இலங்கை அணி பங்கேற்கும் மற்றுமொரு போட்டி
உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் மற்றுமொரு போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டி புலவாயோவில் தொடங்க உள்ளது. இதுவரை இலங்கை அணி தாம் பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி B குழுவில் முதலிடத்திலும், ஸ்கொட்லாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு-ஜனாதிபதி விளக்கம்
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். France 24 க்கு அளித்த பேட்டியில், வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் விவாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதேவேளை, இவ்வாரம் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்னருக்கு எதிராக புடின் வேலையை தொடங்குகிறார்
கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் தலைவர்களுக்கு சட்டம் பொருந்தும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஆனால் பொது வாக்னர் இராணுவ உறுப்பினர்கள் தேசபக்தர்கள் என கூறிய புடின் இராணுவத்தில் சேரவோ, பெலாரஸ் செல்லவோ அல்லது தாயகம் செல்லவோ அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார். கடந்த வார இறுதியில் ரஷ்ய நகரை கைப்பற்றிய வாக்னரின் இராணுவம் மாஸ்கோவிற்கு புறப்பட்டு சென்றதுடன், பெலாரஸ் ஜனாதிபதியின் தலையீட்டால் பயணத்தை கைவிட்டு அந்த மாநிலத்திற்கு சென்றுள்ளனர். இதற்கிடையில், வாக்னரின் கூலிப்படை தலைவரான எவ்ஜெனி […]
இலங்கை சுப்பர் 06 சுற்றுக்குள்…
2023 ODI உலகக் குpண்ண தகுதிச் சுற்றுகளின் ஆரம்ப சுற்றுகள் முடிவடைவதற்கு முன்பே, 6 அணிகள் சூப்பர் 6 சுற்றில் தங்கள் இடத்தைப் பெற்றுள்ளன. அதன்படி, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து ஆகிய அணிகள் அந்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பி பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் தகுதி பெற்றன. சுப்பர் 6 சுற்றில் இலங்கை அணி சிம்பாபே, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் விளையாடவுள்ளது.
மலையகத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த கூட்டு பொறிமுறை
மலையகத்தில் உதைப்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து கூட்டு பொறிமுறை ஒன்று உருவாக்குப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், இலங்கையில் தேசிய மட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் ஆலோசனைகளும், ஒத்துழைப்புகளும் பெறப்படும் எனவும் தெரிவித்தார். அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், அட்டன் பகுதிகளில் உள்ள உதைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர்களும், செயலாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொட்டகலையில் நடைபெற்றது. […]
சீன அரசு மீண்டும் உறுதி
பொருளாதார , சமூக வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீன அரசு மீண்டும் உறுதி அளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சருக்கும், சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கேங்கிற்கும் இடையிலான சந்திப்பு பெய்ஜிங்கில் இடம்பெற்றது. இதன்போதே சீன வெளிவிவகார அமைச்சர் மேற்படி உறுதியை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை – தாய்லாந்து வர்த்தக ஒப்பந்தம்…(Photos)
ஆசியான் நாடுகளுக்கு விசேட கவனம் செலுத்தி பிரதான மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLTFTA) தொடர்பான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (26) காலை கொழும்பில் ஆரம்பமானது. கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் தொடங்கிய அதன் ஆரம்ப அமர்வில் கருத்துத் தெரிவித்த சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே. வீரசிங்க, உடன்பாடு காணப்பட்ட […]
லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைக்கப்படும்?
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைவடைய உள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இறுதியாக 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவாக விற்பனையாகிறது. அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டு 598 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை […]
”டைட்டன்” குறித்து சிறப்பு விசாரணை….
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்தது தொடர்பாக சிறப்பு விசாரணையை தொடங்க அமெரிக்க கடலோர காவல்படை நடவடிக்கை எடுத்துள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பில் கடல்சார் புலனாய்வு சபையின் அனுசரணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விசாரணைக்காக, நீர்மூழ்கி கப்பல் விபத்து இடம்பெற்ற இடமும் வரைபடமாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கு பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய […]
நுளம்புகள் பரவக்கூடிய பகுதிகளை தூய்மைப்படுத்துவது அவசியம்
ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடியும் என வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அனைத்து துறையினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் எனவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்தார். ”டெங்கு நோய் எந்த வயதினரையும் பாதிக்கும். பதிவாகும் நோயளர்களில் 75 சதவீதமானவர்கள் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதற்கு முன்பாக சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்பட்டாலும் தற்போது இளைஞர்களே […]