இந்தியா எதிர்பாராத முடிவு…

பிரபல மொபைல் கேமான Battlegrounds Mobile India (BGMI) குறித்து இந்திய அதிகாரிகள் எதிர்பாராத முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ கேமை மீண்டும் அறிமுகப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 10 மாத தடைக்கு பிறகு, இந்தியாவில் சோதனையாக மொபைல் போன் கேமை மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாத காலத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென் கொரிய மொபைல் கேம் மேம்பாட்டு நிறுவனமான கிராஃப்டனும் இந்தியாவில் சோதனைக்கு ஒப்புதல் […]

வரிவிதிப்பு முறையில் மாற்றம்?

வரிவிதிப்பு முறையை மேலும் மாற்றுவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார். வரி வசூல் முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக அரசு அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அவிசாவளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்டியை அதிநவீன நகரமாக மேம்படுத்த எதிர்பார்ப்பு

மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேரவாத பௌத்தம் தொடர்பிலான கற்கை செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியதாக மேற்படி பல்கலைக்கழகத்தை நிறுவ எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, ஜப்பானுக்கான தனது அடுத்த விஜயத்தின் போது அதற்கான உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக தாய்லாந்து, பூட்டான் போன்ற பௌத்த நாடுகளின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டதன் பின்னரே ஜனாதிபதி […]

விவசாய நவீனமயமாக்கல் அலுவலகத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை தயாரிப்பது தொடர்பில் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டதுடன் இணைந்து செயற்படும் ஜனாதிபதி செயலகம், விவசாய அமைச்சு உட்பட ஏனைய அமைச்சுக்களின் மேலதிகச் செயலாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான தரங்களில் இருக்கின்ற […]

பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் விசேட கவனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) கண்டி மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையை சந்தித்தார். வீட்டுப் பிரச்சினை உட்பட, பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் அவர்களின் நல்ல வாழ்க்கைத் தரத்திற்கு உத்தரவாதம் வழங்கப்படாமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. […]

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு ரஷ்யா பதிலடி

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு பதிலடியாக முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உட்பட 500 பேருக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதில் அமெரிக்கா கூடுதலான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்தது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு விசா வழங்க அமெரிக்கா சமீபத்தில் மறுத்தது. இந்த நிலையில் ரஷ்யாவின் […]

 G7 நாடுகளின் தலைவர்கள் இலங்கை தொடர்பில் கூட்டறிக்கை

 G7 நாடுகளின் தலைவர்கள் இலங்கை தொடர்பில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். உலகின் 7 முன்னணி ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து நடத்தும் G7  அரச தலைவர்களின் கூட்டம் ஜப்பானில் நடைபெறுகின்றது. கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இணைத் தலைமையின் கீழ் இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடுவதற்கு  இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடன்  நிலைபேறான தன்மையால் ஏற்பட்டுள்ள  சவால்கள் இலங்கையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தடையாக இருப்பதாக G7 நாட்டு தலைவர்கள் தெரிவித்துள்ளனர். […]

ராகுல் காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் ரத்து

ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (21) ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த ராகுல் காந்தியின் பயணம் தவிர்க்கமுடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை ( 21ம் தேதி ) ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் சார்பில் […]

ரஷ்யா மீது கூடுதல் தடை விதிக்க வாய்ப்பு

ஜி 7 மாநாட்டில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் மே 19 – 21 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக வரும் ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக கலந்து கொள்கிறார். இதனை உக்ரைன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. ஜெலன்ஸ்கி கலந்து கொள்வதன் மூலம், ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்

பொரள்ள, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் இன்று (20) காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டில் 53 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.