலங்கை உட்பட 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. 2023 உலகக் உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஒக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

அமெரிக்காவைப் பழிவாங்குவோம் – வட கொரியா சூளுரை

 வடகொரியாவில் லட்சக்கணக்கானோர் திரண்டு கொரிய போர் தொடங்கப்பட்டதன் 73வது நினைவு நாளை அனுசரித்தனர். அப்போது அமெரிக்காவை அழிக்க பழிவாங்கும் போர் நடத்துவோம் என்று அவர்கள் சூளுரைத்தனர். வட கொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில் 1,20,000 மக்கள், மாணவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தில் மக்கள் தங்களின் கைகளில் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களுடன் கூடிய பதாகைகளை வைத்திருப்பதை ஆவணப்படுத்தியிருந்தது. “ஒட்டுமொத்த அமெரிக்க நிலப்பரப்பும் எங்களின் துப்பாக்கிகளின் வீச்சுக்குள் […]

சூதாட்டத்தை கட்டுப்படுத்த ஆணையம்?

சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சூதாட்டத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் வரி வருவாயை முறையாக சேகரிப்பது, சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுப்பது மற்றும் தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் சூதாட்டத்தின் எதிர்மறையான விளைவுகளைக் குறைத்தல் போன்ற பணிகளை இது மேற்கொள்ள வேண்டும். ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுவதற்கான வரைவு சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய பின்னடைவு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.