IMF குழு இலங்கைக்கு…

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று நாளை (11) முதல் மே 23 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதிக்கான முதல் மதிப்பீட்டிற்கு முன்னர், வழமையான ஆலோசனை நடவடிக்கையின் ஒரு படியாக அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசனும் இந்த விஜயத்தில் இணையவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு பயணம் செய்பவர்களுக்கு ஒரு அறிவிப்பு

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாகிஸ்தானுக்கு செல்வது தொடர்பாக அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கான புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, அத்தியாவசியமற்ற விஷயத்திற்காக நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பினால், அதற்கான அறிவிப்புகள் மூலம் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இம்ரான் கான் கைது […]

மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிப்பு

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, நள்ளிரவு முதல் மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் புகையிரதத்தில் பயணஞ் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மலையக பகுதியில் உள்ள புகையிரத நிலையங்களின் கதவுகள் யாவும் பூட்டப்பட்டு இருந்ததுடன், பயணிகள் ஓய்வு அறை, உணவகம் உட்பட அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன. ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரி ஒருவருக்கு பிரதிப் பொது முகாமையாளர் நியமனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்த […]

பலே கில்லாடி சிக்கினார்

1990ம் ஆண்டு கடை ஒன்றில் பத்திரிகையாளரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் ஜீன் கரோல் என்பவர் ட்ரம்புக்கு எதிராக தொடுத்த சிவில் வழக்கில் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது. கடையின் டிரஸ்ஸிங் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜீன் கரோல் குற்றம் சாட்டியுள்ளார். இதன்படி, இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் ட்ரம்பை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், குறித்த ஊடகவியலாளருக்கு 05 […]

நுவரெலியாவுக்கு கேபிள் கார்?

நுவரெலியாவில் கேபிள் கார் (Cable Car) திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபையின் தலைவர் சம்பத் பிரசன்ன பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனை முன்னிட்டு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், உலகின் புகழ் பெற்ற இசைக் […]

மலையக வீதிகளில் அவதானம்- வீதி அபிவிருத்தி அதிகார சபை

மழையுடனான வானிலையுடன் வீதிகளின் தன்மைகளை புரிந்துகொண்டு வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக அதிவேக வீதிகள் மற்றும் மலையக வீதிகளில் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. அதிவேக வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது, ப்ரேக்(Brake) தொகுதியின் செயற்பாடு குறித்து சாரதிகள் அவதானமாக  இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கற்பாறைகள் சரிந்து வீழ்தல் மற்றும் மண்சரிவு ஏற்படலாம் என்பதால் மலையக வீதிகளில் அவதானத்துடன் வாகங்களை […]

நாட்டில் 2,800 எலிக்காய்ச்சல் நோயாளர்கள்

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் நாட்டில் 2,800 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. காய்ச்சல் அல்லது எலிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சங்க மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போர் திணிக்கப்பட்டது – புடின்

“மேற்குலக நாடுகளால் நமக்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நேற்று மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் ஆண்டுதோறும் வெற்றி அணி வகுப்பு நடைபெறும். நிகழ்வில் ரஷ்ய  ஜனாதிபதி பேசும்போது, “எங்கள் தாய்நாட்டிற்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. தற்போது நடக்கும் போர் திணிக்கப்பட்டது. உக்ரைனில் சண்டையிடும் ராணுவ வீரர்கள் கையில்தான் ரஷ்யாவின் எதிர்காலம் உள்ளது. ராணுவ வீரர்களே ஒட்டுமொத்த நாடும் […]

டெங்கு: மாகாண பிரதம செயலாளர்களுக்கு முன்னெச்சரிக்கை…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு , அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க  அறிவித்துள்ளார். டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பொலிஸாருக்கும் முப்படைக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் 1896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அது 49% ஆகும். மேல் […]

இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் விபரம்

இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் போட்டித் தொடருக்கான அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ODI தொடரின் முதலாவது போட்டி ஜூன் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஜூன் 4 ஆம் திகதியும் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜூன் 7ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. குறித்த 3 போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறும். இந்நிலையில் இப்போட்டித் தொடரில் கலந்து கொள்ளும் ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி […]