“அஸ்வெசும” நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 01 முதல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் “அஸ்வெசும”(ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் “அஸ்வெசும” திட்டத்தின் […]

இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள்

காசா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தொடர் வான்வழி தாக்குதலில் மூன்று பாலஸ்தீன ஜிஹாத் தலைவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன ஜிகாத் அமைப்பின் தீவிரத் தலைவர்களாக இருந்த அல் கன்னம், காலித் அல் பஹ்தினி மற்றும் தாரிக் அஸ் அல் தீன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரின் மையத்தில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகத்தின் மீதும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் உள்ளடங்குவதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் […]

இம்ரான் கான் அதிரடி கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று கைது செய்யப்பட்டார். இராணுவம் குறித்து அவதூறாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு, இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நாடு முழுவதும் வெடித்த கலவரத்தை தொடர்ந்து அவரது கைது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் […]

அதிமுக – CWC கலந்துரையாடல்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர்  கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அதிமுக குழுவினர், நேற்று (08.05.2023) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை கொழும்பில் உள்ள அமைச்சகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். மரியாதை நிமித்தம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை – இந்திய சமூதாய பேரவையின் சார்பில் சிவராமன் மற்றும் காந்தி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். […]

அதிரடி காட்டிய கனடா

சீன தூதுவர் ஒருவரை வெளியேற்ற கனடா முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவின் டொரண்டோவில் உள்ள சீன தூதரகத்தில் பணிபுரிந்த அதிகாரி, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீனா, மனித உரிமைகளை மீறுவதாக கனேடிய எம்பி மைக்க சோங் குற்றம் சாட்டியதுடன், ஹாங்காங்கில் வசிக்கும் தனது உறவினர்களை சீன அதிகாரிகள் துன்புறுத்தியதாக செய்திகள் வெளியாகின. கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, ஜாவோ வெய்யை வெளியேற்றுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில், […]

“அதிமுகவை மீட்டெடுக்க ஒன்றிணைந்துள்ளோம்”

“உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்துகின்ற விதமாக, மீட்டெடுபதற்காக நானும் சகோதரர் ஓபிஎஸ்ஸும் இணைகிறோம்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னை அடையாறில் டிடிவி தினகரனை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் டிடிவி தினகரன்… “எனக்கும், அவருக்கும் சுயநலம் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களின் கையில் அதிமுக என்ற இயக்கம் இருக்க வேண்டும். பண பலத்தை வைத்துக்கொண்டு, ஆணவம், அதிகாரத்தோடு அரக்கர்கள் போல […]

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத் பகுதியில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில் இன்று (09) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், நிலநடுக்கத்தினால் இதுவரை எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய வங்கி சட்டமூலம் மீதான தீர்மானம்

மத்திய வங்கி சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று, (09)  கருத்து வெளியிடும் போதே எதிர்க் கட்சித் தலைவர் இதனை கூறினார்.

அமைச்சரவை ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை

மனித உரிமைகளை மீறும் வன்முறைகளை தடுக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு அமைச்சரவை ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது. மே 9 போராட்டத்தின் ஒரு வருட பூர்த்திக்கான அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

ரஷ்யாவின் மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதல்

உக்ரைன் மீது புதிய தொடர் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. தலைநகர் கீவில் நள்ளிரவுக்கு பின்னர் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும் ட்ரோன் தாக்குதலொன்றில் குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த நகர மேயர் தெரிவித்துள்ளார். நாட்டின் தெற்கே Odesa பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை, தமது களஞ்சியசாலை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக உக்ரைன் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப்போரில் நாசி ஜெர்மனியை தோற்கடித்த வெற்றி விழாவை ரஷ்யா கொண்டாடுவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் […]