ஜனாதிபதி தேர்தல் பற்றி SJB முடிவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைக்க சமகி ஜன பலவேக (SJB) தீர்மானித்துள்ளது. கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில்இ சமகி ஜன பலவேகய தலைமையில் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்கிஇ எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அதிகாரத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளைஇ கட்சி செயற்குழுவின் தீர்மானங்களை எதிர்க்கும் எவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அதிகாரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்திக்கவுளள TNA…
வடக்கு – கிழக்கு நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அதற்கான அழைப்பிதழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஜப்பானுக்கு…
இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஜப்பானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. டெலோன் பீரிஸ் தலைமையிலான இலங்கையின் வளர்ந்து வரும் அணி ஜப்பான் சென்றுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிரான T20 தொடரில் இலங்கை அணி இணைய உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் 5 T20 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
படைவீரர் நினைவு நிகழ்வு
இலங்கையில் முப்பது வருடகால யுத்தத்தின் போது படைவீரர்களுக்கு தேசத்தின் நன்றி தெரிவிக்கும் தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு முப்படைத் தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (08) காலை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. எதிர்வரும் மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை படைவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக தேசிய படைவீரர் […]
லண்டன் விகாரையில் ஜனாதிபதி வழிபாடு
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (07) லண்டனிலுள்ள பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பௌத்த விகாராதிபதி இங்கிலாந்தின் பிரதான சங்கநாயக்கர் பேராசிரியர் வண.போகொட சீலவிமல நாயக்க தேரரிடம் ஆசி பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அவருடன் கலந்துரையாடி நலம் விசாரித்தார். பின்னர் வண.போகொட சீலவிமல நாயக்க தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசிகளை வழங்கினர். […]
இந்திய போர் விமானம் விபத்து: 3 பேர் பலி
இந்திய விமானப்படைக்கு சொந்தமான MIG 21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானில் உள்ள “ஹனுமன்கர்” கிராமத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விழுந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் வீட்டில் இருந்த 3 பேர் பலியாகினர் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
யுபுன் அபேகோனுக்கு அபார வெற்றி
இலங்கை குறுந்தூர சாம்பியனான யுபுன் அபேகோன் 2023 சீசனுக்கான வெற்றிகரமான தொடக்கத்தை பெற்றுள்ளார். இந்த ஆண்டு பங்கேற்ற முதல் பந்தயத்தில் யுபுன் முதலிடம் பிடித்தார். இத்தாலியில் நேற்று (07) நடைபெற்ற “FIRENZE SPRINT FESTIVAL” நிகழ்வில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் யுபுன் அபேகோன் ஐந்தாவது தடத்தில் போட்டியிட்டதுடன் ஆரம்பம் முதலே வெற்றிகரமாக ஓடிய யுபுன் நிகழ்வில் முதலாம் இடத்தைப் பெற்றார்.
நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பங்கேற்புடன் இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை […]
கடனை வாங்கி கடனை அடைப்பது தீர்வாகாது
எந்த தேர்தல் நடந்தாலும் சஜித் அணி வெல்வது உறுதி என பாராளுமனற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்று இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்துள்ளார். கடனை வாங்கி கடனை அடைப்பது தீர்வாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மன்னர் சார்லஸ் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று நடந்த விழாவில் அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸ் (74) முறைப்படி முடிசூடிக் கொண்டார். கடந்த 1952-ம் ஆண்டு 2-ம் எலிசபெத் தனது 26-வது வயதில் இங்கிலாந்து ராணியானார். அவருக்கு கடந்த 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், அவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது மகனும் இளவரசருமான 3-ம் சார்லஸ் மன்னரானார். அவருக்கு 2023-ம் ஆண்டு மே 6-ம் […]