இம்ரான் கானின் தீவிர ஆதரவாளர் மீண்டும் கைது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் தகவல் துறை அமைச்சருமான ஃபவாத் சவுத்ரி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளாc. கடந்த வாரமும் கைது செய்யப்பட்ட இவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று திரும்பும் வேளையில் மீண்டும் கைது செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.
சீன மீன்பிடி படகு விபத்தில் சிக்கியது
39 பணியாளர்களுடன் சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் விபத்துக்குள்ளானது. மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு சீன வெளியுறவு அமைச்சகம் பல நாடுகளுக்கு தங்கள் தூதரகங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த கப்பலில் 17 சீன பிரஜைகள் 17 இந்தோனேசிய பிரஜைகள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் பிரஜைகள் காணாமல் போயுள்ளனர்.
இம்ரான் கான் பொதுவெளியில் தூக்கிலிப்பட வேண்டும்
இம்ரான் கான் பொதுவெளியில் தூக்கிலிடப்பட வேண்டும் என பாகிஸ்தான் எதிர்க் கட்சித் தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ராஜா ரியாஸ் அகமது கான் பேசும்போது, “நாடு முழுவதும் கலவர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இம்ரான் கானின் ஆதரவாளர்களின் செயலை கண்டு இந்த நாடு அவமானம் கொள்கிறது. இம்ரான் கான் பொதுவெளியில் தூக்கிலிப்பட வேண்டும். ஆனால், நீதிமன்றம் அவரை மருமகனை போல் வரவேற்கிறது. ஏழைகளுக்கு நீதி அளிக்கும் நீதிபதிகள் வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
புதிய ஆளுநர்கள் (Photos)
மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
Melbourne நகரில் பஸ் விபத்து – ஆரம்ப பாடசாலை மாணவர்கள் காயம்
அவுஸ்திரேலியாவின் Melbourne நகரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 9 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது. 45 சிறார்களுடன் பயணித்த பஸ்ஸை பின்னால் வந்த ட்ரக் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 5 தொடக்கம் 11 வயதுக்கிடைப்பட்ட 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பலருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 9 மாணவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் ஒருவர் அவசர சிகிச்சை […]
டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு
நிலவும் சீரற்ற வானிலையால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் 412 டெங்கு நோயாளர்கள் நேற்று (15) பதிவானதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு காய்ச்சலினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு 19 ஆவது வார நிறைவில், 1294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்த வருடத்தின் 19ஆவது வார […]
உலக வங்கி விசேட கலந்துரையாடல்
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பில் உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சார மறுசீரமைப்பு திட்டங்கள் மற்றும் அத்துறையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டில் காற்றாலை மின் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு உலக வங்கி வழங்கிய நிதியுதவிக்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர நன்றி தெரிவித்துள்ளார்.
நாடு பூராவும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்
டெங்கு ஒழிப்பு செயலணியுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போது டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் 2023 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியை ஒப்பிடும்போது, தற்போது சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நளின் […]
இலங்கையின் முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் நிர்மாணிக்க முடியும்
இலங்கை அணுசக்தி சபை, வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் என்ற வகையில் அதன் அமர்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கலந்து கொண்டார். இலங்கையின் முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் நிர்மாணிக்க முடியும் – இலங்கை அணுசக்தி சபை, துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரிவிப்பு அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்தற்கு அமைய நடைபெற்றால் ரஷ்ய தொழிநுட்ப உதவியுடனான முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் இலங்கையில் நிர்மாணிக்க முடியும் […]
பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு தேவையின்றி தலையிட இடம் கொடுக்க வேண்டாம்
“முந்தைய சமுர்த்தி திட்டத்தில் பெருந்தோட்ட மக்களை சேர்த்து கொள்வதில் குறைபாடு நிலவியதாக நாம் அறிந்துள்ளோம்.” “இது சமுர்த்தி அல்ல. இந்த அஸ்வெசும திட்டம், உலக வங்கி உதவியுடனான நலிவுற்ற மக்களுக்கான மாதாந்த கொடுப்பனவு திட்டமாகும். பெருந்தோட்ட குடும்பங்களுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்காமல், இத்திட்டதை நாம் முன்னெடுக்க மாட்டோம்” என்ற உறுதிமொழியை உலக வங்கியின் இலங்கைக்கான நாட்டு-பணிப்பாளர் பாரிஸ் ஹடாட் செர்வோஸ், தன்னை சந்தித்த மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவிடம் தெரிவித்தார். மனோ […]