ஜப்பானில் சாதிக்கும் இலங்கை மெய்வல்லுநர்கள்

இலங்கை மெய்வல்லுநரான அருன தர்ஷன 400 மீற்றர் ஓட்டத்தில் தனது சிறந்த காலப்பெறுதியை பதிவுசெய்துள்ளார். ஜப்பானில் நடைபெறும் மிச்சிதாகா ஞாபகார்த்த சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் அவர் இந்த ஆற்றலை வௌிப்படுத்தியுள்ளார். ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை அருன தர்ஷன 45 : 49 செக்கன்களில் பூர்த்திசெய்தார். இது இந்தப் போட்டிப் பிரிவில் அவரது சிறந்த காலப்பெறுதியாகும். சுகத் திலகரத்ன, ரொஹான் பிரதீப் குமார, பிரசன்ன அமரசேகர ஆகியோருக்கு பின்னர் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் இலங்கை […]

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் வௌியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவு காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட, எல்பிட்டிய, யக்கலமுல்ல பிரதேச செயலக பிரிவுகள் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, றம்புக்கனை, தெரணியகலை, மாவனெல்லை, கேகாலை, கலிகமுவ பிரதேச செயலக பிரிவுகள் குருணாகல் மாவட்டத்தின் ரிதிகம, மாவத்தகம, அலவ்வ, பொல்கஹவெல பிரதேச […]

திமுக ஆட்சி

“திமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் மட்டுமின்றி, ஓட்டுப் போடாவதர்களுக்கும் சேர்த்துதான் இந்த ஆட்சி” என முதல்வர் M.K ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு ‘நேற்று முதல்வர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார்.

மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 52 பேர் கைது

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிரான குழு ஒன்றின் தலைவர் உள்ளிட்ட குழுவை லண்டன் மாநகர பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நேற்று (06) நடைபெற்றதுடன், மன்னராட்சிக்கு எதிரான போராட்டக்காரர்கள் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றாம் சார்லஸ் மன்னன் தங்களுடைய அரசன் அல்ல என்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீதியை […]

தொற்றுநோய் பரவுதல் அதிகரிப்பு

 மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மழையுடன் ஈக்கள் போன்ற விலங்குகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளமையே இந்த நோய்களுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறு குழந்தைகளை இவ்வாறான நோய்களில் இருந்து பாதுகாக்க சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம் என டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். இதேவேளை, தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் தொற்றுநோய்களின் பரவலும் அதிகரித்து வருவதாக சுகாதார […]

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 09 பேர் உயிரிழந்தனர். இது தவிர மேலும் சுமார் 07 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் சிறு குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளிலும் வெசாக்…

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களும் வெசாக் பண்டிகையை கொண்டாடினர். நியூசிலாந்தின் ஒக்லாந்தில், ஸ்ரீலங்காராமரின் பட்டாசாரக் கதையின் அடிப்படையில் ஒரு கண்கவர் தோரணம் கட்டி வெசாக் கொண்டாடப்பட்டது. மேலும் ஜப்பானில் உள்ள தோச்சிகி தியான மையத்தில், வெசாக் கூடைகள், மத நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி பாடல்கள் பாடி வெசாக் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதேவேளை, அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள மஹாமேவுனா தோட்டப் பகுதியிலும் அமைக்கப்பட்டு பக்தியாக வெசாக் கொண்டாடபபட்டது.

ஜனாதிபதி அதிரடி தீர்மானம்?

சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியொருவர் பதவி விலகிய பின்னர் ஆளுநர்கள் பதவி விலகுவது சம்பிரதாயபூர்வமானது என ஜனாதிபதி செயலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது பிரதமர் பதவி விலகிய பின்னர் அமைச்சரவை கலைவதற்கு இணையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள போதிலும் இந்த ஆளுநர்கள் பதவி விலகவில்லை என அவர் […]

முடிசூடினார் 3ம் சார்லஸ் மன்னர்

பிரித்தானியாவின் புதிய பேரரசராக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் இன்று(06) முடிசூட்டப்பட்டார். கடந்த செப்டம்பரில்  இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையடுத்து இளவரசர் மூன்றாம் சார்ள்ஸ், மன்னர் அரியணைக்கு உரித்துடையவரானார். இதன் முடிசூட்டு விழா தலைநகர் லண்டனில் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று(06) கோலாகலமாக நடைபெற்றது. பிரித்தானியாவில் 70 ஆண்டுகள் கழித்து முடிசூட்டு விழாவொன்று நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும். பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயம் வரை அரங்கேறிய கண்கவர் வாகனப் பேரணியுடன் முடிசூட்டு விழா ஆரம்பமானது. இம்முறை மன்னர் சார்ள்ஸும் […]

அவுஸ்திரேலியாவின் நாணயம் வியட்நாமை நிலைகுலைய வைத்தது

தெற்கு வியட்நாமின் மஞ்சள் நிறக் கொடி உருவம் கொண்ட நாணயத்தை அவுஸ்திரேலியா வெளியிட்டதற்கு வியட்நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருதரப்பு உறவுகளில் சாதகமான போக்குகளை நிராகரிப்பதாக கூறியுள்ள வியட்நாம் நாணயத்தின் புழக்கத்தை நிறுத்துமாறு அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. வியட்நாமில் இருந்து தனது படைகள் வாபஸ் பெறப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவுஸ்திரேலியா இந்த வரையறுக்கப்பட்ட இரண்டு டொலர் நாணயத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வியட்நாமின் வெளிவிவகார பிரதி செய்தித் தொடர்பாளர், மூன்று கோடுகள் […]