பாகிஸ்தானில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆசிரியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 ஆசிரியர்கள் மற்றும் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பாடசாலை முடிந்து ஆசிரியர்கள் பரீட்சை தாள்களை தயாரித்துக் கொண்டிருந்த நிலையில் பாடசாலைக்குள் நுழைந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன, மதக் குழப்பம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பல துப்பாக்கி சுடும் வீரர்கள் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் ஓய்வறையில் […]
அமைதியைவிட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறொன்றும் இல்லை
” அமைதியைவிட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறொன்றும் இல்லை” என புத்தபெருமான் போதித்துள்ளார். எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்து, நாட்டை மீட்கவும், இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்ககூடிய தீர்வைக்கண்டு இலங்கை மண்ணில் நிலையான அமைதி மலரவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வெசாக் தின வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” போதிமாதவன் புத்தபெருமானின் பிறப்பு, இறப்பு, […]
விசேட போக்குவரத்து சேவை
நாடளாவிய ரீதியில் அனைத்து வெசாக் பகுதிகள் மற்றும் விசேட புனித ஸ்தலங்களை உள்ளடக்கும் வகையில் இன்று முதல் விசேட பஸ் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. வெசாக் வாரத்தில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த போக்குவரத்து சேவை இயங்கும் என அதன் தலைவர் லலித் டி சில்வா தெரிவித்தார். வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில சிறப்பு ரயில்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துணைப் பொது […]
வெசாக்: 7000 தன்சல்கள்…
வெசாக் பண்டிகைக்காக சுமார் 7,000 அன்னதான ( தன்சல்) நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். பதிவு செய்யப்படாத அன்னதான நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 3,000 PHI அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் – IMF
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தொடரின் போது, ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர், கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் இது தொடர்பில் தெளிவுபடுத்தினார். இலங்கையில் அதிகரித்திருந்த பணவீக்கம் தற்போது குறைவடைந்துள்ள போதும், நிதிக் கொள்கைகள் ஊடாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார். கடனை […]
டெங்குவைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்
‘டெங்கு 3 வைரஸ் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாகவும், டெங்குவைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர கூறுகிறார். இதேவேளை, நோய் எதிர்ப்பு சக்தியை விருத்தி செய்யும் வகையில் செயற்படுவது டெங்கு தொற்றைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும் என அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. டெங்கு ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்கு என்ற நான்கு குழுக்களில், ‘டெங்கு 3’ […]
இன்று வெசாக் பௌர்ணமி தினம்…
கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம் இன்று. புத்தர், சுமேதாவின் துறவி நிலையில், வெசாக் போஹா நாளில் தீபங்கர புத்தரிடம் இருந்து உறுதியான கருத்தைப் பெற்று, அவர் ஞானமடைந்த எட்டாம் ஆண்டில், மன்னன் மணியக்கிக நாவின் அழைப்பின் பேரில் களனிக்கு விஜயம் செய்தார் என்பது மற்றொரு சிறப்பு. வெசாக் பௌர்ணமி தினத்தை இலங்கையர்கள் மற்றும் முழு பௌத்த மக்களும் பல சமய முக்கியத்துவங்களுடன் கொண்டாடுகின்றனர்.
சவாலை முறியடிக்க ஒற்றுமை, நம்பிக்கை அவசியம்
மூவித ரத்தினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் பெர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்பதோடு இது புனிதத்துவமான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இந்த நாள் கௌதம புத்தரின் பிறப்பு, புத்தத்துவம் மற்றும் சம்புத்த பரிநிர்வாணத்தின் புனித நிகழ்வை நினைவுபடுத்துவதோடு மனிதநேயம் மற்றும் கருணையுடன் கூடிய அறப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் கௌதம புத்தரின் போதனைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாகவும் இருக்கிறது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வரும் இந்த சவாலான நேரத்தில், காலத்தால் அழியாத […]
ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகிறது. ருவாண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 136 பேர் பலியாகியுள்ளனர். மலை பிரதேசங்கள் மழையினால் கடும் நிலச்சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக ருவாண்டா அரசு தெரிவித்துள்ளது. ருவாண்டாவில் மழையினால் விவசாய நிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இதற்கிடையில், வரும் நாட்களில் […]
எமிரேட்ஸ் உடன் ஒப்பந்தம்
சுற்றுலாப் பயணிகளுக்கான இடமாக இலங்கையை மேம்படுத்துவதற்காக இலங்கை சுற்றுலா சபைக்கும் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது.இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு சாதகமான ஆதரவை வழங்கும் என நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.