இறக்குமதி பால் மாவின் விலை திருத்தம் செய்யப்படும்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்கமைய மே 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவின் விலைகள் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநில தன்னாட்சி மீது விழுந்துள்ள பேரிடி: சீமான்

திமுக, தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோவதாக  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து ஒன்றியத்தில் அதிகாரத்தைக் குவிக்கும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கு கண்டனத்திற்குரியது எனவும் சாடியுள்ளார்.

இலங்கை மகளிர் அணிக்கு மாபெரும் வெற்றி

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான மூன்றாவது T20யில் போட்டியை நடத்தும் இலங்கை அணி வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அதன்படி, இலங்கை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி […]

சிறையில் கொல்ல முயற்சி:இம்ரான் குற்றம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் இருந்தபோது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ஊசி போடப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை (09) பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னை சிறையில் கொல்ல முயற்சிப்பதாக இம்ரான் குற்றம் சாட்டினார். கைது செய்யப்பட்ட பின்னர் கழிவறை வசதியின்றி 24 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இம்ரான் நேற்று (11) […]

சம்பள நிர்ணய சபைக்கு செல்லவுள்ளோம் – CWC

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் அமைச்சரவையிலும் வலியுறுத்தவுள்ளேன் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (12) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அண்மையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட […]

கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன்…

ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு பொருத்தமான நபரை அடையாளம் கண்டுள்ளதாக அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் கூறுகிறார். ஒரு பெண்ணான அவர், இனிவரும் காலங்களில் அப்பதவியை ஏற்பார் என அவர் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதிய சிஇஓ நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார். நிர்வாகத் தலைவர் மற்றும் சிடிஓ ஆக எனது பங்களிப்பு மாறும் என பதிவிட்டுள்ளார். எவ்வாறாயினும், புதிய நியமனம் தொடர்பான […]

யானை தாக்கி இளம் பெண் பலி

கொஸ்லாந்த, உட தியலும பிரதேசத்தை பார்வையிட சென்ற யுவதி யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். உயிரிழந்த யுவதி மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IPL களத்தை அதிர வைத்த ஜெய்ஸ்வால்

IPL வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை RR  அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார். 13 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த அவர், 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்தார். யஷஸ்வியின் சிறப்பான இன்னிங்ஸில் 5 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும். முன்னதாக, கே.எல்.ராகுல் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் 14 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அதிவேக அரை சதம் என்ற கூட்டு சாதனையை படைத்தனர். நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் […]

இம்ரான் கான்கைது சட்டவிரோதமானது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த செவ்வாய்க்கிழமை, வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது அவரை துணை ராணுவப் படையினர் கைது செய்தனர். அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இம்ரான் கான் கைது சம்பவம்,பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவரது ஆதாரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்ட […]

புதிய சுற்றுச்சூழல் சட்டம்…

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏனைய நாடுகளை இணைத்து அதற்கான பணிகளை செய்ய இலங்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக அதனை தாமதப்படுத்துவதே இதுவரை நடந்துள்ளது எனவும் […]