வளிமண்டலவியல் திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மறு அறிவித்தல் கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இன்று(11) 75 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. […]

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற கோதுமை மாவின் விலையை 5 சதத்தினாலேனும் அதிகரிக்கவில்லை, என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மாறாக, இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கோதுமை மா உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அடுத்த 06 மாதங்களுக்கு தேவையான கோதுமை மா கையிருப்பு காணப்படுகின்றது என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்குமாறு உள்நாட்டு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

பஞ்சாப் மாகாணத்தில் கலவரங்களை ஒடுக்க ராணுவம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அந்நாட்டின் தேசிய பொறுப்புடமை அமைப்புக்கு (என்ஏபி) இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ஆஜராக வந்த இம்ரான் கானை ரேஞ்சர் படையினர் அதிரடியாக சுற்றி வளைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதையடுத்து, இரவு முழுவதும் ரகசிய இடத்தில் வைத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் என்ஏபி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர், […]

காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் உயர்மட்ட தளபதி காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். காஸா பகுதியின் தெற்குப் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தளபதியும் மற்றுமொருவரும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (10) காஸா பகுதியில் 460க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகள் இஸ்ரேல் மீது தீவிரவாதிகளால் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 09 மாதங்களுக்குப் பின்னர் காஸா பகுதியில் இடம்பெற்ற மோசமான மோதல்களாகக் கருதப்படும் காஸா பகுதியில் […]

ICC துணைத் தலைவர் இலங்கை வந்தடைந்தார்

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீடுகள் குறித்து விசாரணை நடத்த ICC துணைத் தலைவர் இம்ரான் கவாஜா நேற்று இரவு இலங்கை வந்தடைந்தார். கிரிக்கட் நிறுவனத்தின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார். இதன்படி அவர் ஜனாதிபதியின் பிரதானி சாகல ரத்நாயக்கவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினார்.

இம்ரான் கான் விளக்கமறியலில்

கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கான் 8 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே அவர் நேற்று கைது செய்யப்படடமை குறிப்பிடதக்கது.

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (10) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (11) நண்பகல் 12.00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று காலை 08.30 மணியளவில் 8.80N மற்றும் 88.90Eக்கு அருகில் மையம் கொண்டது. இது இன்று […]

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக்கு ILOவின் பங்களிப்பு அவசியம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ஐ.எல்.ஓ.) பங்களிப்பும் அவசியம். அதற்கான உரிய தலையீடுகளை மேற்கொள்ளுமாறு ஐ.எல்.ஓவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது. அத்துடன், மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்படும் ‘மலையகம் – 200’ வேலைத்திட்டங்களில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் பங்கேற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸினருக்கும் இடையிலான சந்திப்பு, […]

சூடானில் உள்நாட்டு போர் மீண்டும் தீவிரம்

சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது. இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். சண்டையை நிறுத்தி விட்டு இருதரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. இதற்கிடையே இரு ராணுவ தளபதிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் அமைதி பேச்சு வார்த்தை […]

கனடாவுக்கு சீனா பதிலடி

கனடா சீன இராஜதந்திரி ஜாவோ வெய்யை  நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இதற்குப் பதிலடியாக, சீனா தனது ஷாங்காய் துணைத் தூதரகத்தில் உள்ள கனடாவின் தூதரக அதிகாரியான ஜெனிபர் லின் லலோண்டேவை பதவி நீக்கம் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.