பாகிஸ்தானின் மற்றொரு பிரபலம் கைது

பாகிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் இதுவரை வெளியிடப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் தீ விபத்துகள் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபராகவும் அவர்  அறியப்படுகிறார்.

நியூசிலாந்து கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவி விலக முடிவு

நியூசிலாந்து கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் வயிட் பதவி விலக முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பதவி விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபையிடம் தெரிவித்துள்ளார். டேவிட் வயிட், முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும் ஒக்லாந்து மற்றும் வெலிங்டனில் ரக்பியின் தலைமை நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.

இத்தாலியின் மிலன் நகரில் வெடிப்பு

இத்தாலியின் மிலன் நகரில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஆரம்பித்துள்ளனர்.

டோக்கியோ அருகே நிலநடுக்கம்

ஜப்பானின் டோக்கியோ அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தால் 4 பேர் லேசான காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் எதுவும் இல்லை என அந்நாட்டு வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எல்பின் ஆற்றுநீரில் இரசாயன கலவை நுவரெலியா வாழ் மக்களுக்கு ஆபத்து

எல்பின் ஆற்றுநீர் இரசாயன கலவைக்கு உட்பட்டிருப்பதானது நுவரெலியா மாவட்டத்துக்கும் அங்குவாழ் மக்களுக்கும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மிக விரைவாகவே இவ்விடயத்தில் தலையீடு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் நுவரெலியா மாவட்ட அரச அதிபரை வலியுறுத்தியுள்ளார். நுவரெலியா மாவட்ட அரச அதிபரிடம்  எழுத்து மூலம் வலியுறுத்தியுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் கடிதத்தின் பிரதிகளை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நுவரெலியா மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் […]

காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்ளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காலணித்துவ ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட […]

மத்திஷ பத்திரன முன்னோக்கி…

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்  போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் மதிஷ பத்திரன 11வது இடத்திற்கு முன்னேற முடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மதீஷ். நேற்று (10) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல மத்திஷ பத்திரன அபாரமான பங்களிப்பை வழங்கினார். இதேவேளை, IPL போட்டியின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் […]

ஆசியாவின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு இலங்கை எந்த வகையிலும் துணைபோகாது: – ஜனாதிபதி

ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆசிய பூகோள அரசியலுக்கும் பசுபிக் பிராந்திய அரசியலுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுவதாகவும், அந்த வேறுபாடுகளை நாம் உணர்ந்து சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கு செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த இரண்டு தசாப்தங்களில் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இலங்கையை முன்னேற்றுவதற்கு அணிசேரா கொள்கை, பஞ்சசீலம் மற்றும் ஆசியக் கொள்கைகளைப் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் […]

தலசீமியா பற்றிய எச்சரிக்கை

தலசீமியாவைத் தடுப்பதில் இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறியுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடப் பிரிவின் பேராசிரியர் கலாநிதி டொக்டர் சச்சித் மெத்தானந்தா தெரிவித்துள்ளார். நாட்டின் சனத்தொகையில் 3 வீதமானோர் தலசீமியா நோயாளர்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போராட்டக்காரர் ஒருவரை சுட்டுக் கொன்ற இராணுவ சார்ஜென்ட்டுக்கு சிறைத்தண்டனை

போராட்டத்தில் ஒருவரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவ சார்ஜென்ட் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. “பிளாக் லைவ்ஸ் மேட்டர்” என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்ட 28 வயதுடைய காரெட் போஸ்டர் என்ற இளைஞரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ராணுவ வீரர் டேனியல் பெர்ரியின் வழக்கறிஞர் கூறினார்.