அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஹப்புத்தளை, பிளக்வுட் இளைஞன்

நீர்கொழும்பு – பலகத்துறை கடலில் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. நேற்று (17) மாலை சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், கற்பாறைகளில் சிக்குண்டுள்ளதால் சடலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சடலத்தை மீட்கும் பணிகளில் பெக்கோ இயந்திரத்தையும் பயன்படுத்துவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில்,  நண்பர்களுடன் நீர்கொழும்பு கடலில் நீராடச் சென்ற இளைஞர் காணாமற்போயிருந்தார். ஹப்புத்தளை, பிளக்வுட் தோட்டத்தை சேர்ந்த 26 வயதான இளைஞரே அலையில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பான […]

இலங்கை வங்கியின் 2022 ஆண்டறிக்கை

இலங்கை வங்கியின் 2022 ஆண்டிற்கான ஆண்டறிக்கை இலங்கை வங்கியின் தலைவர் சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேராவினால் இன்று (18) நிதி அமைச்சில் வைத்து பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை வங்கியின் www.boc.lk மற்றும் பங்குச் சந்தையின் www.cse.lk இணையத்தளங்கள் ஊடாக 2022 ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பார்வையிடலாம். பொதுமக்கள் மற்றும் வியாபாரத்துறையினர் தெரிந்துகொள்வதற்காக மேற்படி அறிக்கை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கை வங்கியின் நிறைவேற்று அதிகாரி ரசல் பொன்சேக்கா, பிரதான […]

சூடான் உள்நாட்டுப் போரில் கர்ப்பிணி பெண்கள் சிக்கித் தவிப்பு: ஐ.நா. தகவல்

சூடானில் நிலவும் உள் நாட்டுப் போர் காரணமாக அங்கு இளம் பெண்களும் , கர்ப்பிணி பெண்களும் தீவிர நெருக்கடியில் சிக்கி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் 20 ஆண்டுகால வன்முறைச் சுமைகளை பெண்கள் சுமந்து வருகின்றனர். ஏப்ரல் 25, 2003 அன்று சூடானில் டார்ஃபர் மோதல் ஏற்பட்டதில் சூடான் விடுதலை இயக்கம் சூடான் ராணுவப் படைகளைத் தாக்கியதில் இருந்து அந்நாட்டின் அரசியல் நிலப்பரப்பிற்குள் அதிகாரப் போராட்டம் நடந்து வருகிறது. கண்மூடித்தனமான ஆயுத தாக்குதல்களால் அங்கு பொது மக்கள் […]

கடலில் ஹெரோயின்

தென் கடலில் பெருமளவான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு கடற்படையினரால் 125 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் விஜயபாகு கப்பல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

திமுத்துக்கு அழைப்பு

எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள ஒரு நாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றுவதற்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை ஆரம்பக் குழாமில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக பெயரிடப்பட்ட 30 பேர் கொண்ட ஆரம்பக் குழாமில் இடம்பெற்றிருந்த குசல் ஜனித் பெரேரா காயத்திலிருந்து முழுமையாக மீளவில்லை. எவ்வாறாயினும், ஆரம்ப அணியில் திமுத் கருணாரத்ன சேர்க்கப்பட்டாலும், அந்த அணியில் இருந்து குசல் பெரேரா முழுமையாக நீக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈக்குவடோர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் பெரும்பான்மையாகவிருந்த ஈக்குவடோர் பாராளுமன்றம் அந்நாட்டு ஜனாதிபதி Guillermo Lasso-இனால் கலைக்கப்பட்டுள்ளது. குற்றப்பிரேரணையொன்றின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நிதியமொன்றிலிருந்து முறைகேடாக பணம் கையாளப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் கண்மூடித்தனமாக இருப்பதாக ஈக்குவடோர் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டவிருந்தது. இந்தநிலையில் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை 6 மாதங்களுக்கு எந்த இடையூறுமின்றி அவர் பதவியில் நீடிக்கலாமென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

4 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

 மின்சாரம், பெட்ரோலிய உற்பத்தி, எரிபொருள் விநியோகம், சுகாதாரத் துறை ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட விர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரது கையொப்பத்துடன், நேற்று(17) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் இரண்டாம் சரத்திற்கு அமைய, ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின் கீழ் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முன்னணி விஞ்ஞானிகள் மூவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு

ரஷ்யாவின் முன்னணி விஞ்ஞானிகள் மூவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹைபோசோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை உருவாக்கும் ரஷ்யாவின் திட்டத்தில் மூன்று விஞ்ஞானிகள் பணியாற்றினர். ஆனால், இவர்கள் மூவருக்கும் எதிரான தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளால் ரஷ்ய அறிவியல் சமூகம் வருத்தம் வருத்தமும் அடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா?

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் (சிஎல்பி) கூட்டம் இன்று (18) நடைபெறுகிறது. கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவகுமாரும் அறிவிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியான நிலையில் இன்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் (சிஎல்பி) கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்குப் பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், புதிய அமைச்சரவை வரும் 18ம் திகதி பதவியேற்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் […]

தனுஷ்க மீதான 3 பாலியல் குற்றச்சாட்டுகள் வாபஸ்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் தொடரப்பட்டுள்ள பாலியல் வழக்கின் 4 குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய அரச சட்டத்தரணியால் குறித்த குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 29 வயதான பெண்ணொருவர், தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்ந்திருந்தார். T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த போது, 32 வயதான தனுஷ்க குணதிலக்க மீது இந்த […]