துருக்கியில் மே 28 இரண்டாம் கட்ட தேர்தல்

துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தனது அரசியல் பயணத்தில்  கடினமான தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறார். துருக்கி பொதுத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 50% வாக்குகள் தற்போதைய ஜனாதிபதி எர்டோகன் உட்பட யாருக்கும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து துருக்கியில் வரும் 28ஆம் திகதி இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படவுள்ளது. 69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014 ஆம் […]

மழையினால் 10,055-க்கும் அதிகளவானோர் பாதிப்பு

மழையினால் ஒன்பது மாவட்டங்களில் 2,511 குடும்பங்களை சேர்ந்த 10,055-க்கும் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தங்களால் 7 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் மாத்தறை, காலி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கிங், நில்வளா கங்கைகளில் சிறு அளவிலான வௌ்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

IPL – CSK நிலை என்ன?

IPL: மொத்தம் உள்ள 70 லீக் ஆட்டங்களில் நேற்றுடன் 62 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 8 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக நேற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி முதல் 2 இடங்களை பிடிப்பது உறுதி செய்யப்பட்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 2 அணிகளும் வாய்ப்பை இழந்து வெளியேறின. பிளே ஆப் சுற்றின் 3 இடத்துக்கு 7 அணிகள் […]

கர்நாடக முதல்வர் பதவி இழுபறி?

“பதவியை பெறுவதற்காக முதுகில் குத்தவோ, மிரட்டவோ மாட்டேன்” என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அவர் இன்று டெல்லி  சென்றார். கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் வெளியாக இரண்டு நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று தீர்மானிப்பதில் காங்கிரஸ் கட்சியில் இழுபறி நிலவி வருகிறது. மாநிலத்தின் […]

சிறுபோகத்திற்கு யூரியா

2023 ஆண்டு சிறுபோகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். அதன்படி, 25 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் தேவாலயம் அருகே நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். 18 வயது இளைஞரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளனர் மற்றும் பொலிஸாரின் பதில் தாக்குதல்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேருக்கு மேல் காயமடைந்தாலோ அல்லது கொல்லப்பட்டாலோ, அது வெகுஜன துப்பாக்கிச் சூடாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 225 துப்பாக்கிச் […]

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் பலத்த மழையுடனான வானிலையினால் 05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ⭕ காலி மாவட்டத்தின் நெலுவ, பத்தேகம, யக்கலமுல்ல மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள் ⭕ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல பிரதேச செயலக பிரிவு ⭕ களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலக பிரிவுகள் ⭕ மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய, முலட்டியன, அக்குரஸ்ஸ, கொட்டபொல, பிட்டபெத்தர மற்றும் பஸ்கொட பிரதேச செயலக பிரிவுகள் ⭕ இரத்தினபுரி […]

கிரிக்கெட்டில் மூன்று விதிகள் மாறுகின்றன

ICC 3 விதிகளில் மாற்றம் செய்துள்ளது. மாற்றப்பட்ட ICC விதிகள் ஜூன் 1 முதல் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதி 1: நடுவர் இனி சாப்ட் சிக்னல் அளிக்காமல் 3-ம் நடுவருடன் ஆலோசிக்க வேண்டும். விதி 2: வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள், ஸ்டம்புக்கு அருகில் உள்ள கீப்பர், பேட்ஸ்மேனுக்கு அருகில் உள்ள பீல்டர்கள் தலைக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். விதி 3: ப்ரீ ஹிட் பந்தில் பந்து ஸ்டம்பில் பட்டாலும் இனி பேட்ஸ்மேன்கள் ரன் ஓடலாம். […]

இம்ரான் கான் குற்றச்சாட்டு

தன்னை தேசதுரோக வழக்கில் ராணுவம் 10 ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த வாரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது கட்சியினர் வன்முறையில் இறங்கினர். இந்த வன்முறை, லாகூரில் ராணுவ அதிகாரியின் வீடு கொளுத்தப்பட்டது தொடர்பாக இம்ரான் கான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலையில் தனது கட்சி நிர்வாகிகளை லாகூரில் உள்ள தனது இல்லத்தில் இம்ரான் […]

நியூசிலாந்தில் தீ – 6 பேர் பலி

நியூசிலாந்தில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள 04 மாடிகள் கொண்ட தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டிடத்தில் சிக்கியிருந்த சிலர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் அங்கு சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், தீயை அணைக்க சுமார் 20 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.