கேரளா படகு விபத்து: பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு
கேரள மாநிலம் மலப்புரத்தில் 40 பேருடன் சென்ற சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்ததில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகள் அடங்குவர். 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மலப்புரத்தின் தானூர் பகுதியில் நேற்று (ஞாயிறு) இந்த விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. சுற்றுலா படகில் அதிகம் பேர் பயணம் செய்தது படகு கவிழ்ந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு அடுக்கு கொண்ட அந்தப் படகின் கீழ் பகுதியில் இருந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. […]
இளைஞர்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும்?
ஐக்கிய இராச்சிய சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட சாரணர்கள் மற்றும் பெண் சாரணர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) லண்டனில் இடம்பெற்றது. முடிசூட்டு விழாவிற்கு இலங்கை சாரணர் இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஷலினி பெரேரா, அரிதா பண்டார, அசேல பண்டார மற்றும் சரித் பெர்னாண்டோ ஆகிய சாரணர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகளாவிய […]
படகு விபத்தில் 21 பேர் பலி
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. படகு மூழ்கும் போது அதில் சுமார் 50 பேர் இருந்ததாகவும், ஆனால் அதில் 25 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் அங்குள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெங்கு – கட்டுப்படுத்த நிபுணர் குழு
கம்பஹா மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக விசேட குழுவொன்றை அனுப்ப சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நிலைமையை கட்டுப்படுத்த உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க விசேட குழுவொன்றை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, நாட்டில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தலைமையில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக […]
திராவிடவியல் கோட்பாட்டை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்போம்
திராவிடவியல் கோட்பாட்டை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்போம் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் பல்லாவரத்தில் நேற்று நடைபெற்றது. இதன் போதே ஸ்டாலின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தோனி இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளிடம் கோரிக்கை…
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரன டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டிய வீரர் அல்ல என சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, “நான் தனிப்பட்ட முறையில் அவர் சிவப்பு-பந்து போட்டிகளில் விளையாடக்கூடாது என்று நினைக்கிறேன். அவர் மிகவும் வித்தியாசமான நபர். முக்கியமான தருணங்களில் அவரை எப்போதும் பயன்படுத்த முடியும். ஆனால் அவர் அனைத்து ஐசிசி போட்டிகளுக்கும் தகுதியானவர் […]
உலக வங்கி அதிர்ச்சி தகவல்
இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் ஈராண்டுகளுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வறுமை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது. நாட்டின் வறுமை நிலை 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 13.1 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மேலும் 2.5 மில்லியன் பேர் வறுமை […]
புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டம்…
புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானத்தில் இரண்டாவது நாளாக நேற்று (06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இக்கட்டான காலத்தினை நிறைவு செய்து, நான்கு வருடங்களின் பின்னர் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு மக்களுக்கு இம்முறை கிடைத்துள்ளதுடன், மக்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும். சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கம் மற்றும் சிங்கப்பூரின் வில்லிங் ஹார்ட்ஸ் (Wiling Hearts) அறக்கட்டளை ஆகியவற்றின் […]
“நான் ரொனால்டோவின் ரசிகன்” பதிரன
ரொனால்டோவின் தீவிர ரசிகன் என CSKவின் நட்சத்திர பந்து வீச்சாளராக உருவாகி வரும் மதிஷா பதிரன தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று பிற்பகலில் நடைபெற்ற சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை […]
தொழில் சட்டம் உருவாக உறுதுணையாக இருப்போம் – பாரத்
புதிய தொழில் சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கான அறிவு திறன் பொது மன்றத்தின் முதலாவது அமர்வு தொழில் அமைச்சில் இடம்பெற்றது. தற்போதுள்ள தொழிலாளர் சட்டத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை அடையாளம் காணவும், டிஜிட்டல் தொழிலாளர் உலகத்திற்கு ஏற்றவகையில் தொழில் சட்ட அமைப்பைத் தயாரிப்பதற்காகவும் இவ் அமர்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாநயக்கார தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக காங்கிரஸின் உப தலைவரும் சர்வதேச […]